துளி தீ நீயாவாய் 13 (10)

இவன் மனம் இதைப் பற்றி திட்டமிடத் தொடங்க, அவன் கைக்குள் இருந்த மனையாளோ “பொதுவா டாக்டர்ஸ்லாம் பேஷண்டுக்கு பெருசா ஹெல்த் இஷ்யூ எதுவும் இருந்தா, அவங்கட்ட உங்களுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லன்னு சொல்லிட்டு, அவங்க வீட்ல உள்ளவங்கட்டதான் உண்மையிலேயே எவ்வளவு தூரம் நிலமை மோசமா இருக்குன்னு சொல்வாங்கல்ல, அப்படி எதாச்சும் உன்ட்ட டாக்டர் மெர்லின் சொல்லி இருப்பாங்களோன்னுதான் எனக்கு தூக்கம் போய்ட்டு, இப்படி பயம் வரதுக்கும் தயாப்பா பேசினதுதான் காரணம்னு சொல்வியா?” என அடுத்த வாதத்தை துவக்கி இருந்தாள்.

“நினச்சேன் என்னடா இப்படில்லாம் கேட்காம, நம்ம முட்ட மிட்டாய் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு ஹனிமூன்னு சொன்னத ஏத்துகிட்டு ஈசியா தூங்கிட்டேன்னு” என ப்ரவி இப்போது இந்தப் ப்ரச்சனைக்கு வந்துவிட்டான்.

“இந்த ப்ரச்சனைக்கு இதப் பத்தி யோசிக்கிறது நார்மல், ஆனா இதுக்கும் போய் நான் நல்ல மக இல்ல, நல்ல அம்மாவும் இருக்கமாட்டேன்னு ஆரம்பிச்ச பாரு அதுதான் நான் சொன்ன low self worth. அது அண்ணா பேசினத அப்படியே தலைல வச்சுகிட்டு நீ சுத்றல, அதால வந்தது” என்றவன்,

ஈரம் பாய்ந்த ரோஜா போல் அருகில் கிடந்தவள் இதழ்களில் அவன் விரலால் இடம் தேடத் துவங்க, விஷயத்தை தள்ளிப்போடப் போட பவி இன்னுமே குழம்பிப் போவாள் எனத் தோன்றிவிட்டதால், unplannedடாய் ஆரம்பித்தது அடுத்தும் ஒரு பரிபூரண அருகாமைப் படலம்.அடுத்த கூடல் முயற்சியில் கழிந்து போனது அந்தக் காலைப் பொழுது.

ன்று காலை வேணி வழக்கமான தன் நேரத்தில் எழுந்து தயாராகி தன் அறையைவிட்டு வெளியே வந்தால் வழக்கமாக இந்நேரம் பர பரவென கிளம்பிக் கொண்டிருக்கும் SP சார் சோஃபாவில் அமர்ந்து நிதானமாக செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார்.

இவள் வருகையை உணரவும் செய்தித்தாளில் இருந்து முகத்தை வெளியே எடுக்காமலே “குட்மார்னிங் வேணி” என இவளுக்கு ஒரு வரவேற்பு கிடைக்கிறது. காலையில் சாரைப் பார்த்தால் இது நடக்கும்தான். ஆனாலும் இவளுக்கு இது வழக்கமான ஒன்று என இன்னும் பழகி இருக்கவில்லை. ஆக அதாகவே உதறுகிறது. “கு…குட்மார்னிங் சார்”

இவள் கண்கள் அனிச்சையாய் தனது மறைவிடம் மற்றும் புகலிடமான பவியைத் தேட “உன் மேம் தூங்கிட்டு இருக்கா, அவளா வர்ற வரை எழுப்ப வேண்டாம்” என அடுத்த தகவல் தரப்படுகிறது.

“அவங்களுக்கு உடம்புக்கு?” என இவள் திக்கி திக்கி விசாரிக்க,

“சே அப்படில்லாம் எதுவும் இல்லமா, தூங்கிட்டு இருக்கா அவ்வளவுதான்” என வருகிறது பதில்.

இப்ப இவ என்ன செய்ய? கொஞ்சம் திருக்க திருக்க விழித்துவிட்டாள் போலும்.

“இந்த டைம் காஃபி சாப்டுவதான? போய் காஃபி போட்டு சாப்டு, அதுக்குள்ள சமைக்க ஆள் வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்” என அதற்கும் SPசாரிடம் இருந்து பதில். கூடவே “நீ பில்டர் காஃபி நல்லா போடுவன்னு பவி சொல்லுவா, கூட ஒரு கப் சேர்ந்து கலக்க முடியுமா ப்ளீஸ்?” என்றும் ஒரு கேள்வி.

