சட்டென நனைந்தது நெஞ்சம் 3 (2)

இது ஒரு பக்கமா, ரூம்லயும் ரெண்டு பேருக்கும் தமிழ் தெரியாது அட போங்கடா. நான்லாம் ஒரு நாளைக்கு எவளோ வார்த்தை பேசற ஆளு இப்படி என்னைய அதுல பாதியை பேச வெக்கிறீங்களேன்னு இருந்தது.

என் ட்ரைனிங் எல்லாம் முடிஞ்சு டீம் பிரிச்சாங்க, நான் ஒரு பேச்சுக்கு இந்த டீம் போனா எனக்கு நல்லா இருக்கும்ன்னு தோணுதுன்னு சொன்ன டீம்மே எனக்கு கிடைச்சது. எனக்கு நடத்த விஷயங்கள்ல ரொம்பவே நல்ல விஷயம்ன்னு இதை நினைக்கறேன்.

அங்க போனா எல்லாரும் நம்ம ஆட்கள் போல தொனிடுச்சு, இதுல அந்த உண்மையில் அமைதியான பொண்ணும் என் டீம் வந்து மனு நீ இவளோ பேசுவியானு அதிர்ச்சி எல்லாம் ஆகி.

வந்த ஒரு மாசத்துல டீம்ல எல்லாரோடையும் பேச ஆரம்பிச்சு வேலையும் செய்ய ஆரம்பிச்சாச்சு.

இன்னொரு பக்கம் ஹாஸ்டல்ல என் ஆஃபீஸ்ல இருந்து கிளம்பி இருந்த சீனியர் ஒருத்தங்க கூட சேர்ந்து அப்படியே அவங்க ரூம்ல போய் அரட்டை அடிக்க ஆரம்பிச்சு. வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பிச்சு இருந்தது.

ஒரு ஆஃபீஸ் எப்படி இருக்கும்னெல்லாம் எப்படியும் தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லாத ஆள் நான். ஆனா இப்படி ஒரு ஆஃபீஸ் இருக்குமான்னு நெறய என்னைய ஆச்சரியப்படுத்தின ஆஃபீஸ் இது.

இப்போதான் காலேஜ் முடிச்சு வந்து இருக்க நீங்க தீடீர்னு ஒரு ஸ்டடில இங்க இதானே சொல்லியிருக்குன்னு  சொன்னதை கேட்டு நல்லா ஸ்டடி நாலேஜ் இருக்குன்னு  கிளைன்ட்டோட இருக்க கால்க்கு கூட்டிட்டு போவாங்கன்னோ. இது இப்படித்தானே பண்ணனும்னு யார் சொன்னாலும் அது சரியா இருந்தா யாரும் அதை ஏத்துக்குவாங்கன்னோ எனக்கு கண்ணு முன்னால நடக்கிற வரை நம்ப முடியாத விஷயங்கள்.

இதெல்லாம் நம்ம வேலையை நம்ம சரியா பண்றப்போ நமக்கு கிடைக்கும்னு இருக்குன்னு வெச்சுக்கோங்க, கிளைன்ட்க்கு அனுப்பின கோட் தப்பா இருக்குனு நம்ம கோட பார்த்து நாமளே பயங்கர அதிர்ச்சில இருக்கப்போ நம்ம மானேஜர் அதெல்லாம் ஒன்னும் இல்ல இப்போ சரி பண்ணிடலாம்னு சொல்லி அதுவரை 180 நோக்கி போய்க்கிட்டு இருந்த ரத்த அழுத்தத்தை சரி பண்ணுவது எல்லாம் கனவுல தான் நடக்கும்ன்னு நினைச்சு இருக்கேன்.

இப்படியே ஆஃபீஸ் ஒரு பக்கம் போச்சு. ஆஃபீஸ் இல்லாத வார கடைசில மாசத்துல ரெண்டு வாரம் ஊருக்கு போறது. மீதி ரெண்டு வாரத்துல காசு இருக்க வாரம் டி.நகர் இல்லாத வாரம் பீச் மாதிரி எங்கயாச்சும் போறது இல்லனா ஒரு அனிமேஷன் படம் ரூம்மெட் லேப்ல டவுன்லோடு பண்ணி ரூம்ல உக்காந்து பாக்கறதுன்னு பெரிய மாற்றங்கள் இல்லாம ஒரு வருஷம் ஓடிருச்சு.

இதுக்கு இடையில அதே டீம்ல வேற கிளைன்ட்க்கு வேலை பாக்க மாறினேன். ரூம் மாறினேன் இல்லனா என் பழைய ரூம்மெட்களோட படம் எல்லாம் பாக்க முடியாது.

இப்படி எதையெதையோ பண்ணிட்டு இருந்தப்போ புதுசா சில விஷயங்களை எதிர்கொள்ள ஆரம்பிச்சேன் அதுல இருந்து ஏதாவது பண்ணனும்னு புதுசா சில விஷயங்கள்ல இறங்கனேன்

(மனோ ரமேஷ்: அதெல்லாம் என்னன்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம் ஒரே தடவைல எவளோ சொல்லுவ நீயும் போய் ரெஸ்ட் எடு போ)

தொடரும்…

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

சட்டென நனைந்தது நெஞ்சம் – Comments Thread

சட்டென நனைந்ததோடு தொடர்புடைய மனோ ரமேஷின் இன்னுமொரு (முடிவுற்ற) குறும் தொடரை இங்கு பதிவிட்டிருக்கிறோம் ஃப்ரென்ட்ஸ். வாசித்து மகிழுங்கள்.

தனிமை கதவின் தாழ் நீக்கவா

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி