துளி தீ நீயாவாய் 11 (4)

அவ்வளவுதான் கிண்ண்ண்ண்ண் என ஒரு இடி இவள் தலையில் விழ, கோடாரி வெட்டு ஒன்று இதயத்தில் இறங்கியது. கொடும் ஜூரம் ஒன்று அப்போதே அவளை அள்ளிக் கொள்ள, கொதிக்கும் தேகம் கிடு கிடுவென துடிக்கத் துடிக்க நடுங்கிப் போகிறது.

இவள் புரிந்து கொள்வது சரிதானா???

“இன்னும் உனக்கு ஒரு ரெண்டு மணி நேரம் ரெஸ்டுதான் மது, அடுத்துதான் அந்த ராஜுமணி வருவான்” இது அந்த சாருமதியின் குரல்.

“ஐயோ அந்தாளா? நான் இன்னைக்கு படிச்ச மாதிரிதான். என்னமா நீ? மார்க் குறஞ்சா, 10த் பப்ளிக் எக்சாம்னு பொறுப்பே இல்லைனு சொல்லி சொல்லி திட்டுவாங்கம்மா, படிச்சு நான் நல்ல வேலைக்கு போய்ட்டா இதெல்லாம் இல்லாமலே நாம நல்லா இருக்கலாம்மா” புலம்பியது அந்த மகளின் குரல்.

வேணிக்கு தான் வாய்விட்டு கதறிவிடுவோமோ என்ற பயம் கழுத்து வரை இருக்குகிறது. தன் கையை வைத்து வாயை மூடியவள் அப்படியே பல்லால் கடித்து அடக்கிப் பார்க்கிறாள். நடுங்கித் தொலையும் தேகத்தை சமாளித்து, அவள் நிற்கும் இடத்தில் இருந்து இறங்கவும் வரவில்லை அவளுக்கு.

அங்கு அந்த சாருமதியின் வீட்டு அழைப்புமணி அழைக்கின்றது. இந்த பால்கனியின் வேலையாக இருக்கும் என்பது வேணிக்கு இந்த நிலையில் சற்றாய் நியாபகம் வருகிறது.

“ஆமா படிச்சு வேலைக்கு போறது இருக்கட்டும், அதுவரைக்கும் சாப்பாடு, வீடு, நீ போட்டுருக்கியே ட்ரெஸு இதெல்லாம் வேணுமே, இருக்கத விட்டுட்டு பறக்கத எப்படி பிடிக்க? சனி கிழமைனா இப்படிதான் இருக்கும்னு தெரிஞ்சதுதான மதுமா? சரி சரி நான் வெண்ணி போடுறேன், குளி கொஞ்சம் நல்லா இருக்கும்” அந்த சாருமதியின் குரல் இப்படியாய் சொல்லி,

“சொன்னனே அந்த போலீஸ்காரன், அவன் இப்ப வருவான், நான் கூப்ட்ட பிறகு நீ வந்தா போதும், நீ அப்ப அப்ப என்னப் பார்த்து முழிப்பியே அந்த பரிதாப முழி, அது போல முழிச்சுகிட்டு கொஞ்ச நேரம் நின்னுட்டு திரும்பி வந்துடு போதும்” என இதையும் சொல்லிமுடிக்க,

வேணி இங்கு இரண்டு கையாலும் தன் வாயைப் பொத்திக் கொண்டு மூச்சு விடவே தவித்தபடி, அவள் ஏறி இருந்த அந்த ஷெட்டின் மேல் குத்து வைத்து அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து திரும்பி வந்த பால்கனி, அவளுக்கு பின் புறத்திலிருந்து வந்தவன் “அந்த பொம்பளைட்ட பேசுற போல போய் பக்காவா செட் பண்ணிட்டு வந்துட்டேன்” என இவள் காதுப்புறம் கிசுகிசுத்த பின்தான் கவனித்தவன்,

“ஹேய் ஏன்? என்ன? என்ன ஆச்சுமா?” என பதறினான்.

