துளி தீ நீயாவாய் 17(9)

அதில் இவன் தன் குழந்தை காலத்தைப் பற்றி குறிப்பிட்ட வகையில், அந்த உணர்ச்சிகரமான சூழலில் இவன் கையை பற்றிய மது, “செம்ம அண்ணா நீங்க, அங்க இருந்து நீங்க இவ்வளவு தூரம் ரைஃஸ் ஆகி இருக்கீங்களே” என பாராட்டினாள்.

எதையாவது சொல்லி அவனை சமனப்படுத்த அவள் அறிவுக்குப் பட்டதைச் செய்தாள். இதுவும் போதாது போல் தோன்ற,

“குள்ள தக்காளியவிட பூனம் பேர் ரொம்பவே நல்லாருக்கு” எனச் சொல்லி தன்னை அப்படியே அவன் அழைக்கலாம் என சுட்டிக் காண்பித்தாள். “ஆனா என்ன இருந்தாலும் பக்கத்து இலை பாயாசம் ரேஞ்சுக்கு பக்கத்துல கூட வரல இந்த பால்கனின்ற பேர்” என சீண்டி இனி அவனை பக்கத்து இலை பாயாசம் என்றே அழைக்கப் போவதாக அறிவித்தாள். அவனை சிரிக்க வைக்கும் முயற்சிதான்.

“உத வாங்கப் போகுது பார் ஒரு குள்ளதக்காளி” என அவன் இங்கு சொல்லிக் கொண்டாலும் இப்போது இந்த அன்யோன்யம் அவனுக்கும் இதயத்திலிருந்து வந்தது. இதில் நடிப்பு இல்லை.

“ஆமாவோ? முக்கியமான ஆள்ட்ட பெர்மிஷன் வாங்காம விட்டுட்டேன்ல” என இதிலும் வம்பு செய்தாள் அவள். “முத வேலையா இங்க நடந்த எல்லாத்தையும் அண்ணிட்ட சொல்லி வைங்க, சும்மாவே என் ஒரு பக்க கன்னம் அவ்ட், அடுத்த கன்னம் அடி வாங்காமதான இருக்குன்னு அலட்சியமா இருந்துடாதீங்க” என அவள் வேணியை குறித்து சொல்லிக் கொண்டு போக,

இவனுக்கு எப்படி இருக்கிறதாம்? வெளியரங்கமாய் ஒரு காதல் வர்ணம் அவன் கன்னக் கதுப்புகளில் கம்பீரம் பாய்க்க, ஆண் வகை வெட்கம் அரை விழுக்காடு கலந்த ஒரு வகைச் சிரிப்புடன் “அண்ணியா?” என கண்கள் மின்ன அவன் கேட்க,

“பின்ன? பார்த்தவுடனே இது கூடவா புரியாது?” என மது இப்போது விடை தர,  “ஒருத்தர ஒருத்தர் என்னமா சப்போர்ட் செய்தீங்க சண்டையில?” என்றும் சொல்ல,

இவனுக்கு செவி தொடங்கி செவ்வுதிரம் பாயும் தேகம் எங்கும் தேன்மாமழை. உயிருக்குள் ஒற்றை ஊஞ்சல் இரட்டை புறமும் இவனவளோடு இலக்கிய லயத்தில் வீசி ஆடியது. உற்சவம்.

“ஹ ஹா அம்மா தாயே இப்போதைக்கு இந்த அண்ணின்ற விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும், அவட்ட எதுவும் சொல்லிட்டியோ என்ன தலை கீழ கட்டி மரத்துல தொங்கவிட்டுடுவா” என இவன் சிரிக்க,

“எங்க? அண்ணி வந்து கட்டி தொங்கவிடவாங்கும்? அவங்க போய் தொங்குன்னு சொன்னா நீங்களேதான் கட்டிட்டு தொங்கிப்பீங்கன்னு நினைக்கிறேன்” மது அதற்கும் இப்படிச் சொல்ல,

இப்படியெல்லாம் இவனை வேணியோடு சேர்த்து கேட்கவே இவனுக்குள் ரஞ்சித வாசம் சந்தன தோப்புக்குள் சடுகுடு ஆடுகிறதே!

“வாலு” என இவன் இதற்கு மதுவை சொல்லிக் கொண்டிருக்கும் போது சிணுங்கத் தொடங்குகிறது அவளது மொபைல்.  பேச்சு சுவாரஸ்யத்தில் சின்ன புன்னகையோடே தன் மொபைலை எடுத்துப் பார்த்தவள் முகத்தில் முதலில் குழப்பம், அடுத்ததாய் அப்பட்டமாய் திகில்.

அரக்க பறக்க சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே “அண்ணா” என ஒரு பீதியோடு தன் மொபைலை இவனிடமாக நீட்டினாள். கனி என்ற எண்ணிலிருந்து வந்து கொண்டிருந்தது அழைப்பு. அதாவது இவனது மொபைலிலிருந்து.

இவன் எண்ணைத்தான் கனி என்ற பெயரில் இவன்தான்  சேமித்திருந்தான். அப்படியென்றால் இப்போதுவரை காரிலிருந்த இவன் மொபைலை இங்கு வந்து யாரோ எடுத்திருக்கிறார்கள், யார்? எப்படி??

முழு மொத்தமாய் முறுக்கேறி இறுக வெறித்தனமாய் சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தியபடியே ஒரு கையால் மதுவை கை பற்றி இழுத்துக் கொண்டு, மறு கையால் மதுவின் மொபைலை பிடுங்கி இணைப்பை ஏற்றான்.

அதீத அவசரமாய் காரைத் திறந்தே உள்ளே யாரும் இருக்கிறார்களா என உறுதி செய்துவிட்டு, மதுவை உள்ளே தள்ளி பாதுகாப்பாய் மூடியும் வைத்தான்.

“ஏல நாயே யார் நீ?” என மொபைலில் எகிறவும் செய்தான் எரிமலையாய்.

“ஹ ஹா உன் பங்காளிதான்” என சிரிக்க சிரிக்க வருகிறது பதிலாய் ஒரு ஆண் குரல்.

“டேய் கைல கிடைக்கிற அன்னைக்கு கண்டம் கண்டமா வெட்டிடப் போறேன்…” பால்கனி பற்றி எரிய ஆரம்பிக்கும் போதே,

“ஆனா I love youடி செல்லம்” என பிரகாஷ்ராஜ் டோனில் இவனை சீண்டிக் கொண்டிருந்தான் அழைத்திருந்தவன்.

“சை அப்ப நீ அசல் லூசுதான் போல, அனாவசியமா கோபப்பட்டுட்டேன்” பால்கனி இப்போது படு அலட்சியமாய் சொல்லியபடி இணைப்பை துண்டிக்கப் போக, பின்ன ஏதோ லூசு போன திருடிட்டுன்னு தோணுதுல இவனுக்கு,

“நரேன் பையா, மை டியர் லட்டு செல்லம், அப்போ எதுக்காக என்னை வளச்சு வளச்சு தேடிகிட்டு இருக்க? லவ் இல்லாமயா?” என ஒரு அமர்த்தலான கேள்விக்குப் போயிருந்தான் அழைத்தவன்.

இப்போது சர்வமுமாய் ஆடித்தான் போனான் இவன்.  நரேன் என்பது  சின்ன வயதில் இவனது அம்மா இவனை அழைக்கும் பெயர். இதையெல்லாம் இவன் இங்கு யாரிடமும் எப்போதும் சொன்னதே கிடையாதே! அப்படியானால் இது யார்??

“யார்டா நீ?” சற்று இறுகிப் போய் இவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஏனோ வயலில் வந்து ப்ரவியை மிரட்டிப் போனவனை இவனுக்கு மனதில் வந்துவிட்டது. சோலைராஜன் போலீஸில் போய் அந்த புலிக்காரனைப் பற்றி கேட்டதை அந்த எலும்பு பொறுக்கி ஈன இன்ஸ்பெக்டர் அங்குட்டும் துட்டு வாங்கிட்டு போட்டு குடுத்துருப்பானா இருக்கும்.

“call me Naren, buddy” என செம்மயாக வருகிறது பதில்.

“ஏன்னா நீதான நான்” என மகா தெளிவான ஒரு விளக்கம் வேறு.

“கிழிஞ்சிது” என சலித்துக் கொண்டான் இப்போது பால்கனி.

“புரியலையா பங்கு? சூப்பர் ஸ்டாரோட ஜானில இருந்து இளையதளபதியோட கத்தி வரைக்கும் உள்ள சேம் கான்சப்டதான். எப்படின்னு கேளு? ஜானி படத்துல என்ன நடக்கும்?” என கதையைத் துவக்கினான் அந்த நரேன்.

இதில் இப்போது ஏதோ ஒரு கன்னட அறிவிப்பை செய்தபடி அந்த நரேன் அருகில் ஏதோ ஆட்டோவோ எதோ கடக்கிறது. அதாவது அந்த புலிக்காரன் இருப்பது கர்நாடக மாநிலத்தில்.

பத்து நிமிடங்களுக்கு முன் வரை இவன் பயன்படுத்திய மொபைலை எடுத்தவன் எப்படி கர்நாடகத்தில் இருந்து அழைத்துக் கொண்டிருக்கிறான்? இவன் என்ன மந்திரவாதியா? பால்கனியின் மனம் இப்படி பாய,

ஏற்கனவே மடித்துவிட்டிருந்த தன் கறுப்பு நிற சட்டை கையை இன்னுமாய் சற்றாய் மடித்துவிட்டபடி, ஒரு கள்ளத்தனமான ரசனைச் சிரிப்போடு மொபைலை காதில் வைத்தபடி நடந்து கொண்டிருந்த அந்த நரேன், “ஜானி படத்துல ரெண்டு ஹீரோ, ரெண்டு பேரும் தப்பு செய்தவங்க” என புதிரை அவிழ்க்கத் துவங்கினான்.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 18

 

8 comments

 1. Oi epi supero super.balcony a avlo pidikuthu inthe epi padichapuram. Enaku oru doubt boss inthe story la hero namma policekara ila balcony a? Oodala apoapo4entry kudukura inthe loosu payan vera yarunu therila. Anyway mathuku avanga amma pathi therinjiruche happy.

 2. Love you my sweetheart❤️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘balcoc b nailed it. …he scored ….Madhu VA kuda this epila I liked it … thinking about madhu is beyond my level…still I don’t understand how she believes her mom but the way balcony makes her understand her mom’s true intentions wothouw hurting or making Madhu feel low is awesome👏👏👏👏👏👏and the cute and emotional bonding between Madhu and balcony that’s too natural😘😘😘😘😘😘and now I could get a clear picture of Kani s character….the suffering and hardship faced by him made him to be like this ..that is his way of handling people😊and pravi sandhula Sindhu paduran….so cute❤️💑and Naren Poonam and our Puli boss wowww….wowieeee…the story is fettget a way forward I suppose…..u have mastered it and the narrative was splendid and soothing to heart….very eager to the knots to be revealed…
  Kudos….and cheers akka…love you❤️

