சட்டென நனைந்தது நெஞ்சம் – 2

மனன்யா அங்க ஆஃபீஸ்க்கு வந்துட்டு இருக்கட்டும். நாம இங்க ஒரு ஆஃபீஸ்க்கு போவோம். சிஸ்டம்க்கு அடுத்து இருக்க இடம் காபிடேரியா.

“அடேய் நல்லவனே ஒரு மெயில் அனுப்பிட்டு வர இவளோ நேரமா இவன்கிட்ட தனியா மாட்டிகிட்டு இருக்கேன், இவளோ நேரமா என்னைய கேள்வி கேக்கறேன்னு சொல்லி படுத்தறான் டா”

 

“ரெண்டு பேரும் டிக்காஷன் மெஷின் கிட்ட வரை நல்லா தானே பேசிட்டு இருந்தீங்க, அப்பறம் எப்போ அடிச்சுக்க ஆரம்பிச்சீங்க”

 

“அடிதடி எல்லாம் இல்லடா, நம்ம ஆண் இனத்துக்கு நடக்கற அநீதியை தட்டிக்கேட்டுட்டு இருந்தேன் அத தான் இப்படி சொல்லிட்டா”

 

“என்னடா ஆளுக்கு ஒரு பக்கம் பேசறீங்க, இந்த டீ பாக்ல இருந்து தண்ணிக்கு டிக்காஷன் இறங்கர நேரத்துல சொல்லுங்க ரெண்டு பேரும் என்ன பண்ணீங்கன்னு”

 

“நான் சொல்றேன் முதல”

 

“சரி சொல்லுமா வர்ஷினி”

 

“டீ எடுத்துட்டு இருக்கும் போது நம்ம கிளாஸ் விண்டோ வழியா அந்த காலி கிரௌண்ட் தெரிஞ்சது அங்க ஒரு பொண்ணு சிகரட் பிடிச்சிட்டு டென்ஷனா பேசிட்டு இருந்துச்சு, நான் அதை பார்த்துட்டு எவளோ வேக வேகமா புகையை விடுறாங்க பாரேன், அந்த கால் பேசறத்துக்குள்ள எவளோ சிகரட் புடிப்பாங்களோன்னு சொன்னேன்” வர்ஷினி

“அதுக்கு நான், எனக்கும் ஒரு சீனியர் தெரியும் அவரும் ப்ரோக்ராம் ஓடல ரிசல்ட் வரலைன்னு டென்ஷன் ஆகறப்போ எல்லாம் தம் அடிக்க போயிடுவாரு. இவங்க எல்லாம் டென்ஷன சேனலைஸ் பண்ண தெரிஞ்சுக்கணும் இல்லைனா நுரையீரல் என்ன ஆகறது, வாழ்க்கை என்ன ஆகறதுன்னு சொன்னேன் வேற வழி கண்டுபுடிக்கணும்னு சொன்னேன்” மானவ்

“எப்படி ஒன்னைய மாதிரி வேற வேலை பாக்கணும்டா டென்ஷன் குறைய” நிவேதன்

“குறுக்க பேசாதடா, இவளோ நேரம் எஸ்ட்ராக்ட் தானே எடுத்துட்டு இருந்த இப்போவாச்சும் உருப்படியா கேளு, நான் சொன்னதை கேட்டுட்டு என்ன சொன்னா தெரியுமா” மானவ்.

“தெரியாத்தனமா ஒரே ஒரு தடவ ஏதோ வேகத்தில அவராச்சும் பையன்னு சொல்லிட்டேன், அதுக்கு இந்த சமுதாயம் ஏன் ஆண்களை வஞ்சிக்குதுனு கேக்கறான், நாங்க என்ன லங்ஸ் இல்லாமையா பொறந்தோம், அவராச்சும்னு சொல்லிட்டியேன்னு கேட்டு என்னைய கொடுமை படுத்திட்டு இருக்கான்”

 

“ரெண்டு பேர் சிகரேட் புடிச்சாலும் ஒரே கெடுதல் தான், நாங்க மட்டும் கெட்டா பரவால்லையா என்ன அநியாயம் இதுன்னு கேட்டேன்டா”

“அதுக்கு தான் நீ என்னைய தேட ஆரம்பிச்சிட்டியா, He has point, எல்லாரும் பொண்ணுங்க மேல மட்டுமே அக்கறைப்பட்ட எங்க மேல யாரு தான் அக்கறைப்படறது”

“என்னடா வர வர நீயும் அவனை மாதிரியே ஆகிட்ட, இனிமே நான் ரெண்டு பேர் மேலயும் அக்கறைப்படற ஆளை விடுங்கடா சாமி”

“ஹே வர்ஷினி என்ன நீ இதுக்கே சலிச்சுக்கற, இதெல்லாம் நீ பேசி நாங்க கேக்கணும் அதான் இன்னும் நல்லா இருக்கும், உடனே பொண்ணுங்க சிகரட் புடிக்கறத சரின்னு சொல்லணுமான்னு கேக்காத, பொண்ணுங்களுக்கு எப்படி லங்ஸ் முக்கியமோ அப்படித்தான் பசங்களுக்கும் ரெண்டு பேர் பண்றதும் ஒரே ரீதியான உடல் நல கேடுதான் இவங்களுக்கு வர கேன்சர் அவங்களுக்கு வந்தா வேறயாவா இருக்க போகுது”

“அது கரெக்ட் தான்.” வர்ஷினி

“ஆனாலும் எப்படிடா இப்படி சலிக்காமல் பேசற இந்த ஏரியா எல்லாம்” நிவேதன்

“இப்போ உன் பக்கத்துல ஒருத்தர் பேசிட்டு இருக்காரு ஒரு ஃபிராட் சீட் கம்பெனில பணம் போட போறேன்னு பேசிட்டு இருக்காரு அது ஃபிராட் கம்பெனின்னு உனக்கு தெரியும் உடனே உக்கார வெச்சு சொல்லுவ பார்த்தியா ஏன் தப்பான இடத்துல ஒருத்தர் இன்வெஸ்ட் பண்ணிட கூடாதுன்னு தானே, அப்படித்தான் கூட இருக்கவங்க எண்ணங்களை தப்பான ஐடியாலஜில இன்வெஸ்ட் பண்ணிட கூடாதுன்னு நான் பேசறேன், எப்படி நீ எங்கூட சேர்ந்து இப்படி ஆகிட்டியோ அப்படியே வர்ஷினியையும் இப்படி மாத்திவிட்டு அவ ரூம்மேட்ஸ் கிட்ட எல்லாம் பேச விடுவோம்.”

அடுத்த பக்கம்