துளி தீ நீயாவாய் 8(8)

“எனக்கு தூக்கம் வருது” என பவி இப்போது சுருண்டு கொள்ள, அதன் காரணம் இவனுக்குத் தெரியுமே

“அண்ணாட்ட ஒன்னு விடாம இங்க நடந்த எல்லாத்தையும் சொல்லிடுவேன் என்ன” என்று சொல்லி இருண்டு கிடந்த அவள் முகத்தை தெளிய வைத்து,

“சிந்திக்கு போலீஸ் மாப்ளதான் வேணும்னா எங்க டிபார்மென்ட்ல உள்ள நல்ல பேச்சிலர்ஸ் லிஸ்ட்ட நாளைக்கு சொல்றேன், யார் செட்டாவாங்கன்னு நீயே பார்த்து முடி, provided சிந்தி அப்பா மொத்த மாட்டார்னா” எனவும் குறும்பு மின்ன சொல்ல,

“போடா லூசு, உங்க ஓட்ட டிபார்ட்மென்ட் எங்க ஒருத்தருக்கும் வேண்டாம்” என அவள் போலியாய் முறுக்கிக் கொண்டு இவனுக்கு ஒன்று வைத்தாள். அதில் அடி கொடுத்தவளுக்கும் வாங்கிய இவனுக்கும் முகத்தில் சிரிப்பு திரும்பி வந்திருந்தது.

அடுத்த இரண்டாம் மணி நேரம் “ரொம்ப லேட் ஆகிட்டு பவிமா, இதுக்கு மேல ட்ரைவ் பண்றது ரிஸ்க், காலைல கேப் எடுத்து கிளம்புவோம், இப்ப இங்க ஸ்டே செய்துக்கலாம்” என சொல்லி சேலத்தில் ஒரு ஹோட்டலில் தங்க வழி செய்து கொண்டான்.

லாரிக்கு வழி அனுப்புவது போல் மாணிக்கம் கையில் லாரியை கொடுத்து மீண்டும் சிந்தி வீட்டுக்கே அனுப்பி வைத்தான்.

பவி அவள் அணிந்திருந்த ஜெர்கினுக்கும் மேல் உச்சந்தலை முதல் முழங்கால் முட்டு வரைக்குமாய் பெட்சீட்டால் சுத்தியே படியே இந்த சம்பவங்களில் எல்லாம் காட்சி தர, இருந்த இருட்டில் மாணிக்கத்துக்கு என்ன தெரியும்?

“கதவ கவனமா லாக் பண்ணிடு, ரூம யார் திறக்க சொன்னாலும் எதுக்காகவும் திறக்காத, உடனே எனக்கு கால் பண்ணு, நான் அடுத்த ரூம்லதான் இருக்கேன், நிம்மதியா தூங்கு” என பவியை அவளுக்கென எடுத்திருந்த அறைக்குள் அனுப்பியவன்,

அடுத்திருந்த தனக்கான அறைக்குள் நுழையவும், தனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவர் மூலம் மாணிக்கத்திற்கு சிறு அளவு மயக்க மருந்து கிடைக்கவும் வழி செய்தான்.

அடுத்த இரண்டாம் மணி நேரம் திருக்கழுகுன்றத்திலும் இங்கு சிந்தி வீட்டிலும் ஆக்க்ஷன் காட்சிகள் நடந்து கொண்டிருக்க, அதை தன் ஹோட்டல் அறையில் இருந்தபடியே dictate செய்தது ப்ரவி.

மாணிக்கமும் தாஸும் இப்போது சிந்தி வீட்டுக்குள் சிந்தியின் அப்பாவின் மொபைல் உதவியோடு நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த அவரை கையை காலை கட்டி, அவரது பிஸ்டலை காட்டியே மிரட்டினர்.

டெக்னிகலி பின்னால் சிந்தி அப்பா துருவினாலும் அவர் மொபைலை எப்படியோ திருடி அதன் வழியாக இவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள் எனதான் தெரிய வருமே தவிர, அதற்கு சில மணி நேரம் முன்பு இப்படி இந்த மொபைலை எடுக்க மட்டுமாய் ஆட்கள் வந்து போயிருப்பார்கள் என எண்ண தோன்றாதுதானே!

“எங்க ஆளு அங்க திருக்கழுகுன்றத்துல எங்க குடிசைகளுக்கு போவார், உன் ஆள்க்க ஒரு பய அவருக்கு குறுக்க நின்னு ஏன் எதுக்குன்னு வாய திறக்க கூடாது, திறந்தான்வளோ இங்க உன் வாய்லயே சுடுவோம், எங்க பெண்டு பிள்ளைங்க எல்லாம் அங்க இருந்து இப்ப கிளம்பும், அதுல ஒரு தலை எண்ணிக்கை குறஞ்சாலும் இங்க உன் தலை உதுந்துடும்” என்றெல்லாம் முகம் மறைத்திருந்த மாணிக்கமும் தாஸும் உறும,

அதே நேரம் அங்கு அபிஜித் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அந்த கொத்தடிமை குடிசை பகுதிகளுக்குச் செல்ல,

“அவங்க எல்லோரையும் போகச் சொல்லு, நீ ஒரு பய குறுக்க போகாத” என அங்குள்ள தன் தலைமை கங்காணியை மொபைல் மூலமாக சிந்தியின் அப்பா கட்டளை இட்டு தடுக்க, அதாவது அவரை அப்படி பிஸ்டல் முனை சொல்ல வைக்க,

அபிஜித் அங்கிருந்த கங்காணி வகை ஆட்களையெல்லாம் கட்டி உருட்டிவிட்டு, கொத்தடிமை குடும்பங்களை எல்லாம் மீட்டு தான் அழைத்துச் சென்றிருந்த லாரிகளில் அவர்களை கூட்டிக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டான்.

இங்கு சிந்தி அப்பா சற்றாய் அவர் நாசியில் காட்டப்பட்ட மயக்க மருந்தால் மயங்கிச் சரிய, அவரை கை காலெல்லாம் கட்டவிழ்த்து தூங்குபவரைப் போல படுக்கையில் கிடத்திவிட்டு மாணிக்கமும் தாஸும் சத்தமின்றி தடயமின்றி வெளியேறினர்.

கட்டி உருட்டப்பட்ட செக்யூரிட்டியை இப்போது அவரது அறையில் சென்று படுக்க வைத்தனர். போடுங்கப்பா அவருக்கு ஒரு மயக்க மருந்து ஸ்ப்ரே.

அந்த பண்ணை வீட்டின் மரங்களுக்கு அடியில் இவர்கள் பிடித்து வைத்திருக்கும் கண்காணியையும் நிஜ லாரி ட்ரைவரையும் உருட்டிவிட்டனர். அவங்களுக்கும் ஸ்ப்ரே அடிச்சாச்சு.

இப்படி கொத்தடிமையாய் மாட்டிக் கொள்வோரை மீட்டு அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களுக்காக சட்ட ரீதியாக போராடவும் மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் உண்மையான முறையில் இயங்கி வரும் ஒரு NGO அமைப்பின் புணர்வாழ்வு மையத்தில் மாணிக்கம் வகையறாவும் அவர்களது குடும்பங்களும் பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் வரையும் ப்ரவியின் மொபைல் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.

இவர்களை இப்படி மீட்காமல், வழக்குப் பதிவு, கோர்ட் கேஸ் என அலைந்தால் அது மட்டும்தான் நடந்து கொண்டிருக்குமே தவிர இவர்கள் மீட்பு என்பது கற்பனையில் மட்டும்தான் நடந்தேறும் என ப்ரவிக்கு தெரியுமாதலால்,

முதலில் அவர்களை சிந்தி அப்பாவின் பிடியிலிருந்து வெளியே கொண்டு வந்துவிட்டு, அவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் பதிவு செய்யலாம் என்பது திட்டம்.

