துளித் தீ நீயாவாய் 2 (4)

இப்போது இவன் போனதும் ஆளாளுக்கு ஒரு மரியாதை உடல் மொழியுடனும், வணக்கம்யா என்ற வார்த்தைகளுடனும் விலகி நிற்க,

விடை எதுவும் எதிர்பார்க்காத ஒரு பாவத்துடன் இவனை ஒரு கணம் பார்வையால் சந்தித்தாள் பவித்ரா.

‘இங்க உன்ன யாருடா வரச் சொன்னது?’ என அந்தப் பார்வையை மொழி பெயர்த்தது இவன் மனம்.

“அந்தப் பக்கம் ஒரு குழியத் தோண்டி இதப் புதச்சுடலாம் sweet heart, அந்தக் குழில அப்படியே ஒரு தென்ன மரத்த வச்சுவிட்டுட்டன்னு வை, அமோகமா வளரும், விவசாயத்துக்கு இது நல்ல உரம்” போட்டுப் பார்த்தான் இவன்.

‘அதான் இவன் சொல்றதுக்கெல்லாம் எதிர்பதமா மட்டும்தானே வேலை செய்றா, இவன் பாட்டுக்கு புலி வர இடத்துக்கு நீ வராத பவின்னு சொல்லப் போக, இனிம இங்க இருந்து எங்கயும் வரமாட்டேன்னு சொல்லிட்டான்னா என்னாகிறது?

இதுன்னா விவசாயம் செய்ன்னு இவன் சொன்னதுக்காகவே அவ போடா நான் விவசாயத்தை தலை முழுகிட்டேன்னு சொன்னா இவனுக்கு நிம்மதிதானே!

Sweet heartனு சொல்லி  தூண்டி வேற விட்டாச்சு.

பவி என்ற புலிக் குட்டி இனி எப்படியும் எடக்கு மடக்கா ஒரு முடிவு எடுக்கும்’ இவன் இப்படியெல்லாம் எதேதோ கணக்குப் போட,

அவளோ பதில் என எதுவும் சொல்லவில்லை.

‘சே என் பவுன்சர நோ பால் ஆக்கிட்டியே பவிமா’

அடுத்து அந்த விசயனின் கட்டளையில் சிலர் குழி தோண்டி பன்றியை புதைத்துவிட்டு கலைய,

இப்போது பவி ப்ரவியுடன் கிளம்பியாக வேண்டும்.

“உங்கள யார் வரச் சொன்னா? நானே வந்திருப்பேன்ல? அதுவும் புல்லட்ட தூக்கிட்டு வந்திருக்கீங்க?”

புல்லட்டை நிறுத்தி இருந்த இடத்துக்கு இவர்கள் இருவருமாக நடந்த போதுதான் வாய் திறந்தாள் இவன் பாரியாள். சிறு குரலில் சீறினாள்.

‘ஏன் ஜீப்ல ட்ரைவரோட வந்து, நம்ம வீட்டு கதைய அவருக்கும் காமிக்கணுமோ? இதுனா யூனிஃபார்ம்ல இருக்க என் கூட புல்லட்ல வந்தன்னா அடுத்து இந்த பக்கம் யாரும் உன்ட்ட ப்ரச்சனை செய்ய யோசிப்பாங்கல்ல’ என உண்மை காரணத்தை காலை வரை இருந்த ப்ரவியானால் சொல்லி இருப்பான்.

“ஆனாலும் உன் ஹஸ்பண்ட் மேல உனக்கு ஓவர் எக்ஸ்பெக்டேஷன்தான் பவிக்குட்டி, நான் நல்லாவே ஃபிட்தான் ஆனா அதுக்காக புல்லட்டல்லாம் தூக்கிகிட மாட்டேன்மா, அத ஓட்டிட்டிடுதான் வந்தேன்” என அதுதான் விஷயம் போல் மொக்கை போட்டான்.

உண்மையில் திகைத்துதான் போனாள் பவி. காலை வரை அவன் இவளிடம் பார்த்து பார்த்து பேசியதற்கும் இப்போதைய இவனது இந்த அவதாரத்திற்கும்… என்னவாயிற்று இவனுக்கு?

