துளி தீ நீயாவாய் 6(6)

முப்பத்தைந்து மதிக்கத்தக்க அந்த சாருமதி என்ற பெண்ணோ அவள் அதை ஒரு குறிப்பிட்ட நகைக்கடையில் வாங்கியதாகவும் அதன் பில் அவள் வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தாள்.

“சின்னதா டேமேஜ் ஆகி சரி செய்துருக்கதால கொஞ்சம் கம்மி விலைக்கு கொடுத்தாங்க” என்றும் சொன்னாள்.

ஏற்கனவே இருட்டாகிவிட்டதாலும் இவளும் இவளது பத்து படிக்கும் மகளுமாய் இருக்கும் இவளது வீட்டிற்கு இத்தனை மணிக்கு போலீஸ் வந்தால் சுற்றி இருப்பவர்களுக்கு ரொம்பவும் தவறாகத் தெரியும், அதனால் மறுநாள் பகலில் வந்து பில்லை வாங்கிக் கொள்ளும்படியும் தெரிவித்தாள்.

தனியாளான தான் தவறே செய்யாத பட்சத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டாள்.

நகை பவியினுடையது என உறுதியாக தெரிந்தாலும் அந்த சாருமதியிடம் முரட்டடியாய் எதையும் வற்புறுத்தாமல் அவள் முகவரி மொபைல் எண்ணை பெற்றுக் கொண்டு மறுநாள் பகலில் சந்திப்பதாக விடைபெற்றான் ப்ரவி.

இது வெறும் நகை திருட்டு அல்ல அவனுக்கான ஆடு புலி ஆட்டத்தின் தொடக்கப் புள்ளி என்பது இவனுக்கு புரியாமலா என்ன? அதற்காகவே அந்த சாருமதியின் வீட்டை சென்று பார்ப்பது உசிதம் என நினைத்தான் அவன்.

டுத்து அவன் தன் வீட்டை அடைந்த போது வரவேற்பறை கதவை திறந்து இவனுக்கு வழிவிட்டது அவனுடையவள்தான். ஆனால் அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை அவள்.

அவன் கனவு கண்ட காதல் மென்வெட்கம் என்றெல்லாம் எதுவுமில்லை. இது அவள் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருக்கிறாள் என்பதன் அடையாளம்.

என்னவாயிற்று? ப்ரேஸ்லெட்டுக்காக அவள் முகத்தை தூக்குவாள்தான், ஆனால் இப்படி உடைந்து போவதெல்லாம் ம்ஹூம் இது நிச்சயமாய் வேறு விஷயம். அதோடு இப்படிபட்ட நேரங்களில் அவள் இவனிடம் மட்டும்தான் எப்போதுமே மனம் திறப்பவளும் கூட.

ஆனால் இப்போதெல்லாம் அவள் மன உடைவுக்கு காரணமே இவன்தானே! என்னவென்று கேட்டால் எதுவும் சொல்வாளா?

முகத்தில் ஆறுதல் ஏந்தி கரிசனையாய் அவளைப் பார்த்தான் ப்ரவி. அவளோ திறந்த கதவை பூட்ட கூட செய்யாமல் உள்ளே சாப்பாட்டு அறைக்குச் செல்ல,

இவன் கதவை பூட்டிவிட்டு அவளை நோக்கிப் போனான்.

பக்கவாட்டில் பவியின் அறையாய் இருந்து வேணிக்கு கொடுக்கப்பட்டுவிட்ட அறை பூட்டி இருப்பது பார்வையில் படுகிறது. ஆக வேணி தூங்க போயாச்சு போல.

இங்கு பவியோ இதற்குள் உணவு மேஜையில் இவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க துவங்கி இருந்தாள்.

ஏதோ வகையில் உண்மையில் ஒருவாறு ஆசுவாசமாக இருக்கிறது இவனுக்கு.

இது இவன் பவி.

இவன் மேல் கோபத்தில் இருந்தால் வேணி தூங்கப் போன பிறகும் இவனுக்கு நின்று பரிமாறிக் கொண்டு இருக்கமாட்டாள். அவளுக்கு இந்த கணம் இவன் அருகாமை தேவை. அதுவும் அவளது பழைய ப்ரவியாக.

“ரெஃப்ரெஷ் செய்துட்டு வந்து சாப்டுறேன் பவிமா” என்றபடி இப்போது அவள் அருகில் சென்றவன் அவள் கையை மணிக்கட்டில் பற்ற,

சட்டென விழி நிமிர்த்தி இவன் முகத்தைப் பார்த்தாள்.

அந்த ஆள் விழுங்கும் கண்களில் அதாக பெருகிறது நீரளவு.

இவனது கைபற்றுதலுக்கு மறுப்பு என்றும் எதுவும் வரவில்லை அவளிடம் இருந்து.

தன்னோடு அவளை அழைத்தபடி நடக்கத் தொடங்கிவிட்டான் இவன்.

இதற்குள் அவளைப் பற்றி இருந்த இவன் கையின் மணிக்கட்டில் இருதுளி விழி நீர் அவளது சிந்தியாகிவிட்டது.

அவளை பற்றி தன் படுக்கையில் அமர வைத்தவன், அவள் அருகில் கால் புறமாக தரையில் இவன் அமர்ந்து கொண்டான்.

“என்னாச்சு?” என்றான்.

இது வழக்கமாக இவர்கள் அரட்டை அடிக்கும் வகை. அமர குளம் வந்தால் பவி இப்படித்தான் அவள் அறை படுக்கையில் கையில் புத்தகத்தோடு படுத்துக் கொண்டு அருகில் தரையில் இருந்து எதையாவது வாசித்துக் கொண்டிருக்கும் இவனிடம் எதையாவது பேசி சளசளப்பாள்.

நமக்குள் எதுவும் மாறிவிடவில்லை. I’m your friend என்பதுதான் இவன் வகை அர்த்தம் இதற்கு.

அடுத்த நொடி அவனுக்கு அடுத்து வந்து தரையில் அமர்ந்திருந்தாள் அவள். அவன் முற்றிலும் எதிர்பார்த்தது போலவே!

இவன் கையைப் பற்றிக் கொண்டு கொட்டித் தீர்த்துவிட்டாள். வேணியின் கதைதான். நேற்று இரவே தாமதமாக திரும்பும் போதே விஷயம் இவனுக்கு ஓரளவு கிடைத்துவிட்டதுதான். அதை பவியிடம் பேசும் வாய்ப்புதான் அமையவில்லை.

ஆனால் இங்கு இன்று வேணி ஆழ அகலத்துடன் அதை சொல்லி இருக்கிறாள். பேசும் போதே உணர்ச்சி வேகத்தில் பவிக்கு கண்ணில் அதாக கொட்டித் தீர்க்கின்றன.

“அதான் எல்லாத்தையும் ஒழுங்கா பேசி சரியாதான செய்து வச்சுருக்க, அப்றம் ஏன் இந்த அழுகை?” கேட்ட ப்ரவி முகத்தில் சன்னமாய் ஒரு புன்னகை. அவளை தெம்பூட்டும் மெச்சுதல் டானிக் அது.

அடுத்த பக்கம்