நஷ்ட ஈடு வந்து சேராது என்பதுதான் நிதர்சனம் என்றாலும், தப்புவிக்கப்பட்ட இவர்களை சிந்தியா அப்பா இன்னொரு முறை பிடித்துவிடவெல்லாம் முடியாது. ஆக இப்படியாய் இதை செய்து முடித்திருந்தான் ப்ரவி.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 9

 

19 comments

 1. etha muthala ezhutharathune theriyalaiye.
  Firstu Pavi Pravi chemistry chance less. Enna summa summa Sindhiyangara, koopdungda antha sindiyavanu ninachen athaiya appadiye pannitenga.
  Sollum pothu Nalla irunthathe pakka sakikkalayiye 😀 😀 ithan venum enaku.
  Thedirnu Abijeeth nu varavum ethulaiyo paidchu irukkame entha katahinu yosichen partha ithula than Pravi dream la Ivan veetuku thane ethuko ponanga appo padicha peru.
  Ippadi oru scene varalaina intha paviya samailkka mudiyathu ippadiye summa sollitte irukum nallathu. Analum this scene vera level depth. Ippo engaiyo maram vetta kottitu porangana line padichathum Andra la semmaram vetta poi gun shot la sagaravanga niyabagam, vanthuchu.

  • mano cmntndrathey spl athuvum suda suda on spot….ethana time padichuteyn… eeeeeeee antha semmaram…yes antha incident appo enakku intha kothadimai murai pathi theriyaathu…aanaa kothadimai murai pathi therinjuka nernthappa manasula antha semmaram encounter thaan njabakam vanthuchu… entha appa thannoda entha kulanthaikaaka ponaaronnu romba orumaathiri aaakitu …btw ipdi ennai polaye neengalum ungala polavey naanum yosikirathil …<3 <3

 2. No words to express, very nice and intresting thrilling episode.super sweety

 3. Unxpected neenga EPI poduvelnee…and epiyum apdiye…..bulb paviiiii🙄😂😂😂😂😂cute praviii😍😍😍😅😅😘😘but kandipa upadi oru scene irukumnu ethirpakala ka….next epiiiiii jalthi jalthi ka…. waiting😂

  • wowwwwwwww sathyaku surprise koduthathu athuvum praviya vachu koduthathula me hapyyy … <3 seekiram post seyyven next epi Thanks ponney

 4. Back with a bang!!!! 🔥 Superb episode ma’am. Ipdilam rasichu rasichu surprise kuduka mudiyuma?????🤩 You are setting the bar high for the significant other of all your female readers out here. Engaluku jodi sikalana adhu Anna ma’am oda heros kudutha expectation dhan karanam nu inga mention panikuren 😝
  Indha story arc a nan expect panala. Ivarukum present la rasikura andha thirudanukum link iruka? Adhoda prequel dhan indha scenes a? 🤔
  Pravi phone pesite nadandhu vara andha nadaila nanume sokki poi “ennaaa oru nadai” nu waterfalls a open paniten dhan 😂 china scene a irundhalum manasula pachakkunu otikuchu ma’am.
  Enaaama plan pani andha kothadimaigala rescue panirukan Pravi , greaaattt!!!!
  Ovoru vishayamum yosichu panirukanga. Practical difficulties irundhurukalamonu en logical brain yosichalum padikurapo swarasyama irundhudhu.
  Pavi oda pacha molaga vagai jealousy + possessiveness lam Pravi oda serndhu nanum rombave rasichen.
  Aayiram dhan irundhalum nama Jillupayya ku avaroda Kuthuvilaku lyta dull adichalum manasu porukudhillaye… Ambutu loves a??? Nee nadathu nadathu!
  Overall, indha jackie chan films la lam action scene adhu paatuku oditu irukapo side by side thaar maara andha ranagalathulayum oru humour track odum patheengala? Andha madhiri ungaloda indha episode- equal parts of action and fun.
  So what is going to happen as a result of this rescue mission? Waiting for it.

