துளி தீ நீயாவாய் 12 (4)

“வேற ட்ரெஸ் கொண்டு வரலைதானே மாத்த? எனக்கும் இல்ல, வா இந்த ட்ரெசுக்கும் நமக்கும் ஏத்த போல ஒரு சூப்பர் ஸ்பாட் வச்சுருக்கேன்” என்றபடி நனைந்து போன அவன் சட்டையை எடுத்து அணிந்து கொண்டு,

இப்போது கிணற்றை ஒட்டி இருந்த மோட்டர் ரூமுக்கு அழைத்துப் போனவன், அதன் தரையிலிருந்து ஆழமாய் கிணற்றுக்கு இணையாக இறங்கிய படிகளில் இறங்கி,

அங்கிருந்து கிணற்றுக்குள் போக கிணற்றின் பக்கவாட்டு சுவரில் இருந்த ஜன்னல் அளவு துவாரத்தில் இவளையும் கைபிடித்து நடப்பித்து,

அந்த துவாரத்துக்கு கீழ், கிணற்று சுவற்றில் இருந்து ஒரு ஆள் கால் நீட்டி அமரும் அளவு நீட்டிக் கொண்டிருந்த கல்லில், இருபுறமும் கால் தொங்கவிட்டபடி தான் அமர்ந்து, தனக்கு முன்பாக இவளையும் அமர வைத்துக் கொண்டான்.

அதாவது இவர்கள் கிணறின் பாதி ஆழத்தில், கிணறின் சுவரிலிருந்து நீட்டிக் கொண்டு நின்ற ஒரு கல்லில் அமர்ந்திருக்கின்றனர். இவர்கள் கால்களுக்கு சற்று கீழாக ஒரு சில அடிகளில் கிணற்றுத் தண்ணீர், இவர்கள் தலைக்கு மேலே பெரிதாய் திறந்திருக்கும் வானம்.

அந்தரத்தில் அமர்வது போல ஒரு உணர்வுதான் முதலில் பவிக்கு.

அமர மட்டுமே அளவெடுத்தது போல் கல்லின் அகலம் இருக்க, நாற்காலியில் அமர்வது போல் முன்புறம் கால் தொங்கவிட்டு, கல்லின் முனையில் அதுவும் புடவையில் அமர்ந்திருந்தவளுக்கு சற்றாய் அசைந்தாலும் கிணற்றுக்குள் விழுந்துவிடுவமோ என்ற பீதி இருந்தது. ஆனாலும் காலுக்கு கீழாக அருகில் நீர் இருப்பதால் ஒருவித குளுமையும், தலைக்கு மேல் வானத்தில் வெயிலுமாய், இவளது ஈர உடைக்கும் வெகு ரம்யமாய் உணர்ந்தாள் சூழலை.

அதோடு இதெல்லாம் என்றாவது இவள் அனுபவித்திருக்கிறாளாமா என்ன? கூடவே ப்ரவியின் அருகாமை. ஆக பயத்தை காரணம் காட்டி மறுக்க மனம் வரவில்லை.

இவளுக்கு பின்னால் சுவரில் சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த ப்ரவி, “இப்ப நான் ஒரு கையால உன்னை பிடிச்சுக்க போறேன் பவிமா, என்னமோ ஏதோன்னு துள்ளிடாத, அப்றம் உள்ள விழுந்துடுவ” எனச் சொல்ல, எளிதாக சம்மதமாக தலையாட்ட வைத்தது இவளது பயம்.

சொன்னது போல் பின்னிருந்து இவள் இடையோடு கையிட்டு தன்னோடு சேர்த்துக் கொண்டான் அவன். இவள் தேகத்துள் இருந்தவை எல்லாம் மின்மினிக் கூட்டமாய் மாறிப் போனதுதான், ஆனாலும் அதையெல்லாம் உணரவிடாதபடி மொத்த ஆளுகை செய்தது பாதுகாப்புணர்வே. அவன் இறுகிய கைகளின் தொடுகை விதத்தின் வண்ணம் அப்படி.