இதில் வெகுவாக இலகுவாகிவிட்டது இவளுக்கு, ஏன் குதுகலமும்தான். இவளைப் பற்றி பவியக்கா இதெல்லாம் கூட சொல்லி வைப்பாங்களா என்றும் இவட்ட சார் காஃபி கேட்டுட்டாரே என்றும்.

“கண்டிப்பா சார், தேங்க்ஸ் சார், இப்பவே சார்” எனும் போது ஒரு வகை சந்தோஷப் பதற்றம் இவளிடம்.

இப்போது ப்ரவி பேப்பரை விட்டு தலையை வெளியே நீட்டிப் பார்த்தான். சின்ன புன்னகை அவனிடம். “மூனு கப்பா போடு, வீட்டுக்கு ஒருத்தங்க வர்றாங்க” என்றான் அவன்.

படு வேகமாய் தலையை ஆட்டிவிட்டு பாய்ந்தடித்து சமையலறைக்கு பறந்தாள் இவள்.

‘அப்பன்னா முதல்ல காஃபி கேட்டாரே சார் அது யாருக்கு? அவங்களுக்கா? இல்ல கெஸ்ட்டுக்கா?  இவ சாருக்குனு நினச்சு சந்தோஷப்படவும் சரின்னு அவருக்கும் கேட்டுட்டாரோ?’ என ஒன்று முதலில் ஓட,

பவி வீட்டில் இன்ஸ்டென்ட் காஃபிதான் எப்போதும். ஏன் இவள் வீட்டிலுமே கூட அப்படித்தான். ஆனால் இவள்தான் இடையில் இதை ஒரு ஆசையில் பழகி, இங்கு பவிக்கும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறாள். அதை நினைத்தவள்,

இவள் ஃபில்டர் காஃபி போடுறத வரைக்கும் சார் தெரிஞ்சு வச்சு இருக்கார், அதாவது பால்கனி சொல்றது போல இவள மானிடர் பண்றார்னு அர்த்தமா? என இன்னொன்றும் ஓடுகிறது இவளுக்குள். ஒரு கணம் வருத்தம் வந்து விழுந்தாலும், பால்கனி சொன்ன வகையில் சிந்திக்கும் போது அது சட்டென மறைந்தும் போகிறது.

கையோ உலகத்திலேயே பெஸ்ட் ஃபில்டர் காஃபி உருவாக உழைப்பது போல் கவன கவனமாக டிகாஷன் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

என்னமோ இவள் பார்த்துக் கொண்டே நின்றால்தான் ஃபில்டரில் டிக்காஷனே இறங்கும் என்பது போல் பில்டரையே இவள் முறைத்துக் கொண்டிருக்க, அங்கு வாசலில் ஏதோ ஜீப் வந்து நிற்கும் ஒலி.

அடுத்து இரண்டு காஃபியை கலந்து எடுத்துக் கொண்டு இவள் போகும் போது வந்திருந்த ஒரு போலீஸிடம் பேசிக் கொண்டிருந்தார் SP சார்.

நேற்றைய நிகழ்வைப் பற்றிதான் பேச்சு.

“சார் புதுசா ஒரு இஷ்யூ சார், பக்கத்து வயல்ல இருந்து கம்ப்ளெய்ண்ட் கொடுத்துருக்காங்க சார். யாரோ ஒரு சைக்கோ வந்து குண்டுல்லாம் வச்சு வெடிக்கான் அவங்க வயல்ல, புலிய கூட கொன்னு கொண்டு வாந்தான்றாங்க, அவன்ட்ட அவங்க மாட்டினா மட்டும்தான் ஆபத்தா, எங்களுக்கு இல்லையா? எங்களுக்கும் பாதுகாப்பு வேணும்னு சொல்லி இருக்காங்க” என வந்திருந்தவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

பால்கனியா கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருக்கிறான், பக்கத்து வயல்னா அவன்தானே என்றிருக்கிறது இவளுக்கு. என்னமோ ஆவுன்னு சாரை தலையில் தூக்கி வைத்து இவளிடம் பேசிவிட்டு இது என்ன கம்ப்ளெய்ண்ட்? என எரிச்சலும் பொத்துக் கொண்டு வருகிறது.

இதற்குள் இவளை கவனித்துவிட்டார் போலும் அந்த போலீஸ், அவர் பேச்சை நிறுத்திவிட, அவர் பார்வையை தொடர்ந்து இவள் புறமாக திரும்பிய ப்ரவி

”இது என் தங்கைதான் மிஸ்டர். வாசன்” என்க,

திகீர் என ஒரு ஜில்லிப்பு சந்தோஷத்தில் ஆடிப் போனது இவளுக்கு. தங்கையாமே! இவளைப் பற்றி இத்தனை தெரிந்த பின்னும் தங்கை என அறிமுகப்படுத்துவது என்றால் எப்படி இருக்கிறதாம் இவளுக்கு?

