துளி தீ நீயாவாய் 12 (7)

“அதான் அதத்தான் சொல்றேன், இந்த திருட்டுத்தனம் பண்ணி, எல்லாரையும் ஏமாத்தி நான் உன்னை மீட் பண்ணனும்னு என்ன அவசியம் இருக்கு?” குரலை இறக்கி ஆனால் வெடித்தாள் இவள்.

“என்னை நம்புறவங்கள ஏமாத்த எனக்குத் தெம்பில்ல” எனும் போது அழுதாள்.

பால்கனியின் கண்ணில் இப்போது ஒரு வலியும் ஊரளவுக்கு கனிவும்.

“சாரிமா நான் இப்படி யோசிக்கல, ஃபோன் செய்து பேசிடலாம்னா உன் நம்பர SP சார் எப்படியும் மானிடர் செய்வார், அதுக்கு இந்த ஃபோட்டோவ அவர்ட்டயே காமிச்சுடலாமே, அதான் நேர்ல லெட்டர கொடுத்தேன், இப்படி உனக்கு கஷ்டமாகும்னு எனக்கு தெரியல, நிஜமா சாரி” என்றான்.

அவன் கண்களில் வலி, அக்கறை எல்லாம் இருந்தது. அது இவளுக்கானது.

“இப்படியே பேசினனா நிஜமா அறைஞ்சுடப் போறேன், SP சார் எதுக்கு என்னை மானிடர் செய்யப் போறார். சும்மா சும்மா பவிக்கா வீட்டப் பத்தி எதாச்சும் குறை சொல்லிட்டே இருக்க, எனக்கென்னமோ இந்த லெட்டர எழுதினதும் நீதான்னு தெளிவா தெரியுது,

உனக்கு அவங்களப் பிடிக்கல, என்னை கல்யாணம் செய்து தரமாட்டேன்னுட்டாங்கல்ல, அதான் அவங்களப் பழி வாங்குற, ஆனாப் பாரு அவங்களே சொன்னா கூட உன்னை எனக்கு பிடிக்கல, பிடிக்காது, பிடிக்கவே பிடிக்காது” கொதித்து குமுறினாள் இவள்.

பெருமூச்சு ஒன்று வந்தது பால்கனியிடமிருந்து. “திரும்பவும் முதல்ல இருந்தா?” என்றவன்,

“SPசார குறையா சொல்ல இல்ல, நீ யார் என்னன்னு தெரியாம உன்னை நம்பி அவர் எப்படி அவர் வீட்டுக்குள்ள சேர்த்துக்க முடியும்? ஒரு திருட்டு கேஸோ ஏன் டெரரிஸ்ட்டோ கூட இப்படி அவர் வீட்டு வாசல்ல மயக்கடிச்சு விழுந்து அவர் வீட்டுக்குள்ள போய் சேர்ந்துகிட்டா அவர் என்ன செய்வார்? அண்ணி நிலமை என்ன ஆகும்?

அதனால அவர் தன் வீட்டுக்குள்ள இருக்க எல்லோரையும் கண்காணிக்கத்தான் வேணும், இல்லனா அது முட்டாள்தனம். ஆக அவர் உன்னை அப்படி கண்காணிச்சா அவர் புத்திசாலின்னு சந்தோஷப்பட்டுகோ, அதுக்காக வருத்தப்படல்லாம் கூடாது. நீன்றதால இல்ல, அவருக்குத் தெரியாத யாரா இருந்தாலும் அவர் இதைத்தான் செய்வார், செய்யணும், அதனால இதுல நீ வருத்தப்பட்டுக்க ஒன்னுமில்ல,

இப்ப உன்னைய அந்த வீட்டுக்குள்ள தங்க வச்சுருக்கார், நான் வந்து தங்குறேன்னா விடுவாரா? அதுதான் உன் மேல அவருக்கு உள்ள நம்பிக்கையும் அக்கறையும், அதையும் நீ புரிஞ்சுக்கணும்” எனவும் சொன்னான்.

வேணிக்கு இப்போதும் ஒரு நொடி பேச முடியா நிலை. அவன் சொல்வது உண்மைதானே! அதோடு பால்கனிக்கு SP சார் குடும்பம் மீது உண்மையிலேயே மரியாதை இருக்கிறது போலும் என்றும் சின்னதாய் தோன்றுகிறது. ஆனாலும் இவனை நம்ப இவள் தயாராய் இல்லை.

