துளி தீ நீயாவாய் 11 (9)

இவர்கள் கவனம் எல்லாம் இதில் இருக்க வேணிக்கோ வேறு ஏதோ ஒன்று மனதில் முரண்டிக்  கொண்டிருந்தது. இவளை வேலை செய்ய விடக் கூடாதெனதான் பால்கனி வந்து தானே எல்லாவற்றையும் செய்து கொடுத்துவிட்டு போகிறான் என்பது புரியாமல் இல்லை இவளுக்கு. அது கல் மீது இழுபடும் ஆணியின் சத்தம் போல் இவளை கடும் எரிச்சலுக்குள்ளாக்குகிறது.

ஆனாலும் இவள் உள்ளுணர்வு இடஞ்சல் படுவது வேறு எதோ ஒன்றினால். நேற்றைய பால்கனிக்கும் இன்றைய அவனுக்கும் இடையில் ஏதோ ஒரு பெரும் வித்யாசம் சர்வ நிச்சயமாய் இருக்கிறது. அது என்ன?

பால்கனி இப்போது வந்திருந்தது வேஷ்டியும் கையில்லா பனியனிலுமான உடையில். நேற்றைய உடைக்கும் இதற்கும் பெரிய வித்யாசம்தான் என்றாலும் அவளை நெருடுவது இது இல்லை. ஆனால் வேறே எதுவோ?!

இந்தப் பகுதியில் குழி எடுக்கும் வேலையை முடித்து வயலின் அடுத்த பகுதியில் ஆட்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நடந்தது இவை. இங்கே பவியும் கருணும் இருப்பதால் அந்தப் பால்கனியின் கடிதத்தைப் படிக்க இயலவில்லை இவளுக்கு.

இதில் இப்போது வேலையாட்களும் வந்து சொல்லிக் கொண்டு விடை பெறத் துவங்க, இவள் கைக்குள் மறைந்திருந்து வேர்வையில் நனைவதைத் தவிர வேறு வேலை கொடுக்க முடியவில்லை அக் கடிதத்திற்கு.

இந்நேரம் “ஏ லூசு அவன் இங்க வந்தா வேலை செய்றேன்னு சொல்வான், பாரு இந்த ஊர் காரங்களே இந்த வெயிலுக்கு இந்நேரம் வயல்ல இறங்குறது  இல்ல, நீ அவன விடாத” என கருண் சொல்வது காதில் விழ, அப்போதுதான் கவனிக்கிறாள் ப்ரவி இங்கு வந்து கொண்டிருப்பதை.

இனி கடிதத்தை கையில் வைத்திருப்பது கூட இவளுக்கு உதறும்.

“எவன்டா அவன் டுபாக்கூர் போலீஸ், ஆஃபீஸ் டைம்ல, சொந்த வேலை செய்றவன்?” என அருகில் வந்த ப்ரவியை எதிர்கொண்டான் கருண்.

“டேய் 24/7 நான் போலீஸ்டா, எனக்கு எதுடா டூட்டி நேரம்?” என பதிலளித்தபடியே வந்த ப்ரவி,

“கொஞ்சமாவது பிசிகல் வர்க் அவ்ட் கண்டிப்பா வேணும், ஜிம்க்கு போறதவிட இது எவ்வளவு நல்லது தெரியுமா?” என்றபடி பவி கையில் வைத்திருந்த இளநீரை சற்றும் எதிர்பாராமல் நின்றிருந்த அவள் கையிலிருந்து வெகு இயல்பாக எடுத்து பருகத்துவங்கினான்.

பருகியபடியே அவளை ஒரு பார்வை.

இதில் “க்கும், நான் இந்த பக்கமா போய் எத்தனை குழி தோண்டி இருக்காங்கன்னு பார்க்கிறேன். நீ அந்தப் பக்கமா போய் எண்ணிட்டு வா கொடுக்கு” என ஒருவித செறுமலோடு வேணியிடம் சொன்ன கருண், ஒரு திசையில் நடக்கத் துவங்கினான்.

ஹப்பா விட்டால் போதும் என ஓடாத குறையாக வேணி அடுத்த திசை பார்த்து ஓட்டமும் நடையுமாக கிளம்பினாள்.

இருவர் செல்வதையும் சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்த பவி அடுத்து ப்ரவி புறமாக திரும்பினால் அவனோ தான் அணிந்து வந்திருந்த அந்த செமி ஃபார்மல்ஸ் வெண் நிற சட்டையின் பட்டனை கழற்றத் துவங்கி இருந்தான்.

