துளி தீ நீயாவாய் 10 (2)

அப்படியானால் பவிக்கா இவ விஷயத்தை சார்ட்ட சொல்லியாச்சுன்னு அர்த்தம். சூழலை கிரகித்தாள்.

கூடவே முன்பானால் உரிமையோ உறவோ இல்லாதவர்களுமே ‘நீ எங்க வீட்டுப் பொண்ணு’ என்பதாய் தங்கச்சி, மகளே, மருமகளே என்றெல்லாம் இழைவதுதான் இவளுக்குப் பிடிக்கும். ஆனால் இப்போது ப்ரவியின் இந்த பேச்சு முறைதான் உலகத்திலேயே சிறந்த ஒன்றாகப் படுகிறது அவள் மனதிற்கு.

கண்டிப்பாய் எங்கள் உதவி உனக்கு உண்டு, ஆனால் அந்த உதவியைத் தவிர எங்களிடம் உன் வகையில் வேறு நோக்கமே இல்லை என்பதுதானே இதற்குப் பொருள். வேணிக்குள் வெகுவான பாதுகாப்பு உணர்வு.

பவியின் முகத்தை திரும்பிப் பார்த்தாள் இவள். பவியோ ஆழ்ந்த திருப்தியின் அடையாளத்தை சுமந்த சின்னப் புன்னகையுடன் ப்ரவியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘தெய்வமே என்னைக்கும் இவங்களுக்குள்ள இருக்க இந்த புரிதலும் அன்பும் அப்படியே இருக்கட்டும்’ என நெகிழ்ந்து போய் இறஞ்சுகிறது இவளது பிஞ்சு மனது.

அதே நேரம் ப்ரவி அகலவும் இவளிடம் திரும்பி “அந்த பால்கனி எதுவும் மிரட்டுற போல பேசினானோன்னு நினைக்காங்க போல” என தன்னவனின் பேச்சுக்கு முழு விளக்கம் சொன்னாள் பவி.

“அப்படில்லாம் எதுவும் இல்ல மேம்…” இந்த கடிதம் ஒருவேளை அவனது செயலாக இருக்குமோ என யோசித்துக் கொண்டே பதில் கொடுத்தாள் வேணி.

அன்று இரவு முழுவதும் வேணியின் மனம் இதில்தான் சுற்றிக் கொண்டிருந்தது. ப்ரவியையும் பவியையும் பிரிப்பதால் அல்லது இந்த ஊரைவிட்டு அனுப்புவதால் யாருக்கு என்ன லாபம் இருக்கக் கூடும்?

அந்த இடத்தை அப்படியாவது தனக்கு வித்துடுவாங்கன்னு பால்கனிதான் இப்படி செய்றானோ? ஒரு லெட்டருக்கு பயந்து ஒரு இடத்தை யாராச்சும் விப்பாங்களாமா? இல்லனா இவள மேரேஜ் செய்து தரலைனு பவிக்காவ இப்படி பழி வாங்குறானா அந்த மொட்டமாடி? அப்படினா இவளாலதான் பவிக்காவுக்கும் SPசாருக்கும் பிரச்சனையா?

இதை எப்படியாச்சும் இவ கண்டுபிடிச்சாகணுமே!

அடுத்த பக்கம்