துளி தீ நீயாவாய் 8(5)

அந்த லாரி வெகு நீளமானதொன்று என்பதால் அதன் பின் புற கதவை இவன் திறந்து மூடினாலும் பவிக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால், பின் கதவை இவன் திறக்க, முன்பே ப்ரவி சொல்லி இருந்த திட்டப்படி தயாராய் எடுத்து வைத்திருந்த கயிறை நீட்டுகிறார் மாணிக்கம்.

மாணிக்கம் உட்பட அனைவரும் உள்ளிருக்க மீண்டுமாய் லாரியின் கதவை வெளிப் புறமாய் பூட்டிவிட்டாலும் பவி பற்றிய ஒரு கவனத்தோடேயே சிந்தியாவின் வீட்டு சுற்றுச் சுவரை அடைந்தான் அவன்.

பவியின் பாதுகாப்பு இவனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியம்.

சிந்தியா வீட்டு கேட்டை தாண்டி சற்று தொலைவில்தான் வாகனத்தை நிறுத்தி இருந்தான் ப்ரவி. இங்கு அவன் செய்யும் வேலை பவியின் கண்ணில் விழுந்துவிடக் கூடாதே!

மாணிக்கம் சொல்லிய முதலாளி சிந்தியாவின் அப்பா என புரியவும்தான் இப்படி வகை திட்டம் தீட்டியிருந்தான் அவன். சிந்தியாவின் தந்தை ஓரளவு ப்ரபலமான அரசியல்வாதி.

ஏற்கனவே மாணிக்கத்திடம் கேட்டிருந்த தகவல்தான் என்றாலும் இன்னும் அங்கு கேமிரா எதுவும் பொருத்தப்படவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, மரங்களின் மறைவில் காம்பவ்ண்ட் சுவரை தாண்டி குதித்தான்.

அங்கிருந்து இருட்டிலேயே நகர்ந்து முன் கேட் அருகில் இருக்கும் செக்யூரிட்டி அறை புறம் சென்றால் அவர் அங்கு சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தார். எதிர்பார்த்த விஷயம்தான்.

கொன்று எடுக்கும் குளிருக்காக பாதி முகம் மறைக்கும் குரங்கு குல்லாவும் மப்ளருமாக வந்திருந்த ப்ரவி, மப்ளரால் அந்த செக்யூரிட்டியின் வாயை சத்தமிடாதபடி கட்டினான் என்றால் கையிலிருந்த கயிறை அவரது கை கால்களை கட்டி உருட்ட பயன்படுத்தினான்.

“இங்க பாரு நான் இப்ப செய்றது உன் நல்லதுக்குத்தான், நாங்க ஒருத்தர் இல்ல ஒரு கூட்டமா  வந்துருக்கோம், எதாவது ஆட்டம் போட்டியோ பிரிச்சு மேய்ஞ்சுடுவாங்க என் கூட வந்துருக்கவனெல்லாம், அதே இது அமைதியா இருந்தா உன் முதலாளிட்ட என்ன இப்படி கட்டி உருட்டிடாங்கன்னு சொல்லி நீ தப்பிச்சுக்கலாம், எப்படி வசதி?” என அமைதியாய் அந்த செக்யூரிட்டியை அவசியமான அளவு மிரட்டியவன்,

அவனை  தூக்கி தன் தோளில் போட்டு வந்து, லாரியின் கதவை சற்றாய் திறந்தான். மாணிக்கம் இப்போது செக்யூரிட்டியையும் வாங்கி உள்ளே உருட்டினார்.

அதோடு கதவை மீண்டுமாய் பூட்டிவிட்ட ப்ரவி, அடுத்து சற்று தள்ளி நின்று அழைத்தது அபிஜித்தை.

“என்னடா சாப்டாச்சா?” என இவன் ஆங்கிலத்தில் விசாரிக்க, “நீ ஸ்பாட்டுக்கு போய் சேர்ந்துட்டியா?” என அதை decode செய்தான் அபிஜித்.

“சாப்பாடா? இந்த நேரத்துலயா? அதெல்லாம் முடிச்சு டீ சாப்ட வந்து நிக்கேன்” என அபிஜித் இப்போது சொன்ன பதிலுக்கு “ஸ்பாட்டுக்கு வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என அர்த்தம். திருக்கழுகுன்றம் சென்றிருந்தான் அபிஜித். அங்கு மாணிக்கம் வகையறாவின் குடும்பங்கள் குடி வைக்கப்பட்டிருக்கும் குடிசைப் பகுதிக்கு சற்று தூரத்தில் பெரிய பெரிய லாரிகள் இரண்டை கூட்டிப் போய் காத்திருக்கிறான் அவன்.

அபிஜித் அந்தப் பகுதிக்குத்தான் பணி அமர்த்தல் உத்தரவு கொடுக்கபட்டு அனுப்பப்பட்டிருக்கிறான். இன்னும் இருநாளில் அங்கு பணியில் சேர இருக்கிறான் என்பது இங்கு முக்கிய விஷயம்.

