துளித் தீ நீயாவாய் 20 (11)

ஆக்சுவலி அவளோட அப்பா அம்மா உறவெல்லாம் கட் பண்ணி விடுற மாதிரில்லாம் இவனுக்கு எந்த ப்ளானும் கிடையாது. பின்ன இவனோட கேர்ள்ல ஏங்கிப் போவா! ஆனா அப்படியே இவங்க மேல ஒரு அட்மிரேஷன்ல மட்டும்தான் அவள் வீட்டாள்கள இவன் வச்சுருக்கணும், அப்பதான் அவட்ட பழசெல்லாம் கிளறாம பாசமா மட்டுமா பேசிட்டுப் போவாங்க. இது இவனது திட்டக் கோணம்.

அடுத்த காட்சி

இரவு வீடு திரும்புபவன் பழக்க தோஷத்தில் தன்னிடமிருந்த சாவியால் தன் வீட்டுக் கதவை திறக்க முயல, அதற்குள் உள்ளிருந்து வேக வேகமாகக் கதவைத் திறந்தாள் அவள். திருமணமாகிவிட்டது போலும்!

“வாங்கபா” என வரவேற்கும் கடமையை வந்த வேகத்தில் நிறைவேற்றியவள், “இதோ ஒரே ஒரு நிமிஷம்” என அதே வேகத்தில் திரும்பி வீட்டுக்குள் ஓட முனைய,

முட்டை தாண்டிய ஒரு பெர்முடாஸும், முழங்கை வரை ஸ்லீவும் முழு காலருமாய் ஒரு டிஷர்ட்டும் அணிந்து, சீவாத முடியை சும்மா கொண்டை போட்டு,  ஒரு முக்கால் பையன் கெட்டப்பில் இருந்தவளை அவள் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் சட்டென கை நீட்டி இடையோடு பின்னிருந்து இவன் வளைத்துக் கொள்ள, அப்படியே தன்னோடு சேர்த்து தூக்கியும் கொண்டான்.

“அச்சோ, விடு கரிஞ்சிரும்” என அவள் இங்கு அலற,

அதெல்லாம் அவன் சட்டை செய்ததாகவே இல்லை. “டேய் பொடியா எங்கடா என் பொண்டாட்டி?” என இவளையே விசாரித்துக் கொண்டு நிதானமாக தன் காலணிகளை கழற்றினான் அவன்.

இதுவரைக்கும் அவன் பிடியிலிருந்து விடுபட திமிறிக் கொண்டிருந்தவள், இப்போது தன் மறுப்பெல்லாவற்றையும் நிறுத்திவிட்டு “சரி போ, எனக்கென்ன உன் ஸ்னாக்த்தான் தீஞ்சு போய்டும்” என்றபடி இவனது அலைவரிசைக்கு வந்தாள்.

அவளையும் தூக்கியபடி, வந்தவுடன் கை கால் கழுவும் வழக்கத்தில் ஒரு குளியலறைக்குள் சென்றவன், அங்கு அவளை பக்கத்தில் இருந்த வாஷிங் மெஷின் மேல் அமர வைத்துவிட்டு, முகம் அலம்பியபடியே அன்றைய அவன் கதைகளையெல்லாம் சொல்லத் துவங்க,

தன் முட்டுகளை கட்டிக் கொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

வெளியே வரும் போதும் அவளை விட்ட படியே இவன் தூக்கிக் கொள்ள, “பேசாம இந்த வாஷிங் மெஷின தூக்கிட்டு எனக்கு அங்க ஒரு சோஃபா போட்றேன் நீ” என ஏதோ பேசி கொண்டு போனாள்.

தனக்கு யாரும் இல்லை என்ற எண்ணம் வெளியிலிருக்கும் வரை  இவனுக்குத் தோன்றுவதே இல்லை. ஆனால் இரவில் காலி வீட்டுக்குள் நுழையும் போது ஏனோ மனம் வெறுமையுறும். அதனால் இப்படி ஒரு ஆசைக் கோணம் போலும்.

இன்றைய அவள் சூழ்நிலைக்கும், என்றுமே இவனுக்கேயான வாழ்க்கை நிலைக்கும் இந்தத் திருமணம் எத்தனையாய் இருவருக்கும் அனுகூலமாய் இருக்கும் என்பதை அடிநாதமாகக் கொண்டு இன்னுமாய் எத்தனையோ காட்சிகள் ஆசையின் வெளிப்பாடாய்.

விழுந்திருந்தான் அவன் முழு மொத்தமாய் அவளுக்குள்.

இப்படியெல்லாம் இவனுக்குள் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் போது இவனைவிட்டு சற்று தொலைவில் நின்று அவள் இன்னும் அழுது கொண்டிருக்கிறாள் என்பதுதான் நிதர்சனம். அப்படி அழுகிறவள் இப்படி ஆசை ஆசையாய் இவனோடு வாழப் போகிறாள் என்றால் இவன் முடிவு செய்துவிட்டான் இதுதான் இவர்களுக்கான வாழ்க்கை.

இன்னொரு தடவ உன்ன அழ விடுறதா இல்லடி பொண்ணே!

இப்படி அவள்தான் இவனுக்கு என மனதினுள் சொல்லியபின் அது அந்த நினைவுக்கு கோட்டைகட்டி கோபுரம் எழுப்பிவிடாதா? இன்று வேணி இவனது உயிர்.

ஆக அந்தக் காதலை நெஞ்சில் வைத்துக் கொண்டு வேணியின் இப்போதைய பேச்சைக் கேட்க, அவள் வகையில் இவனுக்கு வருவது பரிதவிப்பே!  மது இனி வேணிய மதிப்பாளோ என்னவோ? தூரத்தில நிக்ற போலீஸ்காரன் காதுல இது விழாதுதான், ஆனா வேற யாரும் கேட்டுட்டா என்ன செய்ய? இவள யார் இதெல்லாம் வெளிய சொல்லிட்டு இருக்கச் சொல்றா? இயலாமை, ஆதங்கம், அவளை அப்படியே விட்டுவிட்டு போகவிடாமல் நிறுத்தி வைக்கும் நிர்கதியான நிலை எல்லாவற்றாலும் அங்கேயே நின்றிருந்தான்.

அடுத்த பக்கம்