துளி தீ நீயாவாய் 12 (2)

இவள் வந்து சேரும் முன்பாகவே வந்து கொட்டத் துவங்கிய நீரில் குனிந்து முகம் கழுவிக் கொண்டிருந்த ப்ரவி, அனிச்சையாய் நிமிரும் போதுதான் அது நடந்து வைத்தது.

ப்ரவியை விட உயரத்தில் நின்று கொண்டிருந்தாள் அல்லவா பவி? குனிந்து நின்ற அவன் எதேச்சையாய் நிமிரும் போது, இத்தனை அருகில் இவளை அவன் எதிர்பார்க்கவில்லையே, நிமிர்ந்த அவனின் ஈர இதழ்கள் அதாக உரசிப் போனது புடவை சற்றாக விலகி இருந்த இவளது இடைப் பகுதியில்.

இதில் பட்ட இடம் துவங்கி பாதாதி கேசம் துடித்தபடி துள்ளி ஓடிய ஒரு சுகாந்த மின்னலில் இதுவரை பிடித்து வைத்திருந்த விறைப்பாவது ஒன்னாவது, “ஹூம்” என விக்கியபடி, தோள்கள் குறுக்கி, தன் இரண்டு கைகளாலும், தன் காதுகளை இறுக மூடி, தான் நின்றிருந்த இடத்தில் தாங்காமல் சட்டென அமர்ந்துவிட்டாள் பவி.

கால் நொடி என்ன நடந்தது எனப் புரியவில்லை எனினும், உடனடியாக விஷயம் புரிய ப்ரவிக்கு முதலில் வந்த விஷயம் சிரிப்புதான். வாய்விட்டு சிரித்துவிட்டான். ஆனாலும் அதையும் தாண்டி அவனை தூண்டி இழுத்தது அவனவளின் இந்த நொடி நிலைதான். இவன் ஸ்பரிசத்திற்கு இத்தனை ரசாயன மாற்றமா அவளுக்குள்?

இப்படி ஆற அமர இவன் ரசித்துக் கொண்டிருக்க, அங்கு பவிக்கு எப்படி இருக்குமாம்? அமர்ந்த வேகத்தில் வெடுக்கென எழுந்து சென்றுவிட எண்ணி அவள் எழுந்து வைக்க, குட்டையும் நீளமுமாய் புற்கள் வளர்ந்து கிடந்த மேடல்லவா அது, இவள் எழுந்த வேகத்தில் அது இவளை சறுக்கிவிட,

சைட் அடித்துக் கொண்டிருக்கும் போலீஸ்காரன் சும்மா நின்றால் கதை என்னாவது? சட்டென கைகளை நீட்டி இவளை அதில் வாங்கினான்.

இவனது ஈர கைகளுக்கும், அவளது புடவை ரகத்துக்கும், அவள் வழுகிச் சரிய, இவன் அவளை அப்படியே சரிய அனுமதிக்க, அடுத்து  கண்களை திறக்கும் போது, அவன் கைகளுக்குள் அவள் இருக்கிறாள், அந்த நீரோடும் பள்ளத்தில் இவளும், இவளுக்கு அடுத்து அவனும் ஒருவர் முகம் பார்க்க ஒருவர் என்ற வகையில் நீருக்குள் கிடக்கின்றனர், இவள் மீது சுற்றி ஓடிய அவன் கை அவள் பின் தலையை பற்றி, விழும் போது அடி படாதவாறும், இப்போதும் அவள் தலை நீருக்குள் அமிழ்ந்துவிடாமல் இருக்கவும் என பிடித்தபடி இருக்கிறது என்பது வரை புரிகிறது.

கூடவே “சைல்ட் மேரஜாமா இது? சரியான கரண்ட் ஃபேக்ட்ரி இது” எனவும் அவன் சீண்ட,

இதில் தாங்க மாட்டாத தங்க நிற தவிப்பொன்று அவளின் அடி கால் தசை வரை அவசர ரீதியில் பிறண்டெழுந்து பாய்ந்தாலும், கூடவே நேற்றைய அவனது ஆறுதலின் அணைப்பில் உண்டாகியதே ஏன் எனச் சொல்லத் தெரியாத அமர்வு, தவிப்பின்மை, தாரளமயமாய் நிம்மதி என்றெல்லாம், அவை இப்போதும் ஒற்றை வர்ணமாய், ஆழ உயரமாய் பாவை இதயத்துக்குள் பிறந்தும் நிற்கிறது.

