துளி தீ நீயாவாய் 13 (7)

தன் பெற்றோர் இறப்பை எளிதாக பேசிக் கடக்கும் அவள் இப்படியெல்லாம் சிந்திக்கக் கூட செய்வாளாமா?

எழுந்து அமர்ந்த நிலையில் வெடித்துக் கொண்டிருந்தவளை ஒற்றைக்கையால் தன்னோடு சேர்த்தணைத்து “ஹேய் பவி, பவிமா அப்படில்லாம் எதுவும் இல்லமா, நம்ம வீடே உன்னாலதான பவிமா” என கெஞ்சலாய் அவன் ஆரம்பிக்க,

அவளோ அதை சட்டை செய்தது போலவே இல்லை. இன்னுமாய் அழுகையில் கரைந்தாள். “நான் நல்ல அம்மாவா இருக்க மாட்டேன் போல, அதான் கடவுள் எனக்கு குழந்தையும் வேண்டாம்னு நினச்சுட்டார் போல, நான் ரொம்ப ரொம்ப மோசம் போல, சபிக்கப்பட்ட ஜென்மம், அனாதையா இருக்கன்னே பிறந்திருக்கேன், ஐயோ யாருமே இல்லாம இருக்க எனக்கு முடியாதே! நீ எனக்கு இல்லன்னா நான் எப்படி இருப்பேன் ப்ரவி?! ஐயோ பாரு நான் செம்ம செல்ஃபிஷ், போ, போய் நீ வேற மேரேஜ் செய்துக்கோ, கடவுளே அதுக்கு முன்ன என்னை கொன்னாவது போட்டுடேன்” என உச்ச வேதனையோடு புலம்பி தவித்தாள்.

இதைக் கேட்டுக் கொண்டு இவன் எப்படி கெஞ்சிக் கொண்டிருக்க? “லூசு” எனும் போது அதட்டிக் கொண்டிருந்தான். “அறைஞ்சேன்னா தெரியும்” எனும் போது அது உறுமல்.

குளமாகி ஊற்றோட நின்றிருந்த கண்களை இப்போதுதான் இவன் புறம் திருப்பினாள் அவள்.

“இங்க பார், உன்னத் தவிர எனக்கு லைஃப்ல எதுவுமே முக்கியம் இல்ல, உன்னல்லாம் விட்டுட்டு ஒரு நிமிஷம் இருந்துக்க மாட்டேன் நான், அறிவுன்னு எதாச்சும் இருக்கா உனக்கு, இல்ல சுத்தமா இல்லையா? வாய்க்கு வந்த மாதிரில்லாம் உளறிட்டு இருக்க? உனக்கு பிசிகலி ஏதோ இஷ்யூ இருக்குதுன்னு தெரியுது, அதனால இது நமக்குள்ள முடியாதுன்னே போய்ட்டாலும், நாம ஒரு குழந்தைய அடாப்ட் செய்துட்டு சந்தோஷமா லைஃப லீட் பண்ணுவோம், இதுக்கு எதுக்கு நீ இப்படிலாம் பைத்தியக்காரத்தனமா கற்பனை செய்ற?” என மீதி குமுறலையும் அதட்டலாகவே அவன் சொல்ல,

ஒரு கணம் இதில் அமர்ந்தது அவளது அழுகை. சற்றாவது சமாதானப் பட்டுவிட்டாள் போலும் என இவன் இப்போது நினைக்க,

“எனக்கு பிசிகலி இஷ்யூ இருக்குதுதானே? உனக்கே கன்ஃபார்மா தெரியுது என்ன ப்ரவி? அப்படின்னா என்னால வலிய தாங்க முடியுறப்ப சரியாகிடும்னு நினைக்க ஒன்னுமே இல்லதான?” என ஏங்க வெடிக்க வருகிறது அவளது கேள்வி.

இவன் எதைப் பேசிக் கொண்டிருக்கிறான், அவள் எதை கண்டு கொண்டிருக்கிறாள். இவளிடம் என்னவென பேசவென்றே தெரியாமல் விக்கித்துப் போனான் கணவன். எதைச் சொன்னாலும் அதன் விபரீத பக்கத்தை கற்பனை செய்யும் நிலையில் இருப்பவளிடம் என்ன பேசுவான் இவன்?!

