சட்டென நனைந்தது நெஞ்சம் 1 (2)

அந்த ஸ்கூல் சேர்ந்த புதுசுல பெருசா வித்யாசமே இல்லாம தான் போச்சு. முதல் பரிட்சை முடிஞ்சதும் அந்த ஸ்கூல் வழக்கமான டாப்பர் பொண்ண விட என்னைய கொஞ்சம் அதிகமா டீச்சர்ஸ் பாராட்டிடாங்க, அதுக்கு அடுத்து வந்த ஒரு நாள்ல இடம் மாத்தி உக்கார வெக்கும் போது அந்த பொண்ணு என் பக்கத்துல உக்காரதுப்போல வந்தப்போ அதை அவாய்ட் பண்ண இவளை என் பக்கத்துல உக்கார சொல்லிடுச்சு. அப்போ தான் நாங்க ஒரே கிளாஸ்ல படிக்கறோங்கறத தாண்டி பேச ஆரம்பிச்சோம்.

அவளுக்கு மாக்ஸ் பிஸிக்ஸ் வர அளவுக்கு கெமிஸ்ட்ரி, பையாலஜி வராது, அதனால இது ரெண்டும் என் கூட தான் படிப்பது. அப்படியே பேசி பேசி ரொம்ப ஃப்ரென்ட்ஸ் ஆகிட்டோம் எனக்கு வேற First Born syndrome , அவளுக்கு சிங்கிள் சைல்ட் syndrome . அப்படியே அவளுக்கு ஒரு சிஸ்டர் பிகரா நான் ரிஜிஸ்டர் ஆகிட்டேன்.  ஆனா வயசுல அவ தான் அக்கா கொஞ்சம் மாசத்துக்கு.

10த் வரை வந்து 10த் லீவுல எங்க அப்பா நம்பர் வாங்கி டெய்லி போன் பேசுவா. பாதி நாள் என்னைய எழுப்பி விடுவதே இவளாதான் இருக்கும்.

அடுத்து 11த் 12த் மால்வேசி சொலனேசி எல்லாம் என்னால வரைய முடியாது எனக்கு புடிச்ச மாக்ஸ நான் ஆர்ட்ஸ் கம்ப்யூட்டர் குரூப்ல படிக்கறேன்னு சொல்லிட்டா. பேச ஆரம்பிக்கதான் எங்களுக்கு கெமிஸ்ட்ரி  பயாலஜி தேவப்பட்டுச்சு, இப்போ அவ அகவுண்ட்ஸ் எகானமியும் என் பென்சின் ரிங்கும் மனித உள் உறுப்பு மண்டலமும் இல்லாமவே நாங்க நெறய பேசிட்டுத்தான் இருந்தோம். அப்பறமும் காலேஜ் அவ CA நான் பி.டெக். ஆனா போன் மற்றும் என் சைக்கிள் புண்ணியத்துல தினமும் பேசிட்டு, கிட்டத்தட்ட தினமும் பார்த்துட்டும் இருந்தோம். இப்போ ஒரு குட்டி இடைவெளி, அவ M.Com CA படிச்சிட்டு இருக்கா, நான் 4 வருஷ டிகிரிய முடிச்சு வேலைக்கு போய் சேர போறேன். இதான் எங்க முன் கதை சுருக்கம். இனிமே என்ன நடக்குதுன்னு நீங்க கூடவே பார்த்து தெரிஞ்சுக்கலாம்.

நனையும்…

 

தொடர் பற்றிய தங்கள் கருத்துக்கள், கேள்வி, விவாதங்களை கீழ்கண்ட திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

 

சட்டென நனைந்தது நெஞ்சம் – கருத்து திரி

 

திரியில் கமென்ட் செய்ய நீங்கள் தளத்தில் Register செய்திருப்பது அவசியம்.