துளி தீ நீயாவாய் 13 (5)

உண்மைதான்.  இவள் குரலை கேட்கவும் கால கட் செய்துட்டு போயிருக்கலாம்தானே தயாப்பா? மாரியக்காட்ட பேசச் சொல்லிட்டுதானே போனார். இதைத்தான் கருண் குறிப்பிடுவதும். ஆனாலும் இதெல்லாம் என்ன? ப்ரவி வகையில் இந்த வீட்டிற்கு நீ உறவாயிருக்கலாம், ஆனால் எனக்கும் உனக்கும் இடையில் இனி ஒன்றுமில்லை என்கிறாரா தயாப்பா? அமிலக் கசிவுடன் வாதிக்கிறது இவள் உள்ளம்.

‘எது எப்படியோ ப்ரவியிடம் போனால் இதப்பட்டு போகும் இந்த காயமும்’ சற்று முந்தைய அனுபவம் இப்படியாய் தன்னவன் அருகாமையை நாடவும் வைக்கிறது இவளை.

இதே எண்ணமுடன் அவள் தன்னவனை தன்னிச்சையாய் திரும்பிப் பார்க்க, ஒவ்வொரு அடுக்காய் கனிந்து போனது பெண்ணுள்ளம் தன்னவன்பால். எப்படி இவனால் எல்லோருக்கும் போதுமானவனாய் இருக்க முடிகின்றது என்கிறது இவளது நெஞ்சம்.

ஏனெனில் அதே நேரம் ப்ரவியோ “அறிவுக் கொழுந்து, தினமும் கொஞ்சமாச்சும் பிசிகல் வர்கவட் வச்சுக்கோ, எப்ப பார்த்தாலும் லேப்டாப்லயே இருக்காதன்னு சொன்னா கேட்கியா? உடம்பு வலின்னு மாத்தி மாத்தி புலம்பிட்டு இருக்க” என்றபடி இப்போது தன் தம்பியின் கழுத்து தோள்பட்டை கைகள் கால்கள் என முறையாய் அழுத்தி பிடித்துவிட்டுக் கொண்டிருந்தான்.

இதுதான் தங்கள் படுக்கையறைக்குள் சென்று சேரவும் பவி ப்ரவிக்கு இதே வகை உதவியைச் செய்ய முனையக் காரணமாகவும் அமைந்தது.

இரவு இவளோடு தங்கள் அறைக்குள் நுழைந்த ப்ரவி, உள்ளே போனதும் தன் தலையணையில் இரண்டு கைகளையும் மடித்து வைத்து, அதிலேயே முகம் புதைத்து குப்புறப் படுத்துக் கொண்டவன்,  நீட்டி இருந்த தன் கால்களின் பாதங்களை மட்டும் ஒன்று மாற்றி ஒன்றாய் அரைவட்டமாய் அசைத்துப் பார்க்க,

அப்போதுதான் கதவைத் தாழிட்டுவிட்டு திரும்பிய பவிக்கு இந்தக் காட்சி அவனுக்கும் உடல் வலி இருக்கிறது என்பதை தெரியப் படுத்த,

ப்ரவியின் மீது ஒருவாறு கனிந்து போய் கிடக்கும் அவள் மன நிலைக்கு, கருணுக்கு ப்ரவி செய்த அதே மசாஜை இவனுக்குச் செய்ய முயன்றாள்.

படுக்கையில் அவன் அருகில் சென்று அமர்ந்தவள், அவன் கழுத்து வளைவுகளை தன் இரு கைகளாலும் பிடித்துவிடத் துவங்கினாள். அவனுக்கு இதமாய் இருக்கும் என முழுவதுமாய் நம்பினாள்.

ஆனால் அவனுக்கோ அது அப்படி இல்லை போலும். இவள் கைபட்டதும் சிலிர்ப்பை அம்பாக்கி எய்து கொண்டு அவன் தேகம் வில்லென விறைக்க, முகம் குப்புற படுத்திருந்தவன் அல்லவா? அதனால் அவள் கை அவன் மீது படும் வரைக்குமே இதை எதிர்பார்த்திராத ப்ரவி “இல்ல பவி, இன்னைக்கு இது வேண்டாம்” என்றபடி இவள் முகம் நோக்கி சட்டென திரும்பிப் படுக்க,

அதுதான் அவன் எதைச் சொன்னாலும் எதிர்த்து வாதிடச் சொல்லும் ஒரு வேதியியல் வினை இவளுக்குள் இருக்கிறதே இப்போதெல்லாம், அது இவளை ஏன்? என எகிறலாய் கேட்க ஏவிவிட,

இவள் “ஏன்?” எனக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அதே நேரம் இங்கு படுத்திருந்தவன் திரும்பினானே, அதில் அவன் மீதிருந்த இவள் கைகள் இரண்டும் தடுமாறிப் போக, சட்டென சறுக்கி அவன் மார்பிலேயே சென்று விழுந்தாள் இவள்.