இவளை மகள் என சொல்லிக் கொள்ள வெறுத்துதானே இவள் பெற்றோர் தலைமறைவாகிப் போனது?!

இவளை எத்தனை வேண்டுமானாலும் சார் கண்காணித்துக் கொள்ளட்டும், இந்த ஒன்று போதாதாமா?

இவள் இப்படியெல்லாம் திக்குமுக்காடிக் கொண்டிருக்க, அங்கு அந்த வாசனோ சின்னதாய் இவளுக்கு மரியாதையான தலையசைப்பு செய்தவர் “அது சார் இந்த கேஸ் டீடெய்ல்ஸ் டிபார்ட்மென்ட்லயோ கூட உங்களத்தவிர யார்ட்டயும் பேசக் கூடாதுன்னு சொன்னீங்களா” என பேச்சை ஒரு கணம் நிறுத்த,

உங்க வீட்ல உள்ளவங்கள சந்தேகமெல்லாம் படல, ஆனா சொல்லலாமா கூடாதா என அனுமதிதான் கேட்டேன் என்பது போன்று அதற்கு காரணம் புரிகிறது வேணிக்கு.

“இப்ப இந்த பக்கத்து வயல்காரங்களுக்கு என்ன ரிப்ளை கொடுக்கலாம் சார் நாம? ஏன்னா நாங்க ப்ரெஸுக்கு போவோம்ன்றாப்ல பேசுறாங்க அவங்க” என அந்த வாசன் தற்போதைய   நிலையை தெரியப்படுத்தினார்.

பால்கனியை பஞ்சாமிர்தமாக்கும் கோபம் வருகிறது இங்கு இவளுக்கென்றால், பின்ன ப்ரஸுக்கு போவானாமா சார்க்கு எதிரா?

அங்கு ப்ரவியோ “ஒன்னும் ப்ராப்ளம் இல்ல மிஸ்டர்.வாசன், ஏற்கனவே கேமிரா மானிடரிங் ப்ரொடெக்க்ஷன் எல்லாம் அவங்க வயலுக்கு அதிகமாகவே செய்துருக்கு, அதை அவங்கட்ட சொல்லிடுங்க, அது தவிர வேற என்ன எதிர்பார்க்காங்கன்னு பேசிப் பாருங்க,

அதோட மொத்த கோர் கேஸ் டீடெய்ல்ஸ்தான் வெளிய போகக்கூடாது, நீங்க இந்த ஒரு இன்சிடென்ட்ட மட்டுமா அவங்கட்ட பேசுங்க, அதுல என்ன டீடெய்ல்ஸ் கொடுக்க முடியுமோ அதை அவங்கட்ட சொல்லிக்கலாம்” என்றவன்,

“இதில் உங்க ஆங்கிள் என்ன?” எனக் கேட்க,

இவள் காஃபி கோப்பைகளை அவர்கள் முன்பாக வைத்துவிட்டு திரும்பிவிட்டாள்.

“புலி சார், புலிய ஒருத்தன் சும்மா வீட்ல வளத்துட முடியுமா? பக்கத்து வீட்டுக்காரன் போட்டு கொடுத்துடுவான்ல? அப்படின்னா அவன் வீடு ஆள் நடமாட்டமே இல்லாத மலையிலயோ, இல்ல காட்லயோதான் இருந்தாகணும், அதனால நாம அப்படி ஆங்கிள்ள  போகலாம் சார்” என்றார் அந்த வாசன்,

“அப்படின்றீங்க? சர்க்கஸ்லயும் புலி இருக்குமே சார், யோசிங்க சர்க்கஸ்னா, சர்க்கஸ் பீபுள்ன்ற அடையாளத்தோட ஒவ்வொரு இடமா ஈசியா மூவ் ஆக முடியுமே! இப்ப ரீசண்டா நம்ம தூத்துகுடி டிஸ்ட்ரிக்ட்ல இருந்து பெங்களூர்க்கோ இல்ல வைஸ்வெர்சாவோ எதாவது சர்க்கஸ் மூவ் ஆகி இருக்கான்னு பாருங்க, அடுத்து கவனிச்சுக்கலாம்” என ப்ரவி பேசிக் கொண்டு போவது வரை இவள் காதில் கேட்டது.