“பூச்சி எதுவும் கடிச்சுட்டா? கைலயா கால்லயா? ஐயோ என்ன பூச்சின்னு பார்த்தியா? சின்னதாதான எதோ? இந்தப் பக்கம் பாம்… ஐயோ முதல்ல கடிச்ச இடத்த காமி” இதெல்லாம் அவன் கிசு கிசு குரலில்தான் பேசிக் கொண்டிருந்தாலும், அவன் தவிப்பு அக்மார்க் நிஜம் என்பதும், இந்த வீட்டில் வைத்து இவள் யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாதென அவன் நினைப்பதால் மட்டுமே குரலை அடக்குகிறான் என்பதும் இவளுக்குப் புரிய,

எதையும் பேச முடியா வண்ணம் இன்னுமே துடித்துக் கொண்டிருந்த மூச்சடைத்த இவள் நிலைக்கு, அவள் இப்போது தன் கையிலிருந்த பேக்கால் அவனுக்கு சின்னதாய் ஒரு அடி.

வாயை மூடு என்பது அதன் செய்தி.

அவன் இப்போது புரியாமல் பார்க்க “அங்க அது..அது செய்றதெல்லாம் அந்த சாருமதி இல்ல போல, அவளோட பொண்ணத்தான்… அவ… அவ தப்பா யூஸ் பண்றா… அந்தப் பொண்ணு 10த் படிக்கிற சின்ன பொண்ணு” என அழ அழ திக்கி திக்கி, இடையில் இவளை மீறி குரல் வெடித்துவிடக் கூடாதென அவ்வப் போது தன் கையை கடித்து, தன் குரலை அடக்கி  என ஒருவாறு இவள் சொல்லி முடிக்க,

அந்தப் பால்கனி காதோடு சேர்ந்து தன் கழுத்தை அழுந்த தடவிக் கொண்டான். அவன் அதை செய்த விதமும் அவன் முகமும் அவனுக்கும் இதை அத்தனை எளிதாய் ஏற்க முடியவில்லை என்பதை வெளிப்படையாகவே காட்டிக் கொடுக்கிறது.

“ப்ச்… அது… அதுக்கு நாம என்னமா செய்ய முடியும்?” இதை ஆறுதல் சொல்வது போல சொன்னவன், அவனுக்கே அது ஆறுதல் போல தோன்றாமல் போக, “எப்படியும் அந்த பொண்ணு சம்மதிச்சுதான நடக்கும், இல்லையா?” என சொல்லிப் பார்த்தான்.

“அது இருட்டு ரூம்குள்ள அடச்சு வச்சுகிட்டு கத்திய வச்சி குத்தி குத்தி எடுக்கிறதவிட மோசம், அதெல்லாம் யாரும் இஷ்டப்பட்டெல்லாம் செய்ய முடியாது” யாரிடம் என்ன பேசுகிறோம் என்பதை நிதானிக்கும் நிலையில் அவள் இல்லை என்பதை குறிக்கும் வகையில் அடுத்து வருகின்றன இப்படி வார்த்தைகள். அவள் துடிப்பது இவனுக்கும் புரியாமல் இல்லை.

“சின்ன பொண்ணுதான அந்த மது, அவ அம்மா எதாவது சொல்லி அது அப்படி ஆகிடும் இது இப்படின்னு சொல்லி ஏமாத்தி வச்சுருப்பாளா இருக்கும்” இவளது அடுத்த விளக்கம்,

“இப்படி எமோஷனல் ப்ளாக்மெயில இந்த வயசில் பொண்ணுங்களால ஹேண்டில் செய்ய முடியாது”

“எனக்கு தாங்கவே முடியலையே” இவள் நெஞ்சை தடவிய படி மூச்சுக் காத்துக்கு ஏங்க,

“இப்ப என்ன அந்த பொண்ண இதுல இருந்து வெளிய  கொண்டு வரணும் அவ்வளவுதான? நாம செய்றோம் ஓகேவா?” வாக்குறுதி அளித்தான் அவன்.

“இப்ப நீ இப்படி அழுது கரஞ்சன்னா, இங்க யார்ட்டயாவது மாட்டிப்போம், அதனால முதல்ல கிளம்பு” என தொடர்ந்து இவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அங்கு சமீபித்து வரும் வாகன ஒலி காதில் விழுகிறது.

அவசரமாய் எழுந்து அவள்  ஷெட் மேல் ஏற்றி வைத்திருந்த ட்ரம்முக்குள் இறங்கி உட்கார எண்ணுகிறாள் வேணி.  ஆனால் அதற்கு சற்றும் ஒத்து வராமல் கால் கையெல்லாம் இன்னுமே நடுங்கிக் கொண்டிருக்கிறது அவளுக்கு.

அடுத்த பக்கம்