“என்ன செய்யப் போற நீ?” இவளது அதட்டல் போல் இருந்த கேள்வியில் பதற்றம் மறைந்திருக்கிறதோ?”

“வேற என்ன, மண்ணோட கொஞ்சம் ரொமான்ஸ்” என்றபடி கழற்றிய தன் சட்டையை இவள் கையில் கொடுத்துவிட்டு அங்கு கிடந்த மண் வெட்டியை கையில் எடுத்துக் கொண்டு நடக்கத் துவங்கினான் அவன்.

மண் வெட்டப் போகிறான் என்பது புரிய “பிச்சுடுவேன் பிச்சு” என இவள் எகிற, இந்த வெயில்ல வேலை செய்யக் கூடாதுன்னு கருண் சொல்லிட்டுப் போயிருக்கானே!

“ஏன் பவிப் பொண்ணு உன் கூடதான் ரொமான்ஸ் பண்ண்ணுமா?” என வருகிறது அவனின் கேள்வி.

“நம்ம ஹனிமூனா ஹனி சன்னா ஸ்டார்ட் செய்யவா?” என்றபடி கண் சிமிட்டினான் அவன்.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 12

7 comments

 1. Bade ache hai😅😅😀😀😀😀😀sema sema….balcony nalavara ah ketavara ah….🙄🤔😭 enaikume veni Pola that that thik thik nadukam than ka..🙄😑😑😐 romba konjurar balcony….kadaisivara letter open seyala…mr.karun unga kadamai enaku piditham….😛😝honey sun pogum aburva hero sireeee…enjoyyyyyyy…..🤗😉😀😀😀😀

 2. இந்த எபி படிச்சத்துல நான் கண்டுபுடிச்ச விஷயம் இந்த பவி ப்ரவி ரொமான்ஸ்லல நான் கதைய உருப்படியா படிக்கல போலையே. அவங்களா சொல்ற வரை அந்த ப்ரஸ்ட்லெட் நியாபகம் வரலையே. ப்ரஸ்ட்லெட் தொலைஞ்சு போய் 3 நாள் தான் ஆகுதுன்னா நம்ம கதைல பிளாஷ்பாக் இல்லாம 3 நாள் கடந்து இருக்கா. ஐயையோ கதைய முழுசா படிக்கனும். பால்கனி ஸ்கோர்ஸ் எ லாட். கல்லில் இழுப்படும் ஆணி செம்ம உவமை படிக்கும்போதே பல்லு கூசிறுச்சு. அந்த இளநீ வாங்கிகற சீன். சின்ன பசங்க எதாவது குடுத்தா அம்மாவ பார்த்துட்டு வாங்கிகற போல செம்ம cute ah இருந்தது.

 3. ஆகக் கடைசியில் பால்கனிக்கு தான் செகண்ட் ஹீரோ வாய்ப்பு பெருசாத் தெரியுது போலே இருக்கே. அந்த சாருமதி கிட்டே ஏதோ பொய் தெரியற மாதிரி இருக்கே. தன்னோட பொண்ண இப்படி யூஸ் பண்றா. அவளுக்கு அந்த ப்ரெஸ்லேட் வந்த காரணம் வேறு எதுவும் இருக்குமோ.. பால்கனி வெந்நீர் மாதிரி கொதிப்பதின் காரணம் கருண் ஆ .. அவன் கொடுத்த லெட்டர்லே அந்த மது பற்றி இருக்குமா? இல்லை அந்த லெட்டர் மேட்டரில் வேறு எதுவும் இருக்குமோ. மது விஷயம் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அடுத்த எபிக்காக வெயிட்டிங்.

 4. Inthe police kar kidaikira gap la ellam veetamma kitte romance ball a erinju than parkuraru pavam ana ball than bounce back agiduthu 😉😉.
  Karandi sir etho romance nadaka pora mathiri ninachitu poraru avar annanum anniyum enatha pannuvanganu namakula theriyum.
  Inthe balcony Annan nalavara ketavara nu nayagan pada dialogue than podanum pola.
  Apidi enatha than anthe letter la eluthiruparu 🤔🤔

 5. பால்கனி கெட்டவன் மாதிரி தெரிகிற நல்லவனா.

  கரண்டி கு சீக்கிரம் ஒரு pair போடுங்க.

  ஹீரோ sir, என்ன பண்ணாலும் pavi மனச full பன்ன முடியல.

  கொஞ்ச கொஞ்சமா mathiduvom.

Leave a Reply