“டீயா? எஞ்சாய், இப்ப நீ டீயப் பத்தி சொல்லவும் எனக்கும் டீ சாப்ட ஆசையா இருக்கு, அதுக்கு வழியப் பார்க்கிறேன்” என்ற இவனது பதிலோடு பேச்சு முற்றுப் பெற்றது.

அடுத்து பவியிடம் வந்து நின்றான் ப்ரவி “இப்ப உன் சிந்திக்கு கால் பண்ணி கேட்டுக்கு வரச் சொல்லு, வீட்டுக்குள்ள ஒரு லைட் கூட  எரியல, எல்லோரும் தூங்கிட்டாங்க போல, யாரையும் எழுப்பிட வேண்டாம்னு சொல்லு, செக்யூரிட்டி அவர் இடத்துல இல்ல (அடாங்கோ, கைய கால கட்டி தூக்கி போட்டத இப்படி கூட சொல்லலாம்ங்களா?) உன் ஃப்ரென்ட் கேட்ல தனியா வந்து நிக்றாப்ல இருக்கும்ல, உன்ட்ட போன்ல பேசிகிட்டே வரச் சொல்லு, அதுக்குள்ள நாமளும் அங்க போய்டலாம்” என்க,

அடுத்து இவள் “ஹி ஹி பூதத்தையே எழுப்ப ஒரு பூதம் புறப்பட்டு வந்துருக்கனே, ஏய் லூசு உன் வீட்டு வாசல்லதான் நிக்கேன், சத்தம் போடாம சைலண்டா வா, இது ஒரு போலீஸ்காரரின் ஆர்டர், போலீஸ் ஆக்க்ஷன்னா பிடிக்கும்னு சொல்லுவியே அது இப்படித்தான் இருக்கும்” என விதவிதமாய் விளையாட,

“ஹையோ நீயா? நிஜமாவா? உங்க ப்ரவியா கூட்டிட்டு வந்துருக்காங்க? உங்க தயாப்பாக்கு தெரியாமலா? அய்யோ கெத்து பார்டிடி உங்க ப்ரவி, ஒரு அஞ்சு நிமிஷம் கொடுடி நல்லதா ட்ரெஸ் பண்ணிட்டு வரேன், நைட் ட்ரெஸ்ல இருக்கேன் இப்ப” என துள்ளியபடி அந்த சிந்தியும் கிளம்பி வர, அவள் வீட்டு கேட்டில் இவர்கள் அவளை சந்தித்தார்கள்.

சிந்தி வீட்டுக்கும் அதன் கேட்டுக்கும் இடையில் சில பல வரிசை மரங்கள் இருந்ததால் வீட்டில் இருப்பவருக்கு இதெல்லாம் கண்ணில்பட வாய்ப்பே இல்லை என்பது இங்கு குறிக்கப்பட வேண்டிய விஷயம்.

“ஹை லூசு எப்படிடி இருக்க? ஃபங்ஷன் எப்படி போச்சு?” என பவி சிந்தியைப் பார்க்கவும் விசாரித்தாள் என்றால், வந்த வேகத்தில் இவளை கட்டிக் கொண்ட சிந்தி,

“ஐய ஃபங்க்ஷன தூக்கி தூரப் போடு, இப்ப நீ வந்துருக்கியே இதுதான் மாஸ்” என இவளை ஏற்றவள்,

“ஐயோ ப்ரவி சார் சான்ஸே இல்ல, என்னோட இத்தன வருஷ லைஃப்ல இதுதான் பெஸ்ட் மொமன்ட், இத விட பெட்டரா இனிமே கூட எதுவும் வரும்னு தோணல, தேங்க் யூ தேங்க்யூ சோ மச்” என ப்ரவியை வரவேற்க,

“பவி உங்களப் பத்தி சொல்றப்பல்லாம் உங்கள பார்க்கணும்னு இருக்கும், இப்ப நீங்களே இங்க அதுவும் இப்படி வந்ததுல… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, அவ்வளவு சந்தோஷமா இருக்கு” என்றபடி தன் கையை கிள்ளிக் கொண்டவள் “கனவு காண்கிறனோன்னு இருக்கு” என்றும் சொல்லிக் கொள்ள,

“இதில என்ன இருக்கு, ப்ளஷர் இஸ் மைன்” என அவனது சிந்தாத புன்னகையோடு அதை ஏற்றான் ப்ரவி.

இங்கு பவிக்கு சுள்ளென எங்கோ எதோ செய்கிறது. எங்கன்னு குனிஞ்சு பார்த்தா வயித்ல பச்சை மிளகா. ‘சிந்தி கொஞ்சம் ஓவரா ப்ரவிட்ட உருகுறாளோ? இவன் வேற என்ன ப்ளஷர் இஸ் மைன்னு சொல்றான்?’

அடுத்த பக்கம்