துளி தீ நீயாவாய் 7(9)

ரு கையை லாரியில் ஊன்றி அடுத்த கையால் புகை இழுக்க வாய்க்கு உதவியபடி சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த போலீஸ்காரன். இரவு தந்த கருப்பு இருட்டை அவ்வப்போது அருகில் சாலையை கடக்கும் வாகன ஒளிகள் விரட்ட முயன்று கொண்டிருந்தன.

ஆனாலும் அசையாமல் அடமாய் கிடக்கிறது இருள்.

ட்ரைவரை வேறு காணவில்லை. மோட்டலுக்குத்தான் போயிருப்பானாக இருக்கும்.

‘வல்வோ நிக்ற மோட்டலா இவனுக்கு? கைல கணிசமா காசு இருக்கு போல, எதையாவது சொல்லி ரெண்டு மூனு நூற வாங்கிடலாம்’ கணக்கிட்டபடி இவன்.

சரியாய் அதே நேரம் புகை பிடித்த அந்த கையில் பின்னிருந்து ஓங்கி விழுந்தது அது. அடியா அல்லது எத்தா??

தெறித்துப் போய் தூர விழுகிறது இவனது சிகரெட்.

“ஹக்” என்ன ஏது என புரிந்து இவன் அலறுவதற்குள் பின்னிருந்து யாரோ அவன் வாயையும் பொத்திவிட,

தர தரவென லாரியின் மறு பக்கத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறான் அவன்.

ஈரத்தரையில் முடிந்த வரை தன் கால்களை உதைந்து எப்படியாவது தன்னை விடுவித்துக் கொள்ள இவன் போராட,

தன் கைகளால் பின்னிருப்பவனை குத்துவிட அலைபாய, இவனது பரும சரீரத்திற்கு அது ஒன்றும் சாத்தியப்படவில்லை.

அங்கோ அடுத்து அடுத்து விழுகிறது இவன் தாடையில் சரமாறியாய் குத்துகள். இடுப்பிலும் இன்னும் எங்கு எங்கோ இடி போல உதைகள்.

ஆனால் சத்தம்தான் போடத்தான் முடியவில்லை இவனால். வாய் இன்னும் பொத்தப்பட்டே இருக்கிறதே!

லாரிக்கு பக்கவாட்டில் வந்துவிட்டதால் சாலையில் செல்லும் வாகன ஒளி கூட இங்கு கிடையாது. யார் இவனுக்கு உதவிக்கு வரக் கூடும்? யார்தான் இவன இங்க வந்து அடிக்கவும் முடியும்?

இங்க இவனுக்கு எதிரின்னு யாரு?

“வீட்டுக்காரி என்ன நீ வாங்கி வச்சுருக்க செருப்பா விளக்குமாறா? உனக்கு தோணுறப்பல்லாம் அடிக்க?”

அடித்தவன் சொல்லும் போதுதான் இவனுக்கு அடி விழும் காரணமே புரிகிறது.

“ஹக்” என் பொண்டாட்டிய நான் அடிப்பேன் உதைப்பேன் நீ யார்டா கேட்க? என்பது இவ்வளவாய் மட்டும்தான் வெளியே வருகிறது இவனுக்கு.

“என்ன? என் பொண்டாட்டி நான் அடிப்பேன் டயலாக்கா? உன் வழியிலயே வர்றேன், நீ இப்படி எடுத்ததுக்கெல்லாம் கை நீட்றத பார்த்து பொண்ணுங்கல்லாம் போலீஸ்காரனையே கல்யாணம் செய்ய மாட்டேன்னுட்டாங்களாம், அப்ப அது போலீஸ் டிப்பார்ட்மென்டுக்கு இழப்புதானே, அதான் நான் போலீஸ்ங்கற முறையில் உனக்கு…” இது கிண்டல்தான் என்றாலும் விழும் அடி ஒன்னொன்னும் இன்னும் அதே உக்கிரத்துடன்.