“சரி அவர் என்னை கண்காணிக்கணும்னு தெரியுதுல, அப்ப ஏன் வந்த? முதல்ல இடத்த காலி பண்ணு” இது இவள்.

பின் நியாபகம் வந்தவளாக “இல்ல கருண் சார் என்ட்ட பேசுறதப் பார்த்து என்னை தப்பா நினச்சு ஓடி வந்தவன் நீ, அதுக்காகத்தான் அப்பவும் இளநீ கொடுக்கேன்ற பேர்ல ஓடி வந்த, அதாவது என்னை சந்தேகப்படுற,

நீ யார் என்னை சந்தேகப்பட? அதென்ன உனக்கு அவர் என்ட்ட பேசினா கோபம் வருது? நீ என்ன என்னை கண்ட்ரோல் செய்றது? நான் யார்ட்ட வேணாலும் பேசுவேன், பழகுவேன், இதுலல்லாம் மூக்க நுழச்ச கொன்னுடப் போறேன்” என அடுத்த விஷயத்திற்கு எரிந்து விழுந்தாள்.

“லவ் பண்றேன்னு ஆரம்பிக்கது, அப்றம் சந்தேகப்படுறேன்னு சொல்றது, அப்றம் அந்த பொண்ண கொன்னு புதைச்சுடுறது, கேட்டா இதுதான் ஆம்பிளைக்கு டெஃப்னிஷன்னு பேத்துறது,

ஒரு பொண்ண நம்ப கூட முடியாதவன்லாம் ஏன்டா அவள லவ் பண்றீங்க? இவள நம்பலாம்னு கூட தெரிய முன்ன தட்ட தூக்கிட்டு எந்த மூஞ்ச வச்சு பொண்ணு கேட்டு வந்த நீ?” மூச்சிளைத்தது வேணிக்கு. அவள் அழுவதை அவனிடம் மறைக்க முயன்று கண்களின் மேல் கை வைத்து நெற்றியை பற்றிக் கொண்டாள்.

“சாரி” என ஒற்றை வார்த்தைதான் பால்கனியிடம். முகம் சுண்டிப் போய்தான் நின்றிருந்தான்.

“நிஜமா சாரி, அந்த கருணப் பார்க்க கொஞ்சம் பொறாமையா இருந்தது நிஜம், ஆனா அது உனக்கு இப்படில்லாம் தோணும்னு தெரியல, ஆனா இன்னொன்னையும் நீ புரிஞ்சுக்கணும், என்னை கல்யாணம் செய்றேன்னு ஒரு வார்த்தை சொல்லு, அடுத்து எந்த காலத்திலயும் உன்ட்ட யார் எப்படி பேசி பழகினாலும் நான் தப்பா நினைக்க மாட்டேன், உன்னை நம்புறேன் வேணிமா, ஆனா உனக்கு என்னை பிடிக்கலைன்றதுதான் இப்படி என்னை குழப்புது” அவன் சொல்ல,

சுற்று முற்றும் பார்த்த வேணி கையில் ஒரு செங்கல் அளவு கல்லை எடுத்துக் கொண்டாள், “நிஜமா அடிச்சுடப் போறேன், இன்னொரு டைம் இப்படி கேன மாதிரி பேசினனா” உச்ச ரௌத்திரம் அவளிடம்.

“சரி இதப் பத்தி இனி பேசல, விடு, அந்த மதுவப் பத்தி கேட்டல்ல அந்தப் பொண்ணு படிக்கிற ஸ்கூல கண்டு பிடிச்சுட்டேன், அங்க அவள நீ மீட் பண்ண ஒரு ப்ளான் வச்சுருக்கேன், அதைத்தான் அந்த லெட்டர்ல எழுதி இருக்கேன், படிச்சுப் பாரு, இப்ப நான் உன்ன இங்க பார்க்க வந்தது என் எடுபிடி ஒரு சொறிநாய் இருந்ததே, அதைப் பத்தி சொல்லத்தான். அதுக்கு எனக்கு விஷயம் தெரிஞ்சிட்டுன்னு தெரிஞ்சுதோ என்னமோ, குடும்பமா ஊரக் காலி செய்துட்டு ஓடிட்டு, அப்படின்னாலே இனி இங்க வால ஆட்டமாட்டான். இருந்தாலும் ஊட்டி பக்கம் இருக்கான்னு தகவல் கிடச்சுருக்கு, சீக்கிரம் பிடிச்சு விசாரிச்சு உன்ட்ட பேச வைக்கிறேன், அதச் சொல்லத்தான் வந்தேன்” என்றவன்,

“சரி கிளம்பு, என்னைய நினச்சு மனச குழப்பிக்கிடாத, உன் வகையில் நான் 100% நல்லவன்” என்றவன் திரும்பிப் போய்விட்டான்.