“நான் இன்ஃபெர்டைலா? இல்ல நான் பொண்ணே இல்லையா ப்ரவி?” என்றெல்லாம் அவளது அடுத்த கேள்விகள் வந்த விதத்தில் இறந்து பட்ட பிணம் போன்ற அவள் முகபாவத்தில், அடுத்து அவள் எதையும் சொல்லிவிடவே முடியாத வண்ணம் முரட்டுத் தனமாய் தன் மார்புக்குள் அழுந்த புதைத்திருந்தான் அவன்.

உண்மையில் மிரண்டு போயிருந்தான் அவன். இவள் நினைவுகள் போகும் திசைக்கும் வேகத்துக்கும் வீச்சுக்கும் அவளை என்னமாய் அது குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது? கேட்கின்ற இவனுக்கே இப்படி இருக்கிறதே, சிந்திக்கும் அவளுக்கு எப்படி இருக்கும்?

அதே நேரம் இவனது இந்த மௌனம் கூட அவளுக்கு, அவளது வினாக்களுக்கு ஆம் என்ற பதிலைத் தரும் என உணர்ந்தவன் “சரியான முட்ட மிட்டாய கல்யாணம் செய்துருக்கேன்னு மட்டும் தெரியுது” என ஒரு இலகுத் தொனியில் விடை சொல்லி, அவளை இலகுவாக்க முயன்றான்.

“மாசம் மாசம் கடைசி வாரம் வயிறு வலின்னு மூஞ்ச தூக்கிட்டு சுத்தினதெல்லாம் மறந்து போய் கேட்குற கேள்வியப் பாரு” அவளது நான் பெண்ணே இல்லையா என்ற கேள்விக்கு அவள் ஏற்கும் வகையில் எதையாவது சொல்லியே ஆக வேண்டும் என்ற அசுரத் தேடலில் அவசரமாய் அவனுக்கு கிடைத்த பதில்தான் இது.

இதில் அவன் முரட்டு அணைப்பை மீறி தலையை நிமிர்த்திவிட முனைந்தாள் அவள். இதையெல்லாமா கூட கவனிச்ச நீ? என கேட்க இருக்கிறாளாக இருக்கும். ஆனாலும் கொந்தளிக்கவில்லை அவள்.

சட்டென அப்போதுதான் புரிபடுகிறது அவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே! அவளுக்குத் தேவை மெடிகல் ஃபேக்ட்ஸ். தன் மொபைலை கை நீட்டி எடுத்தவன், அதில் எதோ ஒரு எண்ணை அழுத்தி, “மெர்லின் அக்கா தெரியும்ல, அவங்களுக்கு கால் பண்ணியிருக்கேன், என்ன விஷயம்னு நீ அவங்கட்ட பேசு” என மொபைலை இவளிடம் நீட்டினான்.

மெர்லின் ஒரு கைனகாலஜிஸ்ட். ப்ரவி நண்பன் ஒருவனின் அக்கா. அந்த வகையில் இவளுக்கும் சற்று அறிமுகம் உண்டு.

மெர்லின் அங்கு அழைப்பை ஏற்க, இவளை தன்னோடு சாய்த்து பிடித்தபடி அமர்ந்திருந்த ப்ரவி இன்னுமே இவளைவிட்டு விலகாதிருக்க, அவன் முகத்தை ஒரு கணம் பார்த்துக் கொண்டவள்,  அடுத்து மெர்லினிடம் விஷயத்தை சொல்ல முடிந்த வகையில் சொன்னாள்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டிருந்த மருத்துவர் “இங்க பாருங்க பவித்ரா, உங்களுக்குன்னு இல்ல எல்லா பொண்ணுங்களுக்கும் அதுவும் முதல் டைம்னு மட்டும் இல்ல முதல்ல கொஞ்ச நாளாவது இந்த வலி இருக்கும். அது நேச்சுரல். .

ஏதோ உணர்ச்சி வேகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இது நடந்து போச்சுன்னு மீடியால ப்ரொஜெக்ட் செய்ற எதுவுமே யதார்த்தம் கிடையாது. அத வச்சுகிட்டு நமக்கு ஏன் இப்படில்லாம் ஈசியா இல்ல, அப்ப நம்ம மனசு சரியில்லையா? இல்ல பிசிகலி நாம அன்ஃபிட்டான்னு எல்லாம் கற்பனை செய்து பயப்படக் கூடாது.

அடுத்த பக்கம்