துளி தீ நீயாவாய் 12 (3)

“இத உன்ட்ட பேசக் கூடாதுன்னு நினச்சேன், ஏன்னா கன்னா பின்னானு புரிஞ்சுக்க கூடாது. நான் சொல்றதை வேர்ட் பை வேர்ட் நீ நம்பணும்” என ஒரு பீடிகையிட்டு

“உன்னை எனக்குப் பிடிக்கும் ப்ரவி, ரொம்பவே பிடிக்கும், ஆனா எங்கயோ போய்ட்டு இருந்த என்னை, திடீர்னு உன்னை சுத்தி உனக்காக மட்டும்தான் இனி என் லைஃப் இருக்கணும்னு கொண்டு வந்து விட்டுட்ட ஃபீல்.

ஒரு பக்கம் இனி உன் கூடவே இருக்கலாம்ன்றதுல இருந்து, உன்னை யார் கைலயோ கொடுக்காம, உனக்கான எல்லாத்தையும் நானே கவனிச்சுகலாம்றது வரை ரொம்பவும் சந்தோஷமா இருக்குதுன்னா, சட்டுன்னு என் லைஃப்ல நானே இல்லாம போய்ட்ட மாதிரி ஒரு எம்ப்டி ஃபீலும் கூடவே வந்துடுது” என்றவள்,

“அதான் ‘இந்த மேரேஜ் எனக்கு பிடிச்சுருக்கு, இதுக்கு நான் அடாப்ட் ஆகிடுவேன்’னு தோணுறப்பல்லாம், கூடவே இனி எனக்குன்னு எதுவுமே கிடையாதுன்றதுக்கும் நான் பழகிடுவேன்னு வலிக்குது” எனும் போது மீண்டும் கண்ணில் நீர் எட்டிப் பார்த்தது.

“இதென்ன வினோத லாஜிக்கா இருக்கு பவிமா?” என இப்போது இவன் விசாரிக்கும் போது இவன் குரலில் இலகு நிலை வந்துவிட்டது.

“மேரேஜ் ஆகிட்டுன்னா நான் உனக்காகவே வாழணும், நீ எனக்காகவே வாழணும், தன்னை பத்தி யோசிக்க கூடாதுன்னா, கல்யாணம்ன்றது சூசைடா நாம இல்லாம போறதுக்கு? ரெண்டு பேரும் ரெண்டு பேருக்காகவும் பார்க்கணும், அதுதானே லைஃப்” எனும்போதே,

“ஹேய் எனக்கு புரிஞ்சிட்டு” என சற்று துள்ளலான விடுதலை குரலுக்குப் போனவன் “இது பொதுவா திடீர்னு புது சிச்சுவேஷன்குள்ளயோ, எதிர்பார்க்காத வேலைக்குள்ளயோ நுழையுறவங்களுக்கு வர்ற ஐடன்டிடி க்ரைசிஸ் போல இருக்கு, நம்ம கல்சர்ல புதுசா மேரேஜ் ஆனவங்களுக்கு, newborn child உள்ள பேரேண்ட்ஸுக்கு கூட இப்படியாகும்தான்.

நாம இங்க என்ன செய்றோம்? நான் நானாவே இல்லையே, என் டேலண்ட் ஸ்கில்னு எதையும் யூஸ் செய்ய ஒன்னுமே இல்லையேன்னு வர்ற குழப்பம் இது. நாம செய்ற எதுவும் வொர்தானதா இல்லைனு தோணும். நாம எல்லோருக்கும் எடுபிடியா இருக்க மாதிரி, தன் மேலயோ இல்லை எது மேலயுமோ தனக்கு அதிகாரம் இல்லாத போல டிப்ரெசிவா ஃபீல் ஆகும்.

ஏற்கனவே உனக்கு நம்ம மேரேஜ் நடந்த விதம் வேற ஹர்ட் செய்துட்டா, அது எல்லாம் சேர்ந்து இப்படி கஷ்டமா இருக்கு போல, நாம சீக்கிரம் சரி செய்துடலாம் பவிமா” என வெகு நம்பிக்கையாகவே முடித்தான். இவளுக்கும் நம்பிக்கை வருவது போலவே முடித்தான்.

“முன்னால என்ட்ட பழகின மாதிரி இல்லாம இப்ப உன் ரோல் மாறுதுல்ல, அது உனக்கு குழப்புது அவ்வளவுதான், உதாரணமா முன்னல்லாம் எதுனாலும் உனக்கு பிடிச்சத செய்வ, என்ட்ட as a friend சொன்னா போதும், சொல்லலைனாலும் விஷயமில்ல, ஆனா இப்பன்னா என் அப்ரூவல் வேணும் அப்படின்னு ஆகுதுல்ல, அது என்னமோ நீ கீழ இறங்கின போல தோணலாமில்லையா?

ஆனா நிஜம் என்னதுன்னா நானும் இனி எல்லாத்துக்கும் உன்ட்ட அப்ரூவல் வாங்கணும், அப்ப இது ம்யூசுவல், நாம ரெண்டு பேருமா நம்மள பார்த்துக்குறோம்னு இது பாசிடிவா தோணும், கூடவே உன் ப்ரவியோட வாழ்க்கைய நீ சேஃப்கார்ட் செய்றன்ற worth எல்லாம் கிடைக்கும்.

என் மேல, உன் வாழ்க்கை மேல உனக்கு  கன்ட்ரோல் இருக்குது, உனக்கும் அதிகாரம் இருக்குதுன்னு உனக்குப் புரியும். அப்ப உனக்கு நீ கீழ இறங்கிட்ட போல தோணாது, முன்னவிடவும் worthyயா முன்னவிடவும் திருப்தியாதான் ஃபீல் பண்ணுவ,  இப்படி சின்னதும் பெருசுமா நிறைய ரீசன்ஸ் இருக்கும், நாம ஒன்னு ஒன்னா சரி செய்துடலாம், அடிப்படை என்னதுன்னா நீ உன்னோட செல்ஃப் வொர்தை திரும்ப உணரணும்” என விளக்கினான்.

“அதுக்கு ஆரம்பமா இப்ப நான் என் பவிப் பொண்ணுட்ட ஒரு ரகசியத்தை சொல்லப் போறனாம்” என அடுத்து அவன் சொல்லும் போது, வெகு வெகு இலகு நிலை வந்திருந்தது பவியிடம்.

அடுத்த பக்கம்