  • உங்க கமென்ட்க்கு ரொம்ப ரொம்ப வெயிட் செய்தேன் சிஸ். கமென்ட் பார்க்கவும் அவ்ளவு ஹேப்பீஈஎ… கூடவே ‘எங்களுக்கு ஜோடி சிக்கலைனா’ந்னு ஒன்னு சொல்லி இருக்கீங்க பாருங்க அதப் பார்த்து திகிதிலா இருக்கே 😝😝😝😝😝

   ப்ரெசென்ட்க்கும் இதுக்கும் லிங்க்…இருக்குதா இல்லையான்னு பார்த்துடுவோம் சிஃஸ்…

   நலையில சொக்கி …உண்மையா அந்த சீன் எழுதுறப்ப எனக்கு உங்க ஞாபகம் தான்… முன்ன அவன் வாட்ச போட்டுகிட்டே பேசுறத சொல்லி இருந்தீங்கல்ல அதனால… இப்ப இதை மென்ஷன் செய்யவும் மீ ஹேப்பியோ ஹேப்பி🤩 🤩 🤩 🤩 🤩

   ரெஃஸ்க்யூ சீக்வென்ஸ்ல ப்ராக்டிகல் டிஃபிகல்டி… ஆமாம் சிஸ்…இதுல இருக்கப்போல படிச்சா அப்படி கண்டிப்பா தோணும்… மாணிக்கம்க்கு தெரியாம பவிய எப்படி லாரில ஏத்தினான் ப்ரவின்னு விளக்கம் இருக்காது… அது போல அவருக்கு தெரியாம எப்படி ஹோட்டல் கொண்டு போனான் அவள, அதோட சிந்தி அப்பா மொபைல வச்சு திறந்துட்டதாலயே சில மணி நேரம் முன்ன சிந்தி மொபைல வச்சு அன்டைம்ல திறந்தத ஏன் எதுக்குன்னு நோண்டாம விட்டுடுவாங்களா… இப்படி சில இதுக்கு நான் எப்பில விளக்கம் சொல்லல…

   ஆனா லாரி கதவை வெளிய இருந்து மட்டும்தான் பூட்ட முடியும்ன்றப்ப…ஒவ்வொரு சீன்லையும் ப்ரவி போய் பின் கதவை மூடிவிட்டு பவியை இறக்கினான், ஏத்தினான்ன்னு எழுதினா அது லாஜிகலி சரின்னு வந்துடும்…ஆனா திரும்ப திரும்ப அதை எழுதுற ஃபீல்… வாசிக்கவங்களுக்கு போர் அடிக்கும்… அதான் லாரிய வெளிய இருந்து மட்டும்தான் பூட்ட முடுயும்னு ஹிண்ட் கொடுத்துட்டு, சீன் சேஞ்ச் போல கடகடனு காட்டிட்டு போய்ட்டேன்.