அங்கேயே ஓய்ந்து போய் அமர்ந்திருந்தாள் வேணி. அப்போதுதான் அந்த வெடி புகை எல்லாம். அதில் அலறி அடித்து ஓடி வந்தவள், இருந்த உச்ச நிலை மனப் போராட்டம், கூடவே பவியைக் காணவில்லை என்பதே அவளுக்கு எதோ ஆபத்து போலும் என வந்த உணர்வு, மற்றும் அளவுக்கு அதிகமான அந்த துர்நாற்றத்தில் மயங்கிச் சரிந்தாள்.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 13

10 comments

 1. Villain ipidi police karra miratta try pannite thiriyirane police kar ethavathu seyunga please.pavi ponnu ipo than konjam kuthuvizhaku mathiri react panna arambicha athu yarukupa porukala ipidi panni vangitu to poi irukeenga. Hopefully she us safe. Venima balcony a nee konjame konjam nambalam nu thonuthu please consider.

 2. Super sis…
  Yar dhan villain???
  Enakku palkani mela dha doubt varuthu oru vidhathula yosicha…
  Ok avan nu fix pannalam patha karun ah irukumo num thonudhu….
  Oru velai rendu perum irukadho thonudhu…
  Nalla mandai kaya vidreenga sis…
  But really a wonderful epi sis

 3. செய்வினை .. செய்யபாட்டு வினை.. படிக்கவே ரொம்ப நல்லாயிருக்கு. அதோட பக்கிங்க , போடங்க லூசுங்க.. செம.. ஆனாலும் ஹனி சன் .. செமையா இருந்துச்சு சிஸ். வில்லனதான் இன்ட்ரோ கொடுத்து இருக்கீங்க.. அப்போ வில்லன் அந்த ட்ராப்பிங் சமந்தப்பட்டவனோ.. பவியின் குழப்பத்தைத் தீர்க்க ப்ரவி கொடுத்த விவரங்கள் அழகு. வேணி, பால்கனி சீன்ஸ் நல்லா இருக்கு. அந்த வில்லன பவி பார்த்துருக்க வாய்ப்பு இருக்கோ.. வெயிட்டிங் அடுத்த எபிக்கு சிஸ்.

 4. Ena da oru action scene……mass…!!!.vilalin sir ena romba peaurar😏🙄athim enga Jillu payan ta. Uhum……ena Da honeysun lam katrengala pa..🙄😂😂😂😉🤗 parda pravi Ku pesalam varudhu😅😅😍😘😘😘😘your words and way of portrayal super ka….. awesome…….Azhagu perazhaguuuuu😍😍😍but villain ji semaya perform panrar…..pakka 💯💯🔥🔥🔥fire epiii.ama pavi Ku enachy🙄😑dei letter anupna lusu yaruda…. balcony ji neer nalavarnu ninaikren emathidatha

 5. Pravi- Neer oar rasiganada!!!!! Rasikuradhukum oru talent venum, adha kuda semma decent a panra nama policekaar vera level 🤩
  Pravi-Pavi oda motor set romance lam adichu thookiteenga ponga😬
  Ennama ragasiyam solraru???!! 😍
  I’ve always fantasised the posture in which Pravi-Pavi had sat on the stairs leading into the well. Adhaye enoda ishtamana pair seyavum, anu anuva rasichu padichen ❤️🔥😍
  Pravi kudukura married life oda explanation and the way he totally gives a new perception to the term ‘better half’, is just awe inspiring. Manasa touch paniduchu Pravi kudukara clarifications.
  Andha rasigan cum thirudan dhan bayamuruthirukan. He reminds me of Anurag Kashyap’s role in ‘Imaika Nodigal’. Protagonist a rasikura antagonist , lets see how this plays out🤔
  Mr. Balcony nalavara ketavara? But avaroda feelings genuine nu thonudhu. Veni oda mana kulapamum correct dhan. Idhu enga poi mudiya pogudho!!!
  Pavi kandipa andha motor room la irundhu ess ayrupanu thonudhu.
  Mr balcony, enga nama Veniponna dabaalnu vandhu Pravi Pavi a thaangikitapla pudichukonga papom… Viraindhu seyalatrungal!
  Adutha epi ku already waiting 🤞

Leave a Reply