விழிகளை நிமிர்த்தினால் வெகு வெகு அருகில் காணக் கிடைக்கிறது மின்னல் கரையும் அவனது பார்வை, இவள் நெற்றியில் இருந்து நாசி, கன்னம், இதழோரம் என இறங்கி ஓடிய நீர்த்துளி ஒன்றை அவன் அத்தனையாய் பார்த்திருந்தான். இதில் இப்போது தன் கடை விரலால் இவள் இதழ் பாகத்தை இம்மி அளவாய் அவன் தீண்டிப் பார்க்க,

இதில் மின்னல் வகை வெள்ளி அலை ஒன்று இவள் தேக பாகங்களில் விர்ரென விழுந்து புறப்பட, சட்டென விலகி எழுந்து அமர்ந்துவிட்டாள்தான். ஆனால் அவன் பார்வை இவள் விழிகளை சந்திக்கிறது என புரியும் நொடி தானாக பரவித் தொலைகிறது வெட்க வர்ணம் இவள் இதழ் தொடங்கி இளமுகம் முழுவதும்.

அவள் விரல்கள் அருகில் இருந்த புற்களை பிய்க்க, இவள் தன்னை சமனப் படுத்த முனைய, ஐயோ அத வேற இவன் பார்க்கானே! நிதானிக்கும் முன்னும் தன் கையால் ஒரு கணம் முகத்தை மூடிவிட்டாள்.

பின் அதுவே அவள் நிலையை காட்டிக் கொடுப்பது போல் தோன்ற சட்டென கையை எடுத்துவிட்டாலும், “போடா” என சிணுங்குகிறது பெண்ணிவள் இதழ்கள் இன்னுமே இவளை விழுங்குவது போல் பார்த்திருந்த அவன் விழிகள் நிமித்தம்.

அவனோ சின்னச் சின்னதாய் இரண்டு சீட்டிகளை வெளியிட்டான். அணு அணுவாய் இவளை ரசித்தான். அதற்குள் சட்டென கண்ணீர் வெடித்துக் கொண்டு வந்துவிட்டது இவளுக்கு.

“ஹேய், ஏன்? என்ன ஆச்சு பவிமா? இதுல என்ன இருக்கு?” அவன் பதறிப் போய் எழ,

“நான் உன்னை டீஸ் செய்றேன்னு யோசிச்சுட்டியா? உன்னை இப்படி பார்க்க க்யூட்டா இருந்துச்சு, அதத்தான் எக்ஸ்ப்ரெஸ் செய்தேன், சரி விடு டீஸ் செய்தேன்னே இருக்கட்டும் அதுக்கு ஏன் அழணும்?” அவன் வகை வகையாய் விசாரிக்க,

“விடு, போ, ஒன்னுமில்ல” என என்னென்னவோ சொல்லிக் கொண்டாலும், அவள் முகம் இயல்பு போலே ஸ்திரப் பட்டுவிட்டாலும் கூட, சுடச் சுட வடியும் கண்ணீர் மட்டும் நிற்க மறுக்கிறது. அவள் கையால் துடைத்தெடுக்க எடுக்க நிற்கமாட்டாமல் வடிகிறது.

அழுகையை நிறுத்தும் அவள் முயற்சிக்கும் மீறி இது நடக்கிறது என அவனுக்குப் புரியும்தானே!

“எனக்கு என்ன யோசிக்கன்னு புரியல பவிமா, இந்த மேரேஜ் சரின்னு சில நேரமும், தப்புன்னு சில நேரமும் படுதா பவி? ஏன்னா ஒரு நேரம் நீதான் சந்தோஷமா இருக்க, அடுத்த நிமிஷம் நீயே அப்செட் ஆகிடுற?” என தனக்கு புரிந்தவைகளை வைத்து விசாரித்தான் அவன்.

இவள் அளவுக்கே வலி இருந்தது அவனிடம். இவனை ஏற்க முடியாமல் தன்னைத்தானே கட்டாயப்படுத்திக் கொள்கிறாளா என்ன?

அவளோ “அப்டில்லாம் இல்ல ப்ரவி” என உடனடியாக மறுத்தவள்,

உன்னை வேற குழப்புறேன்ல” என நொந்து கொண்டு,

அடுத்த பக்கம்