துளித் தீ நீயாவாய் 20 (13)

ஆனால் இதையெல்லாம் அவள் யாரிடத்தில் பகிர்ந்து கொள்ள? இவளிடம் பேசிக் கொண்டிருக்கும் ஒரே நபர் பால்கனிதான், அண்ணன் என மனதில் பச்சையாய் குத்திக் கொண்டாலும் இப்போதுதான் அறிமுகமாயிருக்கும் ஆணிடம் எத்தனையாய் இவள் மனதை திறந்துவிட முடியும் இவளால்? ஆக அவனிடமும் எதையும் காட்டிக் கொள்ளாது, ஒரு தங்கையின் பேச்சுக்களோடு மட்டும் அவன் முன்னிலையில் வளைய வந்து கொண்டிருந்தாள்.

இந்த வேளையில்தான் நடந்தேறுகிறது வேணியின் இந்தப் பகிர்தல்.

தன் அம்மாவைவிட பவித்ரா வேணியை பார்த்து பார்த்து பொத்தி வைத்துக்கொள்வதாகத்தான் இவளுக்கு இதுவரையுமே உணர்வு, முதல் நிகழ்வில் வேணியைப் பார்க்கவும் இவளுக்கு பிடிக்காமல் போக முக்கிய காரணமே அதுதான், அதில் அந்த பவித்ரா இவளுக்கு சொந்த அக்கா இல்லையாம்! வேணியின் இந்த கடந்த காலம் தெரிந்தும் பவித்ராவும் sp சாரும்  அவளை இத்தனையாய் வைத்துக் கொள்கிறார்கள் என்றால், இதெல்லாம் தெரிந்தும் இந்த பால்கனி வேணியின் மீது இத்தனை உயிராய் இருக்கிறான் எனில், இவள் செய்து வைத்திருக்கும் காரியங்கள் வேணியின் செயலைவிடவும் வெகுவாகவே மோசம்தான் எனினும், தன்னை உணர்ந்து திருத்திக் கொண்ட பின் இவளிடம் நட்பு பாராட்டவாவது நாலு பேர் இருப்பார்களாக இருக்கும்தான். அத்தனை நம்பிக்கை வந்திருந்தது இவளுக்கு. கூடவே இவளுக்கு இப்படி நம்பிக்கையைத் தர வேணி தன்னைப் பற்றி இத்தனை அந்தரங்கமான காரியத்தை வெளியிட்டது வெகுவாகவே நெகிழவும் செய்திருந்தது இவளை. பவித்ரா வேணியின் மீது வைத்திருக்கும் பாசத்தைவிட இது ஒன்றும் குறைவானதாய் படவில்லை இவளுக்கு.

அதிலும், இவை அத்தனையிலுமாய் உருகிப்போய் அணைத்திருந்தாள் வேணியை. அதோடு வேணி சொன்ன “நமக்கு இன்னும் நாட்கள் கொடுக்கப்படுத்துன்னா, கடவுள் நம்ம வாழச் சொல்றார்னுதானே அர்த்தம்” என்பதின் மீதும் வெகுவாக ஒரு நம்பிக்கை வருகிறது இவளுக்கு. இல்லைனா இந்த வேணி, பால்கனி அண்ணா, பவித்ரா மேம் போல ஆட்கள்லாம் இவ லைஃப்ல இப்ப ஏன் வர்றாங்களாம்? இவளுக்கு கிடச்ச இந்த செகன்ட் சான்ஸ இவ சொதப்புறதா இல்ல. வேணி சொன்ன மாதிரி பெஸ்ட்டாதான் செய்யப் போறா!

‘உண்மை இருக்க இடத்துல ஜீவனும் இருக்குமாம்’ கான்செப்டில் இவளும் கால் பதித்தாள்.

வேணியின் இந்த கடைசி கட்டப் பேச்சில் அசந்துதான் போனான் பால்கனி. அவள் விழுந்த முறையை எண்ணி இவன் வருந்திக் கொண்டு இருக்க, அவளோ எழுந்து நின்ற வகையில் இவனை அசரடித்தாள். பிடித்தது அவளை இன்னுமாய் பிடித்தது, பெருமிதமாய் கூட வருகிறது.

என்ன ஒரு மனோபலம்! ரசித்தான். தான் விழுந்ததைச் சொல்லி, அடுத்த உயிர தூக்கிவிடுறாளே! ஆராதித்தான்.

மதுவுக்கும் இவளுக்குமாய் வளரும் இந்த பந்தமும் இவனுக்கும் மனதுக்கும் பாந்தமாய் இருக்கிறதுதான். தன் தங்கைக்கும் மனைவிக்கும் ஒத்துப் போகிறதென்றால் ஒரு ஆணுக்கு வருமே அந்த வகை சந்தோஷம் இது. ஆனால் அதே நேரம் அடி மனதில் வந்து விழுகிறது ஒரு பய முடிச்சு.

தொடரும்…

துளித் தீ நீயாவாய் 21

வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்.

