துளி தீ நீயாவாய் 1 (3)

அவள் சொல்வதன் அர்த்தம் புரிய புரிய இப்போது இவனுக்குள் குத்தி எழும்பிய சுயம் ரத்த நாளங்களில் ரௌத்திரம் பாய்ச்சி சுர் என முகம் நோக்கி சுட சுட துள்ளி ஏறுகிறதுதான்.

ஆனால் அதையும் தாண்டி நொடிக்கு நூறாயிரம் கன அடி வீதத்தில் வந்து விழுகிறதே  ‘இப்படியெல்லாம் யோசித்துக் கொள்ளும் போது அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? எத்தனை வலித்திருந்தால் இப்படியெல்லாம் இவளால் பேச முடியும்?’ என்ற கேள்வி நிலை.

எதைச் சொல்லியாவது என்ன வேண்டுமானாலும் செய்தாவது அவளை நடந்துவிட்ட காரியங்களிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வந்துவிட இவனுக்கு வெறியே இருக்கிறதுதான். ஆனால் என்ன செய்ய வேண்டும் இவன்?

அதற்குள் இவர்கள் வீட்டு கேட்டை யாரோ திறக்கும் சத்தம். மெல்லியதாய்தான் எனினும் துல்லியமாய் காதில் விழுகிறது அவனுக்கு.

வீட்டிற்கு முன் ஓரளவு வெகு அதிகமாகவே காலி இடம் இருக்க, அதற்கும் முன்புறம் இருக்கிறது அந்த கேட் என்பதால் பவி அந்த சத்தத்தை கவனித்திருக்கவில்லை.

ஆக குறுக்கே வந்தவன் எதுவும் சொல்லாமல் நிற்கவும், அவனை தாண்டிக் கொண்டு வீட்டின் கதவை நோக்கிப் போனாள்.

இப்போது பவிக்கும் கேட்கும் வண்ணம் இவர்களது வீட்டு கதவிலேயே கேட்கிறது சாவியின் சத்தம். வீடு உள்பக்கமாய் இவர்களால் பூட்டப் பட்டு இருக்க, வீட்டின் இரண்டு சாவியுமே இவர்களிடமே இருக்க, யார் அது இப்படி பட்டப் பகலில் வந்து கதவை திறக்க முயல்வது?

இதற்குள் பவியின் கையிலிருந்த சாவியை வார்த்தையின்றி கேட்டிருந்தான் அவன். கதவின் மேல் சென்றிருந்த கவனத்தில் மறுப்பின்றி கொடுத்திருந்தாள் அவளும்.

நேராக சென்று கதவை திறந்தான் அவன்.

சாவியும் கையுமாக அதிர்ந்து போய் அங்கே நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண். பதினேழு பதினெட்டு வயது இருக்குமாயிருக்கும்.

தொடரும்…

துளித் தீ நீயாவாய் 2

7 comments

  1. Heyyyyy!!! Kadhai again revive paniteengala? Super super… 😁
    Mudhal epilaye suspense a? Anna ma’am oda muthirai mudhalaye balama kuthiteenga ponga 😂
    Weekly once dhana? Seri suspenselaye oru varatha otitu next friday ododi varom.

  2. Super pavi um praviyum epidi set aguranganu parpom. Ha ha ava oru pakam sari oru pakkam true pa in the cotton sarees sometimes ipudi than namala bulb vanga vaikum. Ipo entry kudutha VIP yarungo

Leave a Reply