சமையலறைக்குள் வந்துவிட்டாள் இவள். கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தது இவளுக்கு.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 14

7 comments

 1. Nan dhan first nu nenakiren. Actually im very sorry for not commenting your previous episodes. Adhu enna nu theriala padichuttrukkum ppdhu ennanavo comment pannanum nu thonudhu. But comment panna vandha manasula ulladha solradhukku edho thadai
  Dont mistake me. But eppa epi update pannalum pls have a thought about me am the first one to read the ud nu. And also am the die hard fan of your story writing style and the way you are expressing thoughts and incidents in the story. Same like indha epi um remba rembave nalla vandurukku. Remba oru diifernt ah na feel kudukkudhu indha story. But as usual feel more comfort while reading your stories.

 2. Semma neelamana epi ku first of all, thanks ma’am. Unga episodes padikurapo ‘hayo idhan last page o, mudiya pogudho’nu oru sad feelingodave padipen. Indha murai semmma jollya padichen. ❤️
  Pumpset scene ku apram imbutu serious a oru scene a??shock ayten ma’am. 😪
  Pavi-Pravi again kalaku kalakunu kalakitanga. Intimacy a kuda mugam suzhikadha vagaila romba decent a eludhirundheenga, reality a mudinja alavuku express um panirundheenga. Great job ma’am. 🔥
  Idhula Pavi jetu vegathula yosichu enalamo nenachu Pravi a yum kolapi vitu, shabaaa… Pakka real life scenarios. Elarukum iruka insecurity a apt a catch panirundheenga ma’am
  Pravi pavi oda madila paduthutu urimaiya thala kodhi vida solradhu —vera level of feel good romance 😍🤩
  Karan oda manasu Veni pakam sayudho? Apdi saanja Veni yar pakam? Balcony a ila Karan a??? Hayo, mandai kaayudhe!!
  Mr. Balcony nallavara ketavaranu oru doubtu manasula odite iruku. Something stops me from going all out on his side. Enanu dhan theriyala. ☹️
  Circus karana irupano? Nama policekaar moolai valakam pola ‘out of the box’ dhan yosikudhu. Idhu yen engaluku spark agama pochu??? 🤔
  Complaint panadhu Balconya irukadhunu thonudhu.
  Circus karanu solavum Veni face maara karanam ena? Ava family aala irupano?
  Egapata questions. Vidaiyoda seekrame varuveenganu edhirparkuren ma’am.

 3. Mam eppadi thaan eppadi ezthureengalo. Pls tirushti suthi pootukakanga mam. Arambichathu thaan theriyum still seeing the thodarum word I totally submerged into the story mam. It’s extremely admirable mam. Especially the advice given to Pavi is simply fantastic mam which we have to educate all the women before getting married mam. But our society is not well developed in it . And more over still our motherhood is not ready to speak about it with their kids mam. But u have written it in a genuine way mam.

 4. Very neatly presented da.intimate relationships pathi bayamo verupo irukuravangaluku rembave useful information. Pravi oda kuthuvizhaku ku ethavathu our reason venum pola aluga pavam policekar. Ayyo karun payya veni a ethuvum root potratha pavam balcony sir nonthu noolaguduvaru. Etkanave avara veniponnu vachu seyuthu new Vera kummi aduchudatha rasa.

 5. இந்த எபிய என்ன சொல்லன்னு தெரியல.. ஆரம்பிச்ச வேகத்தில் தொடரும்லே தான் வந்து நின்னு இருக்கேன். முதலில் வேணி மயங்கி விழுந்ததுக்கு காரணம் பவிக்கு ஏதும் இருக்குமோன்னு தான் தோனுச்சு. ஆனால் கடைசியில் யாரை சந்தேகப் படரதுன்னு தான் தெரியலை. அடுத்து வேணி பக்கத்து வயல்காரன்னு நினைக்கிறது பால்கனிய. ஆனால் அந்த ராஜரத்தினம் தான் பிரவி கிட்டேர்ந்து விஷயங்கள் வாங்கற முயற்சியோன்னு தோனுச்சு. பவி , பிரவி இருவருக்குமான உறவு நிலையில், பவியின் பயம் யோசனை போகும் விதம் பாவம் தான். இந்த விஷயத்தில் பிரவியின் அணுகுமுறையும் சூப்பர். தயாவின் கோபம் எதனால். இல்லை ப்ரவியோடு அவளை இணைக்கும் முயற்சியாக இந்த கோபத்தைக் கையில் எடுத்து இருக்கிறாரோ? அந்த வில்லன் என்ன செய்ய நினைக்கிறான்? அடுத்த எபிக்காக ஆவலுடன் வெயிட்டிங்

 6. Oru Amma than ponnnukku soldra mathri really very correct and in a healthy way than neenga sonna viahayam. Don’t hesitate cheer up man

Leave a Reply