சட்டென நனைந்தது நெஞ்சம் 1

48382598_1298557786953562_5230419655629209600_n

“என்னங்க நித்திலா மூஞ்சியை ஏன் இப்படி வெச்சிட்டு இருக்கீங்க”

“ஹே என்ன கிண்டல் பண்ணிட்டு இருக்க என்னைய”

“கிண்டலா ?! நான் கேள்விதானே கேட்டேன், எனக்கு போன வருஷம் வேலை கிடைச்சப்போவே எப்படியும் நான் சென்னை கிளம்புவேன்னு தெரியும்ல. அப்பறம் என்ன புதுசா தெரிஞ்ச போல முதல்ல இருந்து ஃபீல் பண்ண ஆரம்பிக்கற”

“என்னனாலும் நாளைக்கு கிளம்புறன்னு யோசிக்கறப்போ தூரமா போறேன்னு இப்போதானே நல்லா தோணுது.”

“தூரமாவா நான் என்ன ஆஸ்திரேலியாவா போறேன் நம்ம நாட்டுக்குள்ள அதுவும் நம்ம மாநிலத்தோட தலைநகரம் எப்படி பார்த்தாலும் 400 கிமீ கூட இல்லாத ஊரு அதுக்கு இந்த எமோஷன் அதிகம் சொல்லிட்டேன் ஆமா”

 

“ஆஸ்திரேலியாக்கே போனாலும் நான் என்ன அண்டார்டிகாக்கா போறேன் இங்க இருக்க ஆஸ்திரலியா தானேன்னு நீ பேசுவ ராஸ்கல்”

“நான் என்ன கௌதம் மேனன் ஹீரோவா இங்க இருக்குடா அமெரிக்கா மாதிரி, இங்க இருக்கு நித்து ஆஸ்திரலியான்னு சொல்றதுக்கு, சரி சீக்கிரம் ஃபீல் பண்ணி முடிச்சிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு பொறுமையா ரெடி ஆகிட்டு நைட் ட்ரெயின் ஏத்திவிட வந்துடு சரியா”

“பின்ன நான் வராம கிளம்பிடுவியா நீ, திருச்சி எல்லையை தாண்ட விட மாட்டேன்”

“வெரி குட் தட்ஸ் மை நித்து, சரி நான் கிளம்பறேன், அம்மா நான் கிளம்பறேன்”

“இரு மனு சாப்பிட்டு போய்டேன், சாப்பிடற நேரம் ஆக போகுதில்லை”

“இல்ல, இவளோட சோக முகத்தை சரி பண்றேன்னு சொல்லிட்டு வந்ததால் தான் எனக்கு இன்னும் போன் வரல, இல்லைனா எங்க அப்பா போன் பண்ணி எவளோ நேரம் பேசுறீங்கன்னு நீங்க ரெண்டு பேரும் கடிகாரம்லாம் பாக்க கூடாது காலண்டர் பாக்கணும்னு கலாய்ச்சுவிட்டுருப்பாரு. நான் கிளம்பறேன்”

 

“எனக்கே பொசுக்குன்னு இருக்கும் நீ வரலைனா, அதான் உன் ப்ரென்ட் ஒரே சோக கீதம்”

“அட நீங்க வேற, 9த் 10த் ஒரே கிளாஸ், அப்பறம் 11த் 12த் லையே வேற வேற குரூப் ஒரே ஸ்கூல் அடுத்த கட்டம் காலேஜ்ல வேற வேற ரூட்ல வேற வேற காலேஜ் இப்போ அதுக்கும் அடுத்த ஸ்டெப் என்பதால் வேற வேற ஊர் அவளோ தான் பெரிய மாற்றம்லாம் இல்லையே, அதான் சொல்றேன் பெருசா எந்த மாற்றமும் இல்லாம தான் எல்லாமே இருக்கு இந்த 8 வருசம் போல தான் இன்னும் பல வருஷமும் இருக்கும், சரி டாட்டா  வரேன்”

என்ன மக்களே திருச்சில இருந்து சென்னை போகறத்துக்கா இந்த அலப்பறைன்னு இருக்கா உங்களுக்கு?  வாய்ப்பு இருக்கு! ஏன்னா அப்படியே அவளை பழக்கிட்டோம். ஊப்ஸ் அவளை பத்தி சொல்லும் முன்னாடி என்னைய பத்தி சொல்லணும்ல,  நான் மனன்யா இப்போ இருந்து கொஞ்ச காலத்துக்கு நீங்க என் கூட  பயணிக்க வேண்டிவரும்.

8 வருஷத்துக்கு முன்னாடி இப்படி இன்னொரு மே மாசத்துல எங்க வீட்ல ஒருப்பெரிய முடிவு எடுக்கப்பட்டுச்சு எங்க அப்பா மன்னார்குடில இருந்து திருச்சி போகலாம்னு யோசிச்சு நான் ஸ்கூல் மாறி வந்தேன்.  அங்க தான் நித்திலாவ எனக்கு முதலில் தெரியும். அப்படியே என் கூட என்னோட 9த் கிளாஸ்க்கு வாங்க ரொம்ப நேரம்லாம் இல்லை சீக்கிரம் திரும்பி வந்திடலாம்.

( (அது மனன்யாவா, இது நான் தான் மனோ ரமேஷ் நானும் அப்போ அப்போ வருவேன் வந்து ஏதாவது சொல்லிட்டு போவேன் அது தெளிவு படுத்தமா குழப்பம் பண்ணா கமெண்ட்ல சொல்லிடுங்க.)

அது ஏன் முக்கிய முடிவுன்னா, அந்த முடிவை எடுக்கலைனா மனன்யா மன்னார்குடிலையே படிச்சு இருப்பாங்க, நித்திலாவ தனிமை கதவின் தாழ் நீக்கவால போல அவங்க கல்யாணதப்போ பார்த்திருப்பாங்க. என்னடா புதுசா குழப்புறன்னு பாக்காதீங்க நம்ம இருக்க சூழ்நிலைல நாம வாழர ஒரு டைமன்ஷன்ல எடுக்கற முடிவே தான் எல்லா இடத்துலயும் எடுக்கணும்னு இல்ல அப்படியே பல முடிவுகள் மாறினாலும் நம்ம வாழ்க்கை யாரோடெல்லாம் பிணைக்கப்பட்டிருக்கோ அவங்க எல்லாரோட தான் நாம எல்லாம் டைமன்ஷன்லையும் இருப்போம். அந்த பல பரிணாமம் கான்செப்ட்ல கொஞ்சமே கொஞ்சம் எடுத்து மேல சொன்ன போல எப்படியும் நம்ம உலகம் நமக்கானவர்களால் சூழப்பட்டிருக்கும்ன்னு சொல்லப்போறோம் அவளோ தான்  சிம்பிள்)

அடுத்த பக்கம்