“க்க்க்ஹா”

“ஆம்பளைங்களே இப்படித்தான், எதுக்கு கல்யாணம் பண்ணி நாங்கல்லாம் கஷ்டப்படணும்னு பொண்ணுங்க கேட்காங்களாம்? ஆக இது ஆம்பிளைங்க சார்பா” இதுவும் நக்கல்தான். வார்த்தைகளுக்கு மட்டும். எத்தல் எல்லாம் எப்போதும் போல் எஃபெக்டிவாகவே இருக்கிறது.

“க்ஹ்ஹ்”

“கேட்க ஆளிலில்லன்னு யார் மேல கை வச்சாலும், எவனாவது வந்து கும்மிட்டு போவான்னு எப்பவும் பயம் இருக்கணும், அதுக்குத்தான் இது” இதில் கிண்டல் என்பது சுத்தமாய் இல்லை.

“அடிச்சான் பிடிச்சான்னு உன் வீட்டம்மாட்ட கூட மூச்சுவிட்டியோ உன் வண்டவாளம் அத்தனையும் எவிடென்ஸோட ஐஜி வரைக்கும் அப்டேட் பண்ணுவேன், திரும்பிப் பார்க்காம ஓடிடு” ப்ரவியின் இந்த கடைசி வாக்கியத்தில்,

அவனை பிடித்து ப்ரவி தள்ளிய வகையில் திரும்பிக் கூட பார்க்காமல் அவன் ஓட்டமும் நடையுமாய் இடத்தை விட்டு அகல,

இருட்டில் நின்றிருந்த ப்ரவியின் தோளில் பின்னிருந்து வந்து அமர்கிறது அது. அலர்ட்டாய் திரும்பிய ப்ரவிக்கு எதிரில் நிற்பவனின் முகம் தெரியவில்லை.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 8

 

17 comments

 1. Superb update mam. Appadiyo Paviku konjam konjam maaga bulb eriya arambichuruchu. That too final part of Pravi’s strong kavanipu for the another policekar is ultimate mam.

 2. Pravi oda Soduku punishtment vithyasama, refreshing a iruke. Indha bus travel pakurapo apdiye oru Jab We Met feels!!! Reminds me of Adhik and Reyu scene from your previous seriez.
  So thirudan vera edho ulterior motive la panran… Panama iruka vaipilanu thonudhu. Maybe he gets a kick out of fooling the cops and making a joke out them, i suppose?
  I keep falling for Pravi with every passing epi… adhigama pesadha, epavadhu sirikura, neraya yosikura, elarukuma pathu pathu nadandhukura romba nalla nallavana irukane!
  I guess oru aanoda POV la irundhu avanga love a recognise panra emotions lam ivlo azhaga, unnippa rombave ganniyama yaralayum soliruka mudiyadhu. Loving it.
  And andha abusive police? He deserves every hit he got. Yarra adhu enga Pravi ke shock kudukuradhu? Oru vela indha character dhan kadhai flow mara pivotal a iruka poradha? Or idhan nama Pravi oda rasigana? I guess the latter fits the anonymous caller.
  But enaku oru doubt. Sadharnama aanum penum serndhu ponale thapa pesura indha society la Pavi oda indha brought up ku edhirpu kelambamala irundhurukum? Andha justification epdi?
  Dhayapa yen inum scenela varave ila?and Karun um direct a varala, oru phone convo matum dhan.

  • செம்ம interesting cmnt sis உங்களோடது. ஒவ்வொரு கமென்டுக்குமே ரொம்ப எதிர்பார்ப்பேன் உங்களோடத…உடனே ரிப்ளை செய்ய ஆசையா இருக்கும், பட் இதுவரை TTNல ஒழுங்கா செய்யல, அதான் இங்க இப்பவே செய்யணும்னு வந்துட்டேன்.
   First of all romba romba Thanksssssssss
   ஹ ஹா சொடக்கு போடுறது பிடிச்சுதா? அது சின்ன வயசில் என்னோட கசின் ஒருத்தங்க யார் கொஞ்சம் கவனக் குறைவா இருந்தாலும் பிடிச்சு வச்சு செய்து விட்டுடுவாங்க… அவங்கள பார்த்தாலே குட்டீஸ் நாங்க தெறிச்சு ஓடுவோம்… அங்க இருந்து சுட்ட ஐடியா.
   Jab we met…முன்னமும் மென்ஷன் செய்துருந்தீங்க… நான் அந்த மூவி பார்த்தது இல்ல… சிமிலாரிட்டி எதுவும் இல்லைதானே! அந்த ரேயா ஆதிக் மட்டுமில்ல சிஃஸ் கவனிச்சு பார்த்தா என் சீரீஃஸ்ல நிறைய ட்ராவல் இருக்கும். பொதுவா நான் ரொம்ப எஞ்சாய் செய்றது ட்ராவல்தான்றதாலயா இருக்கும் கதையில் அது அதிகமா வருது.
   உங்களுக்கு repetitive bore ஃபீல் வந்தா சொல்லுங்க. மாத்த ட்ரைப் பண்ணுவோம்.
   திருடன் மோடிவ் என்னதுன்னு பார்த்துடுவோம் சிஸ்.

