சட்டென நனைந்தது நெஞ்சம் – 2 (2)

“ஆமா அவங்க எல்லாம் என்னைய லூசுன்னு நினைக்கணும் அதானே, சரி உன் பாயிண்ட் ஓகே அதென்ன இடையில இதெல்லாம் நீ சொல்லணும்னு என்னைய சொன்ன, சிகரட் எப்படி ரெண்டு பேருக்கும் பொதுவா ஒரே கெடுதல் தானோ அப்படி தானே கருத்தும், பொண்ணுங்க தான் பொண்ணுவளுக்குன்னு பேசணும்ணு சொல்ல வரியா நீ?! இருக்காதே”

“பார்த்தியா இதுக்கு தான் பேசறது இப்படி எல்லாம் கேள்வி கேக்கத்தான் பேச ஆரம்பிக்கணும் மொதல்ல, நான் சொல்ல வந்தது பெண்களுக்காக ஆண்கள் பேசறப்போ கைதட்டல் வாங்கற சில விஷயம் பெண்களே பேசினால் கேள்விக்கு உள்ளாக்கப்படுது, அதை தான் நீயே இதை பேசி நான் கேக்கணும்னே, இந்த மாதிரி சிகரட் எல்லாம் இப்போ அந்த வகையில் இல்ல, நீ வேலைக்கு போ , இல்ல நீ ரெண்டு நாள் கான்பிரன்ஸ் இருக்கா போ பசங்கள நான் பார்த்துக்கறேன்னு ஹீரோ சொன்னா வாவ்னு இருக்கு. இதே ஸீன்ல ஹீரோ இந்த ஆபர் குடுக்க கொஞ்சம் லேட்டாகி ஹீராயினே பசங்கள பார்த்துகோங்க ரெண்டு நாளைக்குன்னா ஸீன் முன்ன குடித்த ஃபீல்ல பலருக்கும் தரதில்ல. அதான் நான் சொல்ல வந்தது.”

“தெளிவா புரிஞ்சிடுச்சு”

“என்ன இவன்கிட்ட பேச கூடாதுன்னா, சரி விடு. டேய் நாளைக்கு ஒரு பேட்ச் வராங்க போல, நம்ம வர்ஷினி போல ஆட்கள் வரணும் நம்ம டீம்க்கு அண்ணா கூப்டே தினமும் சாக்லேட் வாங்கிதரும்” மானவ்

“ஏன்டா வந்ததும் உடனே பேர் சொல்லி கூப்டுன்னா எப்படிடா.  இந்த வருஷம் என் ஜூனியர் யாருமே வரலைடா” வர்ஷினி

“எனக்கு தெரிஞ்சு திருச்சில இருந்தே யாரும் வரல” நிவேதன்.

“சரி வாங்க, போய் வேலையை பாப்போம்.”

தொடரும்…

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

சட்டென நனைந்தது நெஞ்சம் – Comments Thread

சட்டென நனைந்ததோடு தொடர்புடைய மனோ ரமேஷின் இன்னுமொரு (முடிவுற்ற) குறும் தொடரை இங்கு பதிவிட்டிருக்கிறோம் ஃப்ரென்ட்ஸ். வாசித்து மகிழுங்கள்.

தனிமை கதவின் தாழ் நீக்கவா

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி