துளி தீ நீயாவாய் 6 (7)

“ஆனாலும் ரொம்பவே கஷ்டமா இருக்கு ப்ரவி, ஏமாந்துட்டனே ஏமாந்துட்டனேன்னு அவ அழுறப்ப எனக்கு… எனக்கு தாங்கவே முடியல… அம்மா அப்பான்ற அடிப்படை ரிலேஷன்ஷிப்…” என்ற பவிக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை கண்ணிலிருந்து குபுகுபு என நீர்தான் வடிகிறது.

பவியின் இந்த சுபாவம் ப்ரவிக்கு நன்றாகவே தெரியும். எப்போதும் அடுத்தவர் இடத்தில் இருந்து உணர்ச்சிபூர்வமாய் அவர்கள் சூழலை பார்ப்பவள். அது ஓரளவாவது சரியாகும் வரைக்கும் நிம்மதிப்பட வராது அவளுக்கு.

ஏனோ முன்பு போல் இல்லாமல் இழுத்து அவளை மார்புக்குள் சுருட்டிக் கொள்ள வருகிறது ஒரு ஆசை. அதை அப்போதைக்கு தள்ளிப் போட்டவன்,

“நம்மளால என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம் பவிமா, கொஞ்ச வருஷத்துல எல்லாம் சரி ஆகிடும், வேணி அம்மா அப்பாவோட துபாய் கான்டாக்ட் நம்பர் தேட சொல்லி இருக்கேன், கிடைக்கவும் அவங்கட்ட புரிஞ்சுக்கிற மாதிரி எடுத்துச் சொல்லுவோம்.

இப்ப சென்னைல ஒரு ஹாஸ்டல் எடுத்து வேணிய தங்க வச்சு, அவள ட்வெல்த் எழுத சொல்வோம், அடுத்து அவளுக்கு செட் ஆகுற போல எதாவது கோர்ஸ் செய்து அவ கால்ல நிக்ற மாதிரி செய்யலாம், கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரி ஆகிடும்” என ப்ரச்சனைக்கு தீர்வு சொல்லி தன்னவளை ஆறுதல்படுத்த முயன்றான்.

அதற்கு பவியோ நேர்மாறாக “ஐயோ இல்ல ப்ரவி அவள இந்த நிலையில தனியா விடுறதுக்கெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன், அதோட அவ ட்வெல்த்னு வாய திறந்தாலே மிரள்றா, அப்படி தனியா விட்டு திரும்ப படின்னா என்னதாவது செய்துக்க போறா” என பதறினாள்.

“இல்லடா பவி, இங்க நீ அவளுக்கு ஒரு டைவர்ஷன், ப்ரச்சனைய தாண்டி உலகத்தை யோசிக்க வைக்கிற ஒரு பாய்ண்ட்னா, அங்க கூட ஹாஸ்டல்மேட்னு நிறைய அவ வயசொத்த பொண்ணுங்களே இருப்பாங்களே, அவங்கட்ட பேச பழகன்னு ரிலாக்ஸா ஆகிடுவா வேணி” என அழுத்தமாக இவன் சொல்லிப் பார்த்தாலும்,

“ம்ஹூம், இல்ல ப்ரவி, ப்ளீஸ் ப்ரவி, அவள வீட்டவிட்டு மட்டும் அனுப்ப சொல்லிடாத, ப்ளீஸ் நிஜமா எனக்கு தாங்கவே முடியாது” கெஞ்ச துவங்கிய பவியின் கண்ணில் மீண்டும் நீர் முத்துக்கள்.

“லூசு இதுக்கு மேல அழுதியோ அறைதான் விழும், என்னைக்கு நீ கேட்டு ஒன்ன செய்யாம இருந்துருக்கேன், இப்ப மட்டும் புதுசா இல்லன்னு சொல்லிட போறேன்” என சற்று அதட்டலாய் சரண்டர் ஆனவன்,

“இதெல்லாம் தெரிஞ்சும்தான இந்த பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணும்னு வாங்கி மாட்டியிருக்கு” என முனங்கியபடி எழுந்து கொண்டான்.

“பால்கனி மொட்டமாடின்னு ஒரு க்ராக் பாட் சுத்துதே, அவன் இன்னும் என்ன லூசுத்தனமெல்லாம் வேணி விஷயத்துல செய்வானோ? ஆனா வேணி சென்னை போய்ட்டானா இதெல்லாம் இருக்காதுல்ல,

அதோட அங்க வெரைட்டி ஆஃப் கோர்ஸ் அன்ட் ஆப்பர்சுனிட்டீஸ் அவளுக்கு அதிகம், அதான் சொன்னேன்” என உள்ள நிலமைக்கு இவன் முடிவு எத்தனை சரியானது என்பதை புரிய வைக்க முயன்றபடியே அவள் கை பற்றி தூக்கிவிட்டவன்,

“அடுத்தவங்க பொண்ண பொறுப்பெடுத்துக்கிறதுன்றது ரொம்ப பெரிய கமிட்மென்ட் பவி, யோசிச்சு செய், ஆனா நீ என்ன முடிவு செய்தாலும் எனக்கு ஓகே” என்றான் எழும்பி நின்ற அவள் கண்களைப் பார்த்தபடி.

“ஜில்லு பையா நீ எப்பவும் நல்லவன்டா” வழக்கமான இவளது ஸ்டேட்மென்ட்டை சொல்லியே விட்டாள்.

ஆனால் அடுத்துதான் நியாபகம் வருகிறது அவர்களுக்கு கல்யாணமும் ஆகி இருக்கிறது என.

வழக்கமாய் இதற்கு வரும் “போ லூசு” அவனிடமிருந்து வரவில்லையே!

வெள்ளிச் சலங்கைகள் சூடப்பட்ட வெண்புறா சிறகாய் ஒளிர்தலும் மகிழ்ந்தலும் வருடலுமாய் ஒரு பார்வையை அல்லவா சிந்திக் கொண்டு சும்மா நிற்கிறான்.

அதுதான் கெட்டி மேளமாய் நாத ரூபமாய் முல்லை வாசமாய் சறுகி பரவுகிறது இவளுக்குள்.

‘ஐயையோ இவன் என்ன லவ் பண்றான்’ எனதான் பதில் தருகிறது இவள் அடிமனம். காதல் என்றெல்லாம் எதுவும் பொங்கி பெருகவில்லை இவளுக்கு. ஆனால் கோபமும் வந்து சேரவில்லை.

தட் ஐயையோ இப்ப நான் என்ன செய்யணும் மொமன்ட்.

“ப்ளீஸ் ப்ரவி” என்றாள் இவள்.

திருமணத்திற்குப் பின் முதல் முறையாக ஜில்லுப் பையா இப்போதுதானே வருகிறது அவளிடம். அதில் சுகப்பட்டுக் கொண்டிருந்தவன் சின்ன தலையசைப்போடு அந்த சைட் அடிக்கும் செஷனுக்கு தற்காலிக முடிவு கொண்டு வந்தான்.

“சாப்டுருக்க மாட்டல்ல, வா பசிக்குது” என இவளுடன் சாப்பிட ஆயத்தமானான்.

பேச்சை இயல்புக்கு திருப்பினான்.

“வேணி கூட கொஞ்சம் சாப்ட்டேன்” என்று பவி பதில் கொடுத்துக் கொண்டாலும், அவன் அங்கு ரெஃப்ரெஷ் ஆகும் நேரம் இங்கு சாப்பாட்டு மேஜையில் அவனோடு சேர்த்து இவளுக்கும்தான் பரிமாறிக் கொண்டாள் அவள்.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 7

7 comments

  1. Ayyo jillu payana namakum remba pidikuthu pa.appa kuthuvizhaku pragasama eriya arambikithu pola.analum gilli chellam scene semma comedy.balcony nalavara ketavara.

  2. Balcony..motta madi 😂😂😂😂.exactly nanum idhudhan feel panna,enna name nu pona epi la.indha epi la neengale comment kuduthutinga..

  3. eppadi +2 le fail aana pannaiyaar agalamaa.. Balcony motta maadi.. sema interesting narration sis. Pavi mirattinadhu super. andha bracelet party yaaru.. Pavi veniyai thannodu vaithuk kollum mudivu sariyaa irukkumaa .. wait and see

  4. Achcho.. enaku Pavi-Pravi oda sweet, cute moments rommmbaaa pudichurundhudhu. That Jillu payya, Ivan ena love panran, Ayayo ipo ena panradhu, thoongurapo Pravi cute la nra rehash dialogues lam super cute.
    Paalkani? Avar kalyanam pesuna vidham seri, except for the cash matter. But age difference? Thathuvam pesa vena easy a irukalam. But reality la accept panika idhu kashtam aache. Veni oda reveat lam chuma top takkar! Andha Dhanush dialogue oda justification- pakka!! Ejaactly, nama yen poga poga pudikumnu nenachu othukanum?
    Balcony, mottamadi comment- Jillu payanuku flow a varudhu parungalen?
    Patha vacha bracelet inorutharta irukuna, andha bracelet a nam cigaratte patha vacha aasami sututu poitanu dhane artham? Vala virichu nama Pravi a sika vaikano? Idhu Pravi kum theriya poi dhan visarika poran. Lets wait and watch.

Leave a Reply