வேணி FB படிக்கும் போதே பலர் புரிந்து கொண்டிருப்பீர்கள்… ஆம் இது நிஜ நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று, அதனாலதான் அது ஹார்ஷாவும் இருக்குது.  நிஜ வேணி மற்றும் வேணி போல் தெருவில் நிறுத்தப்படவில்லையெனிலும்  மற்ற எல்லாம் நேர்ந்த சில பெண்கள் கவுன்சிலிங்/ ஆறுதல்/ நட்பு என்ற வகையில் என்னிடம் மனம் திறந்தது உண்டு. ஏறத்தாழ எல்லோர் நிகழ்விலும் ஒரு பேட்டர்ன் இருக்கும், சில வார்த்தைகள் எல்லோர் நிகழ்விலும் பேசப்பட்டிருக்கும், சில உணர்வுகள் எல்லோருக்கும் உண்டாகி இருக்கும். ஆக அதை நானும் அப்படியே எடுத்து பயன்படுத்தி இருக்கிறேன். மொத்தத்தில் நான் சொல்ல வருவது, இது உறுதி செய்யப்பட்ட யதார்த்தம். இதை கதையில் கொண்டு வரும் ஒரே நோக்கம், ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும் எண்ணம்

நன்றி

 

8 comments

 1. Veni yai balcony love pandra reason balcony oda Anbu Ku engura manasai katudhu….but rohan pola balcony Appa pola alungata it is not worthyyy..
  And coming to veni…how come these girls blindly go beyond a man nu purila..as you say we witness these kinds of things in day to day news….then also they get cheated….and when men comes with these kind of words they shud be careful..at least this may be a eye opener for one or two…akka…
  Such a healing epiii..my reaction was like balcony witnessing veni…wowwwiee…apdi….ava madhukaga iranki vandhu pesurathu…opening up…elame awesome….

 2. Yarunu theriyadhavnga nama mela katrai is like god’ s blessing…apdi than veni and madhu are blessed…and madhu I think she is extra special..bcz Pavi manasara endha thapum seyala..so she was able to convince veni but veni actually made a mistake of course in the name of love and she realised it and it was not easy for her to open up…this could have turned other way round if mahdu didn’t have respect for veni or realised it…but veni without thinking that she showed such selfless love ….
  Each and evry character in this story shows selfless love starting frm dayapa , then Pavi and pravi now balcony and veniii …to madhuuu
  Loveeee ittttt…eager to knw about Mr.thief

 3. An episode with too many deep pockets of information/awareness for the society. Every emotion that Veni has gone through is spot on with regards to a young love that lacks maturity. Endha varthai sona adhu endha madhiri result a kudukumnu therinju dhane pasanga pesuranga. Its high time that parents sit down with their kids and educate them about such harmonal swings rather than shying away from these talks. Maybe Veni oda ammavo appavo avakita startinglaye porumaya ena vishayamnu ketu visarichurundha ivlo dhooram ayrukadhunu thonudhu Or rather, Veni should have had the freedom to speak out about her thoughts regarding such a proposition. Again, it comes down to one crucial aspect of every relationship- Clear and Open Communication.
  Rohan madhiri neraya per nadamaditu dhan irukanga. Its our duty to set one’s own Hard and Soft limits and stick onto those with vigor. Ilana lesana mana sanjalathula easya mind maridum, as in Vani’s case.
  But Veni idhula irundhu meendu vandadhu Brammippa iruku, sandhoshamavum iruku. Kudos to Pavi for inspiring such a change🔥
  Balcony oda feelings ipo dhan inum better a puriyudhu. Hope that he doesnt get trapped in the Bulletkaran(Naveen’s) schemes.😪
  Apdina Veni-Karun ku No scope for duet ah???! Lyta disappointed, i was rooting for Karun 🙈
  Veni ku armed protection thara alavuku enna aabatha Pravi edhirpakuran? And why??
  Waiting to know more….

 4. Che che enada ipidi solita balcony and veni are perfect match.avanala than avala bathirama Mattum ila happy avum vachuka mudiyum. Inthe story la pravi hero va ila balcony a enakennavo polica6kara side akittu balcony score panranu than thoothu.
  Veni oda life is a lesson for the youngsters.havung a physical relationship with a man before wedding is not only illegal its against God. Ithe ponnunga mattum ila pasangalum epovum manasula vachirukanum.inthe Rohan mathiri veni a ethivittu kittu iruntha veena Mathiri alungakitte careful a itukanum.

 5. இந்த எபிசொட் பற்றி நிறைய பேசணும் சிஸ். அதை தனியா போடறேன். அதனால் இப்போ ஜஸ்ட் வாவ் அவ்ளோதான்.

 6. Wonder ful epi sweeetu
  Venu oda fb shockingah tan iruku
  Bt pavi venia ah kaiyaanda vitham alagu
  Palakani ku veni mela deep lv
  Parfect mactch.. avan manakkan mun varum katchiellam alagu
  Apdi nadanda sandosam ta
  Piravi protect pandra alavukku veni ku enna aanathu varapodo
  Waiting to readmore

Leave a Reply