இப்போதுதான் அவன் சொன்ன பவியும், இன்னைக்கு இது வேண்டாமும் ஒழுங்காக புரிந்து வைக்கிறது இவளுக்கு.

அதாவது மண மஞ்ச வகை இணைவை நாடும் அவன் உள்ளான வாஞ்சைகளை, இன்றைய அவன் உடல் மற்றும் மனநிலையில் இவளது இந்த அருகாமை மற்றும் தொடுகை வெகுவாக அவஸ்தையுறுத்தும் என்கிறான்.

இதில் எதோ ஒன்று அவன் விழி பார்க்க இவளை தடுக்க, முயன்று இவள் எழுந்து கொள்ள முயல,

அவனுக்கு அத்தனை விருப்பம் எனும் போது ஏன் வேண்டாம் என்கிறான்? இவளுக்காகவா? என்ற வகை சிந்தனைச் சாரலாய், மழையாய் இவள் எனும் நதி பிரவாகங்களில்.

அவன்பால் கனிந்திருந்த அவளது சுயமோ, அவன் அருகாமை நாடும் நேரம் அருவருக்குமோ என இவளுக்கு இருந்த பயம் சற்று முன் மறைந்து போனதையும், எப்படியும் இதுதானே இவர்களுக்கான உறவும் உரிமையும், என்றாகிலும் நடக்கப் போவதுதானே என்ற ஒன்றையும் நினைவுபடுத்த, இவை இரண்டும் பாவை நதியைப் பாதிக்கும் மற்றும் பாதுகாக்கும் இரு கரைகளாய் இவள் அகப்புறங்களில் உருவெடுக்க,

அதே நேரம் “இல்ல இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும், இப்பதான் நீ என்ட்ட ஒழுங்கா பேசவே ஆரம்பிச்சிருக்க” என இவளுக்கு விடை சொல்லிக் கொண்டிருந்த இவளவனின் கரங்களோ, தன் மார்மீது விழுந்தவளை விலகவிடா வண்ணம் கைகளில் பொதிந்து வைத்துக் கொள்ள எழுந்து, பின் அவனுக்கு அடி பணிந்து அதைச் செய்யாமல் அடங்கி இறங்க,

இப்போதும் ஒரு “ஏன்?” னை உதிர்த்தாள்தான் இவள். அதில் வேண்டுமளவு வியாப்பித்திருந்த விஷயம் சந்தன வாசமோடு சம்மத வர்ணமே! வெள்ளக்காடாய் விழுந்து பரவியதோ பெண் வகை குறும்பும், அதை வென்று அடக்கிடும் வெட்க ரூபமுமே.

இப்போதோ “இல்ல இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும், இப்பதான் நீ என்ட்ட ஒழுங்கா பேசவே ஆரம்பிச்சிருக்க” என்பதை அழுந்த அழுந்த இன்னொரு வர்ணத்தில் விடையாகச் சொன்னான் அவன். இருந்தாலும் அவளை தன்னோடு சேர்த்து பொதிந்து வைத்தும் கொண்டான்.

உனக்கு விருப்பமிருக்க, உறவும் உரிமையும் நமக்கிருக்க, என்னிடமும் எதிர்பதமாய் எதுவுமில்லாதிருக்க, ஏன் வேண்டாம் என்கிறாய் என்பதுதானே இவளின் இரண்டாவது ஏனின் பொருள்.

இதே நிலையிலும் வகையிலும் இன்னும் சற்று நேரம் இன்றா? பிறகா? என இவர்களது வாத விவாதம் தொடர,

சற்றும் திட்டமில்லாத கூடலை நோக்கி நகர்ந்தது அவர்களது பொழுது. ஆம் பவியின் பாஷையில் சொல்வதானால் அவர்களது பரிபூரண அருகாமைப் படலம் unplannedடாய் ஆரம்பமாகியது.

அடுத்த பக்கம்