ஆனாலும் ஏனோ இறுகிப் போய் கிடந்த இவள் மனதில் இவள் சம்மதமே இன்றி சின்னதாய் ஒரு இலகு நிலை அரைக் கால் நொடி.

தினமுமே அழக் கூட வராமல் அடைந்து கிடக்கும் மனதுக்கு இது பிடிக்கிறது போலும்.

அதற்குள் உன் ஹஸ்பண்ட் என்ற பதம் உறைக்க, அது கிளறிய காட்டரக்க எரிச்சலில் “ஆட்கள் இருக்காங்கன்னு பொறுத்து பொறுத்து போனா ரொம்பவும் பேசுறீங்க” என காட்டமாய் கடுகடுத்தாள் இவள்.

அவனோ சட்டென இவள் முகம் அருகில் குனிந்து “அதான் ஏன் பவிமா? அடுத்தவங்க இருந்தா என்ன? அவங்கட்ட ஏன் உன் ப்ரவிய விட்டு கொடுக்க மாட்டேன்ற?” என்றான் வெகு வெகு மென்மையாக.

அந் நேரம் அவன் கண்களில் தேங்கி நின்ற அந்த மின்னலும், அவன் முகமெங்கும் விரவிக் கிடந்த இந்த அன்பும் அது சார்ந்த எதிர்பார்ப்பும் ஒரு மந்தகாசமும் முழுக்க முழுக்க இவளுக்குப் புதிது.

முழுதாய் 1000 மில்லி செகண்ட் அதாகப்பட்டது ஒரு நொடி நேரம் அவனின் இந்த மின்னலுக்கும் மந்தகாசத்துக்கும் இடையில் இமைக்காமல் சறுக்கு விளையாடியவள்

இதுதான் காதல் என்பதின் முகபாவமா? என்ற ஒரு உள்மனக் கேள்வியிலும், அதன் பின்புதான் புரிந்த அவன் கேள்வியின் அர்த்தத்திலும்,

“சை” என எரிந்து விழுந்தாள். “அது தயாப்… தயாத்தானுக்காக” எனும் போது முழு மொத்தமாய் இறுகிப் போய் இருந்தாள்.

“என்னால அவங்களுக்கு அவமானம் வர்றாப்ல ஆகிடக் கூடாது. கடன் பட்டுருக்கனே” முழுதும் மரத்த குரலுக்கு அவள் போக,

அது சுளீர் என இவன் சுயத்தை சவுக்கால் அடித்து சுள்ளென இவனுக்குள் கோபத்தை கிளப்பிட்டாலும் வாயை அடக்க வேண்டிய நிலை இவனுக்கு.

அவளுக்கு எப்படியோ இவனுக்கு இவனது பவி உயிர் ஆயிற்றே!

“பவி!!” என்ற பதத்தை கடித்து துப்பி தன்னை சமனப்படுத்திக் கொண்டவன் அடுத்து எதுவுமே பேசவில்லை.

அவனைத் தொடர்ந்து புல்லட்டில் இவளும் ஏறி அமர்ந்து கொண்டாலும், இவளும் வாய் திறக்கவே இல்லை.

வழியெல்லாம் ப்ரவி பவியைப் பற்றிதான் யோசித்துக் கொண்டு வந்தான்.

திருமணம் ஆகிய இந்த ஐந்து நாட்களிலும் இவன் பார்த்திருக்கும் பவியை வைத்து இவன் கண்டு பிடித்திருக்கும் விஷயம் உண்மையாய் இருக்கும்தான். ஆனால் அதை அவள் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என இவன் அவசரப் படுகிறானாய் இருக்கலாம்.

இப்போதைக்கு இவன் பொறுமையாய் இருப்பது எல்லோருக்கும் எல்லா வகையிலும் நல்லது என முடிவு செய்து கொண்டான்.

ஆனாலும் இன்று காலை வரை இருந்த மன அழுத்தம் இப்போது குறைந்திருக்கிறதுதான் இவனுக்கு.

பயணம் செல்லச் செல்ல இப்படி இவனது உணர்வுகள் இறங்கி வந்து சமனப் பட்டது போல் பவிக்கும் இறங்கி வந்திருந்ததாமா? இல்லையே!

அடுத்த பக்கம்