துளித் தீ நீயாவாய் 2 (5)

புல்லட்டில் ஏறும் போதே கொதித்துப் போய் இருந்தாள் அவள்.

இதில் இதுதான் பவிக்கு ப்ரவியுடனான முதல் பைக் சவாரி. முன்பு ஏன் சென்றதில்லை என எப்படி யோசித்துப் பார்த்தாலும் புரியவில்லை அவளுக்கு. ப்ரவியுடன் என்றால் காரில்தான் செல்வது. பைக் பயணத்திற்கு இவள் ஆசைப் பட்டால் அது கருணுடன் மட்டுமே நடந்திருக்கிறது.

முன்பு இவனுடன் செல்வதென்றால் இயல்பாய் சென்றிருப்பாள்தான், ஆனால் இப்போதோ அப்படி முடியவில்லை. அவன் பெர்ஃப்யூம் வாசத்திலிருந்து அவனது இத்தனை அருகாமை வரை அனைத்தும் இப்போது விஷயமாகப் படுகிறதே!

அவன் மீது எள்ளளவும் பட்டுவிடக் கூடாதென விறைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

புடவை கட்டி புல்லட்டில் இதுவரை உட்கார்ந்திருப்பாளாமா என்ன? எவ்வி போய் எக்கு தப்பா எங்க விழுவமோ என்ற ஒற்றை பயமே அவளை பிரதானமாய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது, ஆனாலும் அவன் மீது கை வைப்பதைக் கூட அவளால் கற்பனை செய்ய முடியவில்லை.

இதில் அவனை எப்படி பிடித்துக் கொள்ள?

புல்லட் சாலையின் ஒவ்வொரு மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும் போதும் இவளது கோபம் இன்னும் இன்னுமாய் ஏறி எகிறிக் கொண்டிருக்கிறது.

யார் இவன புல்லட்ல வரச் சொன்னதாம்?

இதில் இவர்களது வீடு இருந்த தெருவுக்குள் நுழையவும் கண்ணில் பட்ட கடையில் வண்டியை நிறுத்தினான் ப்ரவி.

“வீட்டுக்கு தேவையான வெஜிடபிள்ஸ் வாங்கிக்கலாம் பவி” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இவளோ வீட்டை நோக்கி விறு விறென சென்று கொண்டிருந்தாள்.

“ரொம்பவும் நல்லது, வீட்டுக்காவது போறியே” என முனங்கத்தான் முடிந்தது இவனால்.

தங்கள் வீட்டை மிகவும் நெருங்கிய போதுதான் பவி அதை கவனித்தாள்.

இவர்கள் வீட்டிற்கு அடுத்திருந்த காலி மனையில் சின்னதும் பெருசுமாய் நின்றிருந்த புதர் செடிகளுக்குள் விழுந்து கிடந்தாள் ஒருவள்.

இங்கிருந்து பார்க்க அவள் முகம் தெரியவில்லை எனினும் அவளது உடையிலேயே அது யார் என புரிந்தது.

காலையில் வந்து இவர்கள் வீட்டுக் கதவை திறந்தாளே அந்த சிறு பெண்.

“பவி ப்ளீஸ் பக்கத்தில் போகாத!” என ப்ரவி தூரத்திலிருந்து சொல்லிய படி ஓடி வந்து கொண்டிருக்கும் போதே, சென்று அந்த சிறு பெண் தலையை பற்றி தன் மடியில் வைத்திருந்தாள் பவித்ரா.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 3

 

7 comments

 1. Ayyo pavam policekar ipidi etiku potiya seyra pondatiya vachukittu enna than panna potaro?in the pavi ponnu ethuvum prachanaya iluthu vachukama iruntha sari.

  • அருமை!!!!வித்தியசமான பேர் வைக்க உங்களால மட்டும்தான் முடியும்!!!!

 2. Wat happened to pavi intha alavuku avanai veruka reason 😢😢 hero romba paavam pa porumaikum Oru ellai undu nu Oru naal kamika poran privi

 3. Inga veni anga that annachi kolunthan,. Story take off from all the aspect. Thayappa va yen thaya aththanu thiru thara padichu therinchippom.

  Veniya siru pen. Enna prachanailam vara poguthu. Already veliyave neraya prachanai varum pola. Ithula ivanga rendu perukulla etho prachanai vera.

  Kalyanam panni aganumnu thayakaga kalyanam pannitannu kovathula irukalo or ethavathu prachanaila irunthu safe caurd panna kalyanam pannitano

 4. Enamo nadakudhu, marmama irukudhu…
  Orey dishyum dishyum nu sandai kozhi madhiri silirthukuranga.
  Pavi oda kovathuku reason- pravi police aguradhala irukumo? Avaroda family a nambi Pavi irundhurukalam. Adhuve avaluku oru point la backfire agavum, andja hurt oda vilaiva ava Pravi mela kova paduralo enavo.
  Idhula Dhaya pa epdi Dhaya athana marunaru? Ivanga rendu peroda family pathi onume sollalaye?

 5. Veni ungaluku pidicha name so kandipa bad ah iruka chance ila..she might be the second heroine ….!! Then pavi first epi LA avana pathi Elam theriyumnu emanthirupen soliva so some misconception abt pravi….pavam pravi boy unga heroes lam porumaiya irupanganalum payanuku adi balama LA vizhudu :)…dayappa to daya athan …noting and quoting this ava Akka oda husband oh ila pravi Anna vohh…??? Ila ava parents uyirodai ilama iva dhaya ta valanthirupaaloo so more attached to them….bcz avanga lum chinathulenthu nalla tha care pana pola theriyudhu…and intha marriage nala pavi Ku palaya unmaolam therinjirukumo ?? So depressed with the whole lot…..mudila Ka ithuku mela

 6. ippo varaikkum kadhaiyil edhuvum guess panna mudiyalai. aanaal Pavi.. Pravi rendu perukkum chemistry zig zag aaduittu irukku.. Veni kku enna achu? veni yin indha nilamaikku andha Kani annachi karanamo? waiting to read sis

Leave a Reply