 3. நான் வந்துட்டேன். அதிபயங்கர எபிசோட் இத சொல்ல ரீஷன்ஸ் , திருடன் என்ட்ரினும் வெச்சுக்கலாம், பால்கனி மது பார்ட்ல இருக்க நேர்த்தியின் உச்சம் அதையும் எடுத்துக்கலாம் . என்னதான் எனக்கு புடிக்கலைனாலும் பால்கனியோட காதல் பீலிங்ஸ்ச எடுத்துக்கலாம் அதையும் வேணிக்கு தெரியாம பண்ணனும்னு நினைப்பது வேணி ஒருதடவை சரி இல்லனு சொன்னதை திருப்பி செய்யக்கூடாதுனு நினைப்பது ஐ லைக் இட்.
  அடேய் திருடன் தம்பி என் டயலாக் எல்லாம் நீ சொல்றியே எஸ் இந்த பால்கனியை ஆனாலும் எனக்கு புடிக்குதே. ஒரு வழிய அவன் பேரோ இல்லையோ எதோ ஒரு பேரு வெச்சாச்சே வள்ளல் திருடனுக்கு. அதுவும் பர்ஸ்ட் எவர் பேவ் ஹீரோ நரேன்.
  இவன் பிரவியோட Parallel வேர்ல்ட் ஆளா இருப்பான்னு பார்த்தா பால்கனிக்கு parallel வேர்ல்ட் அதுவும் நார்னியா மாதிரி 10 வயசு வித்யாசத்துல டூயல் ரோலா ஏன்டா டேய். ஜானி படத்துல ஒருத்தன் கொஞ்சம் பெரிய வில்லன் இன்னொருத்தன் சின்ன வில்லன் அப்படி எதுவும் சொல்றானோ டெக்னாலஜி ஃப்ரீக்கா இருப்பானோ எங்க இருந்தும் வேற ஒரு நம்பர்ல போன் பண்ற போல பன்றானா இல்ல இங்க வயலுக்கு வந்துட்டு இங்கயே செட்டில் ஆகிட்டானா பெங்களூரு செட்டப் எல்லாம் பழைய மெத்தெட் அதனால வேற எதாவது சுவாரிஸ்யமா எதிர்பாக்கறேன். மது வேற லெவல் performance மது பார்ட்ல நீங்க அதிபயங்கர performance அதை தனியா நான்பிக்ஷன் ஆர்ட்டிகிள் எழுதலாம். சைடு வந்து ரொமான்ஸ் பண்ண போலீஸ்காரர் கோவிச்சுக்க வேணாம் உங்களையும் படிச்சேன் படிச்சேன். ஸ்கூல் பார்ட் பசங்க படிக்க இருக்க இடர்ப்பாடுகள் இதெல்லாம் அப்படியே உங்க ஸ்டைல்ல போறபோக்குல விதைச்சுவிட்டு போய்ட்டிங்க. நன்றிகள் 🙂

 4. This episode is too much to take in. Egapata subjects a touch panirukeenga. Edha solla, edha vida?? 😶
  Madhu oda nilamaiya nerthiya puriya vachu, avaluku ava ammava puriyavum vachuteenga, adhuvum rombave decent a yarayum damage panamaye.. semma ma’am
  Nama Balcony ku ipdi oru background a??? Lyta sympathy varudhu.
  Ramani Vs Ramani madhiri Naren Vs Naren a? Rendu perum orey cooker la vendha idlis o? Adhunala dhan udanpirapoda pesurapo andha rasanai sirippa? Chinna vayasula financial a face pana hurdles namma paya Naren a ipdi mathita madhiri andha Naren 2.0 va ipdi villana mathirucho? Egapata theories 🤔
  But neenga ivlo easya a twist vaika mateengalonu thonudhu. Poruthirundhu parpom.
  Indha gaplayum nama Pavi-Pravi track jagajodhoya pogudhu polaye, neenga nadathunga Policekaar 😝

 5. என்ன சொல்ல? ஆள் மாறாட்டம் தான் தோணுது. கனியோட அப்பா பற்றிச் சொல்லும்போது அவருக்கு குடிக்கிற பழக்கத்தோட மற்ற பழக்கங்களும் இருக்குன்னு சொல்லிருக்கீங்க. அப்போ அந்த வகையில் கனியின் உடன்பிறப்பாகிறானோ திருடன். மது கனி பார்ட் ரொம்ப நல்லா இருந்தது. குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்ன்னு மதுக்கு உணர்த்தும் இடம் அருமை. மது அம்மா பற்றிய சந்தேகம் வருகிறது .மது வளர்ப்பு மகளா இருக்கலாம். அதே சமயம் அவள் நரேனுக்கும் உடன் பிறப்பா இருக்கலாம். பால் கனிக்காக நரேன் ப்ரவி கிட்டே மாட்டிக்கப் போறானா? அதற்காக தான் நரேன் கனிய பாலோ பண்றானோ. தெரிந்து கொள்ள வைடிங்

Leave a Reply