   மொபைல் போனால வீடு கதவ ஓபன் செய்றதும் அப்படித்தான்… கேஃஸ எப்படியும் அபிஜித்தான் ஹேண்டில் செய்யப் போறான்…அவந்தான் திருக்கழுகுன்றம் ஆஃபீஃஸர்னு சொல்லி இருக்கேன்ல… அதனால போலீஃஸ் கண்டு பிடிக்கிற டீப் டெக்னிகல் பாய்ண்ட் சிந்தி அப்பாவுக்கு தெரிய வராது… அபிஜித்தே அவருக்கு எதிராத்தானே இருப்பான்…சிந்தி அப்பா சராசரியா அவரா பார்த்துகிற விஷயத்துல மட்டும் ப்ரவி கவனமா இருந்தா போதும், அதோட மாணிக்கம் அன்ட் கோ சில மணி நேரம் முன்னதான் சிந்தி வீட்ல இருந்து கிளம்பி இருக்காங்க, அதனால அவங்க யார் மொபைலயோ எப்படியோ திருட்டிட்டு இப்ப உள்ள வந்துட்டாங்கன்னு நினைக்கிறதுதான் சிந்தி அப்பா இடத்துல இருந்து யோசிக்கிற நார்மல் பாய்ண்டா இருக்கும்… வீட்ல வேலை செய்தவங்க எப்படி உள்ள வந்தாங்கன்னு கண்டு பிடிக்க டிடெக்டிவ் வைக்கிற அளவுக்கு அதை கண்டு பிடிச்சும் ஆகப் போறது அவருக்கு ஒன்னுமில்ல, எப்படி அவர் அவங்கள கொத்தடிமையா நான் வச்சுருக்கலைன்னு நிரூபிக்கப் போறார்ன்றதுதான் அங்க அவரோட அடிப்படை ப்ரச்சனையா இருக்கும்…அதனால டிடெக்டிவ் வச்சு இந்த பாய்ண்ட துருவ நினைக்க மாட்டார். ஆனா இதெல்லாம் எப்பில நான் விளக்கமா சொல்லி இருக்க மாட்டேன்…இதெல்லாம் சொல்லாம லாஜிகலா யோசிக்கிறப்ப இதெல்லாம் எப்படின்னு கேள்வி வரும்தான்… ஆனா இதை டீடெய்லா சொன்னா… கதை நம்ம வேணி பால்கனி பவி ப்ரவி ஃபோகஸ்ஸ விட்டு ரொம்ப டீவியேட் ஆகிறாப்ல இருந்துது…. அதான் baseline லாஜிக் மட்டும் இடிச்சுக்காம பார்த்து மூவ் பண்ணி கொண்டு போய்ட்டேன்…😅😅😅😅😅😅😅😅😅😅

   Pavi oda pacha molaga vagai jealousy + possessiveness lam Pravi oda serndhu nanum rombave rasichen.
   Aayiram dhan irundhalum nama Jillupayya ku avaroda Kuthuvilaku lyta dull adichalum manasu porukudhillaye… Ambutu loves a??? Nee nadathu nadathu!
   😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

   Overall, indha jackie chan films la lam action scene adhu paatuku oditu irukapo side by side thaar maara andha ranagalathulayum oru humour track odum patheengala? Andha madhiri ungaloda indha episode- equal parts of action and fun.
   🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

   உங்க கமென்ட் அவ்வளவு மோடிவேடிங்… Thankssssssssss a lot

 5. Ayyo semma ud.policekar ipidi pinrare. Ipidi pachamolagaya aracha ponnu ethuku avara kanalam katikitha poi etho punishment mathiri um pravi etho throgam pannita mathirium sami aduthu?ponga policekar ungaluku romance la thiramai pathala. Inthe rettavalu ponna ungalala sari panna mudilaye neenga remba policea irukeenga ponga.valu ponnuku friend um oru beku 😄😄

  • wow…Thankssssssss sis for such a sweet cmnt.

   pacha milagaya oru possivenessla arachitu sis… apram sollama kollama mrg seythutaneynnu tension aakitu pola… enna nadanthuchunnu paarthuduvom sis… policekararku romance seyya varalaiyo??? seekiram athilayum paviyave avarai karayetha sollanum 😝😝😝😝

   Thanks sis

 6. Nice, semma, unexpected
  Paviyoda pachamolaga பொறாமை, Praviyoda ஆர்பாட்டம் இல்லா policethanam,

  High level expectation for the next epi

  • 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 Thanks sis…

 7. indha epi action epi nu solradhaa, illai comedy epi nu solradhaa theriyalaye.. sis. actionum comedy um kalandha gala gala epi.. Pavi ennavoru sindhanai.. Pravi ku Sindhi mele love vara vaikka yosanai seydhutte thanakku thane aappu yerpaduthik konda moment .. ha. ha.. pachai milagai alavurku irundha erichal paarangalu alavirku marinadhu.. Pravi enna man nee.. Pavi ya sight adichukitte inge action leyum irangare.. kalakitta po.. Kotthadimai makkalai meetka edutha muyarchi adhilum villan kku sandegam varama seydhadhu ellam pakka planning.. aduthu ivanga porandha naalu party bangalore ilaa? As usual vaarthai azhagu.. sema.. waiting for next ud.

Leave a Reply