துளி தீ நீயாவாய் 6(4)

கஷ்மீர்ல இருந்து கன்யாகுமரி வரை சுத்திகிட்டு இருக்கிற லாரிக்கு அஞ்சு ஏக்கர் இடத்த சுத்த முடியலையாமா?

“இதுக்கும் அவசரமா முடிவு சொல்லிடாதீங்க, யோசிச்சே சொல்லுங்க” என்றபடி பவித்ராவுக்கு ஒரு பெரிய கும்பிடை போட்டான். கிளம்பப் போகிறான் போலும்.

சென்ற முறை போல் பவித்ரா இப்போது வார்த்தையெல்லாம் தேடவில்லை. வயலைப் பற்றி அவன் பேச்செடுத்ததும் அவளுக்குள் இருந்த மொத்த பொறுமையும் காற்றில் போய்விட்டது.

வயல் அவனுக்கு தேவை என்பதைவிட அதை வைத்து பண ஆசை காட்டுவதுதான் அவன் பேச்சின் முக்கிய சாரமாய் படுகிறது இவளுக்கு.

யாருக்கு ஆசை காட்டுறான்? இவளுக்கா இல்லை வேணிக்கா?

வேணியிடம் தன்னால் ரெண்டு கோடி கூட ஒரு நேரத்தில் எடுக்க முடியும் என ஆசை காட்ட இந்தப் பேச்செடுக்கிறானோ?

கவனித்துப் பார்த்தால் அவன் மொத்த பேச்சிலுமே பண விஷயம்தான் எல்லாவற்றிலுமே தூக்கிப் பேசப் பட்டிருக்கிறது.

‘நான் பணக்காரன், பொண்ணு வீட்ல இருந்து பணம் தர வேண்டாம், என்னால ரெண்டு கோடி கூட ஒரே நாள்ல எடுக்க முடியும்… அதனால பொண்ணு தாங்க’ இதுதானே இவன் பேச்சின் சம்மரி.

டீனேஜ் மனச கலைக்க என்னதெல்லாம் செய்றான் இவன்?

சாப்பாடு இல்லாமல் மயங்கி கிடந்த வேணி கையில் ஒரு பைசா இல்லாமல் அடுத்தவரை அண்டி நிற்பவள் இவனின் இந்த வலையில் சரிந்துவிடுவாள் என எதிர்பார்க்கிறானோ?

“இல்லைங்க நீங்க சொன்ன ரெண்டு விஷயத்துக்குமே இங்க சம்மதம் இல்ல, என் அம்மா அப்பா புளங்கின என் பூர்வீக இடம் அது, அதெல்லாம் எந்த காரணத்துக்காகவும் வித்துக்க மாட்டேன்,

அது போல மைனர் பொண்ணு கல்யாணத்த பத்தி போலீஸ் ஆஃபீசர் வீட்லயே வந்து பேசுறதெல்லாம் தப்பு, அதுக்காக அடுத்த வருஷம் செய்யலாம்னுடாதீங்க, பொண்ணுக்கு இஷ்டமில்லன்றப்ப இதுக்கு மேல பேசுறது அநாகரீகமில்லையா? தேடி வந்து பேசுனதுக்கு ரொம்பவும் நன்றி” என்றபடி இவளும் முறையாய் கை குவித்தாள்.

வார்த்தையை சிந்தவில்லை. ஆனால் அவன் அடுத்து எதுவும் பேசாதபடிக்கு முடித்துவிட்டாள்.

“ரெடி கேஷ் தரேன்றேன், அப்படில்லாம் வாங்குற பார்டி ஈசியா அமையாது அண்ணி, உங்களுக்கும் சுத்திலும் அடுத்தவங்க இடம்னு ஆகுதுல்ல,

இதுனா எனக்கு இடத்தை கொடுத்துட்டு இந்த காசுக்கு உங்க அம்மா ஊர்லயே ஒரு வீட்டு மனைய வாங்கி போட்டுட்டு மீதிய கை நிறைய வச்சு அனுபவிக்கலாமே அண்ணி” என இப்போது கூட சொல்லிப்  பார்த்தான் அவன்.

பவியிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக, “புலி வேற அங்க வயல்ல கை வரிசைய காட்டுது போல, பார்த்து இருங்க” என முனகலாய் சொல்லிவிட்டு,

“நான் கிளம்புறேன் அண்ணி” என வார்த்தையால் பவித்ராவிடமும், தலையசைப்பால் வேணியிடமும் விடை பெற்று வாசல் நோக்கி நடக்கத் துவங்கினான் அந்த பால்கனி.

“ஹலோ சார் அப்படியே இதையும் எடுத்துட்டு போய்டுங்க” என அவனை கூப்பிட்டு தாம்பள தட்டை சுட்டிக் காண்பித்தாள் வேணி.

சென்று கொண்டிருந்தவன் முகம் இறுக அவளை நோக்கித் திரும்பி “என் அண்ணி அண்ணாவுக்கு நான் கல்யாண சீர் கொடுக்றத வேண்டாம்னு சொல்ல நீ யார்னு கேட்டுடுவேன், ஆனா உன்ட்ட அப்படி பேச மனசு வரல” என்றுவிட்டு கடகடவென வெளியே போய்விட்டான்.

ஏதோ புயல் பெய்து ஓய்ந்தது போல் இருந்தது பவித்ராவுக்கு. அதோடு சிந்திக்கவும் பலதும் இருந்தது. வேணிக்கு உண்மையில் என்னதான் ப்ரச்சனை?

ன்று இரவு ப்ரவி வீடு திரும்பும் போது அவனுக்குள் சற்று குழப்பம் இருந்தாலும் அடி மனதில் அழகிய தென்றல் அசைவாடிக் கொண்டிருந்ததுதான்.

காலையிலிருந்து இப்போதுவரை இவன் பவிப்பொண்ணு  இவனை அழைக்கவும் இல்லை இவனது அழைப்பை ஏற்கவும் இல்லை அது ஏன் என்பது மட்டும்தான் குழப்பம்.

நேத்து நைட் நல்லதா லுக் விட்டுட்டு அந்தப் பக்கமா போய் ‘தூங்குறப்ப ப்ரவி க்யூட்ல’ என கருண்ட்ட வேற கதை சொல்லிட்டு நல்லாதான தூங்கப் போச்சு இவன் குத்துவிளக்கு, அதுவே இவன் உள்ளே ஊலல்லல்லா செய்து கொண்டிருக்கிறது என்றால்

நைட் இத்தன மணிக்கு இவ ப்ரவிட்ட புலம்பாம நம்ம கூப்ட்டு கேட்காளே, இவளுக்கும் ப்ரவிக்கும் எதுவும் சரியில்லையோன்னு கருண் பீல் பண்ணிடுவான்னு நினைச்சுதான் அந்த க்யூட் ஸ்டேட்மென்ட பவி சொன்னது என இவனுக்கு தெரியும் என்றாலும்,

மனசுல இல்லாததெல்லாம் பேசுற ஆள் கிடையாது இவனோட பவிப்பொண்ணு, அதுவும் இவன் அவள கல்யாணம் செய்தது துரோகம்னு சொல்லிட்டு அதே நம்பிக்கையில இருக்கப்ப இப்படில்லாம் பேசுவது அவளுக்கு முடியாத காரியம்,

அப்படின்னா அந்த நீ என்ன லவ் பண்ணா துரோகம்ன்ற அபத்த லாஜிக்க எல்லாம் விட்டு இவன் பொண்ணு வெளிய வந்தாச்சுன்னு அர்த்தம் ஆகுதே!

இனி எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒரு புரிதல் இவனுக்குள் மென் மாருதமாய் இதய சாரங்களில் அசைவாடிக் கொண்டிருக்கிறது.

இப்படியாய் இவனும் முன் ஒருநாள் இவனது பவிதான் இவனவள் என முடிவு செய்த இல்லை தெரிந்து கொண்ட அந்த காலத்தில் அடுத்து அவளை கண்ணோடு கண் பார்க்கவே இவன் தவிர்த்தது உண்டு.

அடுத்த பக்கம்