   I keep falling for Pravi with every passing epi… adhigama pesadha, epavadhu sirikura, neraya yosikura, elarukuma pathu pathu nadandhukura romba nalla nallavana irukane!

   soooooooooooooo swwweeeeeeeeeeeeetttttt

   I guess oru aanoda POV la irundhu avanga love a recognise panra emotions lam ivlo azhaga, unnippa rombave ganniyama yaralayum soliruka mudiyadhu. Loving it.

   Thanksss சிஸ், ketkappa semma happyyy ay iruku… கொஞ்சமா என் ஹஸ்பென்ட்ட ஐடியா கேட்டேன்.

   And andha abusive police? He deserves every hit he got. Yarra adhu enga Pravi ke shock kudukuradhu? Oru vela indha character dhan kadhai flow mara pivotal a iruka poradha? Or idhan nama Pravi oda rasigana? I guess the latter fits the anonymous caller.

   Wowwwwwwwww

   But enaku oru doubt. Sadharnama aanum penum serndhu ponale thapa pesura indha society la Pavi oda indha brought up ku edhirpu kelambamala irundhurukum? Andha justification epdi?

   Sis இந்த brought up னா எதை சொல்றீங்க? ப்ரவிட்ட பவி இவ்ளவு பழகுறதா? கவனிச்சீங்கன்னா பாருங்க ஊர்ல பொதுவா அது ப்ரவிக்கு அண்ணி பொண்ணுன்னு கூட I mean முறை வர்ற பொண்ணுன்னே சாதாரணமா மனசுல இல்லன்ற போல காமிச்சுருக்கு,
   ரெண்டாவது வீட்டுக்குள்ள அவங்க பழகுறதுக்கும் வெளிய அவங்க பேசுறதுக்குமே வித்யாசம் இருக்காப்லதான் சொல்றோம் இல்லையா?
   ப்ரவி பவிய தொட்டு போசுறப் போலயே சீன் இருக்காது.
   சொடக்குப் போடுறது…இந்த ஒரு விஷயத்துக்கு நான் ரொம்ப யோசிச்சேன்தான்…
   நான் மாமா மகன்கள் புடை சூழ வளந்த ஜீவன். எனக்கு 20 வயசு மூத்தவங்கல்ல இருந்து பத்து வயசு இளையது வரைக்கும் எல்லா ஏஜ் க்ரூப்லயும் கசின்ஸ் உண்டு.
   வருஷம் ஒரு டைம்தான் மீட் பண்றாப்ல இருக்கும்…மே வெகேஷன்ல… ஆனா ஃப்ரென்ட்ஸ்னா அவங்கதான் ரொம்ப காலமா.
   வெவ்வேற ஊர்ல வளந்தாலும் அந்த மீட்டிங் பாய்ண்ட் எங்க பூர்வீக கிராமமாதான் இருக்கும் பெரும்பாலும்.
   ஒன்னு ரெண்டு படிக்கப்பவே யாரும் தொட்டு பேசி பழகுவது இல்லை எங்கள் வீடுகளில். கூடப் பிறந்தவங்களா இருந்தாலுமே அப்படித்தான்.
   ஆனா ரெண்டு கசின்ஸ் ஒருத்தன் என்ன விட மூனு மாசம் மூத்தவன், இன்னொருதங்க ஃப்யூ இயர்ஸ் மூத்தவங்க அவங்க ரெண்டு பேர் கூட 10த் 12 படிக்கிறப்ப கூட நான் ஆர்ம் ரெசிலிங் செய்ற வழக்கம் உண்டு.
   வீட்ல அம்மா மாமான்னு எல்லோர் முன்னாலதான் போட்டி வச்சுப்போம். யாரும் எதுவும் சொன்னது இல்ல.
   இதைதான் நான் பவிக்கு சொடக்குன்னு கொண்டு வந்தேன்.
   அந்த ஆங்கிள்ல எனக்கு அதுக்கு எதிர்ப்பு வரும்னு தோணல.

   ப்ரவியும் பவியும் கூட அப்படி படிக்கிறதுக்காக ஹாஃஸ்டல்ல வெளிய தங்கி இருந்து வருஷம் ஒரு டைம்தான் மீட் செய்துக்கிறாங்கன்னுதான் கதையிலும் வரும்.
   பொதுவா சிட்டி பிள்ளைங்க அப்படின்னு டேக் ஆகுறப்ப வில்லேஜ் ரொம்ப நோண்டுறது இல்லன்னுதான் நினைக்கிறேன்.
   அதோட வில்லேஜ் பீபுள் இவங்கள பார்க்கும் வாய்ப்பே ரொம்பவும் கம்மியும் கூட. அதனால ஜஸ்டிஃபிகேஷன்னு இதுக்கு நான் பெருசா கதையில் ப்ளான் செய்யல.
   ஆனா பின்னால பவிக்கு ப்ரச்சனை ஆகுறதே இந்த வளர்ப்பு முறைன்னு வந்து அமையும் ப்ளாட். அது வர்றப்ப படிச்சுட்டு சொல்லுங்க.
   Thankssssssss a lot.
   ரொம்ப ரொம்ப எனர்ஜி கொடுக்றது உங்க கமென்ட். Thankssssss again

   • Wow, romba naal kalichu unga reply.. Afroz happy annachi!!! Ila ma’am, i felt that Pavi-Pravi’s interactions were extremely good and decent enough. Adhula enaku idikala. Dhayapa, Karun, Pravi nu 3 aangal matume avala valathurukanga. As in, there wasnt a lady around in the house with them. Idha thapa paka matangalanu dhan thonuchu. Neenga sonapla vacation apo dhan meet, so maybe adhunala prachana varalayo enavo. As you say that this by itself is the root cause of future issues, let me wait and see how it flows. Thanks for your detailed reply ma’am, it definitely makes my day. BTW, endha scene um repititive a lam ila, i was just drawing similarities here. Love everything, keep rocking it!

 3. Police Karra epovum pola inthe epilayum remba pidichathu. Athilum anthe pulthaduki bayilvan pondatti kitte veeratha kamichare anthe ala porati eduthathu rembaaaa pidachathu super pravi.
  Avaroda kuthuvizhaku ku bulb konjam konjam a bright a eriya arambichiruku appa pravi ku nimathiyo iliyo enaku remba happy. Past um present uma nalla kondu poreenga story a super.
  Pavi kutty than a pravi pinadi nikirathu.

 4. புலர்ன்த மனப்பிரான்தியத்தில் புது புரிதல்…😍
  how well those three men protected her throughout till and how well they showered love and affection on them…the bonding and pasam is extremely awesome ka…👌👌
  whats the plan of mr.thirudan….very clever planning aah👌 irukee..ராஜமாதா .ஹா ஹா தயாப்பா
  they way u portray the attitude ans style of pravi is aweoooosomeeeeee
  ka….stylish chellakutie.😘😘😘😘😘😘.ena manushyan yaa tat dayappa…♥️♥️🙏.nan pona epi la subathra vo susithravo enganu keta dbt cleared….ka…sooooo great of him..inaindhu thuliyai ithazhil irundhu paravum punnaigai…😘🤣😉.awesome word usage…enada imbutu konjala thangam velli darlz nu midila…
  the situation which u made pravi realised his affection was worth…last la varatha yar pavi ya ila mr.thief ah..???and police action. semma..👏👋byeee ka… waiting for your reply…🤗😘hugs and love

  • Veryyy veryyy happyyyy to see your cmnt ponney…

   ப்ரவி பவி தயா வீட்டு family bonding பிடிச்சுதா?…me happyyyyy 😀 😀

   திருடன் க்ளவரா இருந்தாலும் அவன் திருடனேதான்… அதுதான் அங்க ஹின்ட் 😉
   stylish chellakuttyyy…. woweeeeeeeeeeee pravi paas aakitaarnu nambuvom.. <3 <3

   suchitra...antha part ai detail out seya avlava ishtam illa , athaan flowla mention seythutu pokanumnu ipdi move aakiduvom...
   thuliyaal ithazhil...pidichutha... <3 <3

   ha ha overa thaan konjuraangalo..athu karun apdi thaan over vaay..antha vaayla onnu poda solliduvom... ha ha

   town busla bodhi maramnu ponnuku sollitu pravi paiyanukku thaan bodhi maram nigalnhthuruku... love la dobukadeernu vilunthing... 😛
   pinnala varathu yaarunnu next epila paarthuduvom...

   thanksssss for such asweet comment ... <3 <3 <3

  • Thanks sis…present la ini thaan sis kathaiye unfold aakum…veni track thaan main ah pokum… pravi pavi track mainlly Fb thaan… athula thaan pavi praviku enna issue aachunu varum. so ithellaamey kathaiku thevai padum scens thaan sis . Thanks for sharing your views sis.

 5. முதல் கமெண்ட் நம்ம உப்புமா மேட்டருக்குத்தான்.. சுப்பம்மா பேர உப்புமா ன்னு மாற்றி வைச்சுக்கோ. ஆனால் எனக்கு உப்புமாவே பிடிக்காதே.. இந்த வரிகளுக்கு சிரிசுகிட்டே இருந்தேன் சிஸ்.
  அடுத்து பவியோட தயக்கங்கள் எல்லாமே அழகு தான். அது இயற்கையும் கூட. தயா ஏன் அவளை ப்ரவிக்குன்னு யோசிச்சார்ன்னு சொன்னதுக்கு ரீசன்ஸ் சரியா இருக்கு. & அந்த பஸ்லே போகும்போது கூட அவளுக்குத் தெரிந்த விஷயங்களே என்றாலும் கூட அவளைக் காயப் படுத்தக் கூடாது என்று யோசிக்கும் ப்ரவி.
  அந்த போலீஸ்காரர் செய்த தப்பு தான் பவிக்கு ப்ரவியா கணவனா ஏத்துக்கத் தயக்கதக் கொடுத்து இருக்குமோ என்ற கெஸ்.
  போலீஸ்காரருக்கு சொடக்கு எடுக்கிறது என்றால் அத்தனைக் கூச்சமா.. ஹ..ஹ.. கிடைச்ச சான்ஸ் மிஸ் பண்ணாமல் பவி ஒரு வழி செய்துட்டா.
  ப்ரவி போலீஸ அடிச்ச அடி.. செம. சரியான தண்டனை.
  ப்ரவியின் தோளில் கைபோடுவது பவி தானோ.
  அந்த வில்லன் செய்வது வில்லன் வேலையா.. அல்லது இன்பார்மர் வேலையா? எனக்கு இரண்டாவது என்பதாகத் தான் தோன்றுகிறது.
  கதையின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும்.? தெரிந்து கொள்ள வைடிங்.
  கதையின் வார்த்தை ஜாலங்கள் எல்லாமே அழகு.

 6. Hi sistr kadantha knja naatkala than unga stories padika start pannen rmbavum arumayana kathaigal anaku.rmba pudichiruku unga writng. Intha story innikithan 7 epium padichu mudichen rmba intrstnga eruku adutha epi padika, aduth epi yeppo poduveeganu solla mudiuma

  • Welcome abode <3 <3 unga cmnt paarthathil rombavum happyyy pothuva weekly oru epi post seyven sis..saturdays la varum epi...ippo rendu book book fairkaaka publish seytheyn... athanala last month brk...ippothaan intha epi post seythurukken... so weekly twice epi poda try pannuven.. Thanks a lot

Leave a Reply