அவன் மார்போடு சாயாமல் சற்றாய் தள்ளி இருந்துதான் கதை கேட்கத் துவங்கினாள் அவள். “இங்க ஏன் வந்தேன் தெரியுமா பவிமா, இந்த இடத்தில் இப்படி நாம வந்து உட்காந்து பேசுவோம்னு எதிர்பார்த்து யாரும் மைக் கேமிரான்னு எதுவும் ஃபிக்ஸ் செய்துருக்க மாட்டாங்கல்ல, அன்னைக்கு ஒருத்தன் வீடு வரைக்கும் வந்துட்டான்ல” என அவன் டிபார்ட்மென்ட் சிந்தனையில் தொடங்கி,

முன்பு ஒருநாள் நடந்த அந்த பெங்களூர் பயணம், இவன் கல்யாண சிந்தனை அந்த லாரி பயணம், அந்த கொத்தடிமைகளை மீட்ட வகை என எல்லாவற்றையும் அவன் சொல்லி முடிக்கும் போது,

இவன் மார்பில் அவள் முதுகுசாய்த்து, அவன் கைக்குள் வாகாக வசதியாகி, தொங்கவிட்ட காலை முட்டு கூட்டி கல் மீதே வைத்து என அத்தனை அத்தனை வசதிக்குள்ளும், அவனோடு ஒரு லயத்துக்குள்ளும் வந்திருந்தாள்.

“நச்சு பிச்சுன்னு வெளுத்து வாங்கி இருக்கியே போலீஸ்கார், அப்பவே இதெல்லாம் சொல்லி இருந்தன்னா பெரிய மனசு பண்ணி சைட் அடிச்சுருப்பேன்ல உன்னை” எனும் அளவுக்கு பேச்சும் வந்திருந்தது.

“நேரம்” என நொந்து கொண்டான் அவன்.

“யாரு?  நீ சைட் அடிக்கிற ஆளாமா? சரியான முட்ட மிட்டாய். சிந்திய கல்யாணம் பண்ணுன்னு எனக்கு திரும்பத் திரும்ப ட்யூஷன் எடுத்த அறிவுஜீவி” அப்படின்னு விளக்கமா பேசணும் போலீஸ்கார்.

“ஹ ஹா, அது என்ன முட்ட மிட்டாய்?”

“அச்சோ இது கூட தெரியாத நீ எப்படி இம்மாம் பெரிய கேசேல்லாம் சால்வ் பண்ண போற? அதான் ஆண்டவரா பார்த்து என்னை உன்ட்ட அனுப்பி இருக்கார் போல” இது அவள்.

“ரெட்ட வாலு” இது அவன்.

“நான் ஒரு கோழி முட்ட அப்படின்னு நானா சொல்ல முடியுமா? அதான் கெத்தா முட்ட மிட்டாய்” இவளின் விளக்கம்.

இப்படியாய் இதுவும் இன்னும் சில தற்போதைய விஷயங்களையும் இவர்கள் பேசிவிட்டு, கிளம்பும் தருவாயில்,

“முன்னால இதெல்லாம் சொல்லாம இப்ப மட்டும் ஏன் இதெல்லாம் சொல்றேன்னா, அப்ப நீ எனக்கு வெறும் ஃப்ரென்ட்தான், உன்ட்ட இதெல்லாம் சொல்லணும்னு கட்டாயம் இல்ல, உனக்கு கஷ்டமாகும், பயமாகும், பிரச்சனை வரும்னு நான் மறச்சுட்டு போய்ட்டே இருப்பேன்,

ஆனா இப்ப உனக்கு என் மேல எல்லா ரைட்டும் இருக்கு, இங்க என்னோட எல்லா பக்கத்தையும் நீ தெரிஞ்சிருக்கணும், நானும் சொல்லணும், ஒன்னொன்னுலயும் உன்னோட சம்மதமும் எனக்கு முக்கியம், உன் பயம், சிச்சுவேஷன், எல்லாம் தாண்டி நீ இதை ஹேண்டில் செய்தும் ஆகணும், it calls for maturity and strength. it’s a promotion by all means” என இவனது பேச்சின் நோக்கத்தை தெளிவுபடுத்தி,

இவர்கள் திருமண வாழ்வில் அவளும் இவன் அளவுக்கு முக்கியம் என்பதை மீண்டுமாய் சுட்டி காட்டிவிட்டே அவளை வெளியே அழைத்து வந்தான்.

அடுத்த பக்கம்