ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் 8 (4)

கம்பனி போக இஷ்டமில்லை என்பது போல அவள் முகம் சுழிக்க விஜய், “ராது … ஒரே இடத்தில் இருந்தால் கண்ட எண்ணம் வரும். உன்னை நீ தான் மாற்றிக்கொள்ள வேண்டும். முயற்சி செய், நீ அங்க போனால் வேலை பார்க்கும்போது எல்லாம் மறக்கும்” குழந்தைக்கு அறிவுரை சொல்வது போல அவன் பேச

 

“இல்ல விஜய் … எனக்காக காய், கீரை என்று  ஒருமணி நேரத்துக்கு ஒரு தடவை  பாட்டி செய்து க்கொடுக்கிறாங்க. அதைச் சாப்பிடறேன், வேலைக்குப் போனால் இந்த டையட் தொடர முடியாது இல்லையா”

 

அடேங்கப்பா!! அப்படியே அவள் மருத்துவர் சொன்ன டயட் மட்டும் தான் சாப்பிடுகிறாளாம். விஜய் என்ன கவனிக்கவில்லை என்றா எண்ணுகிறாள் இவள்!!

 

“என்ன ருசியாக இருக்கு ஆத்தா நீங்கச் செய்ற வடை” என்று தொடர்ந்து செய்ய செய்ய

விஜய் திட்டி  நிறுத்தும் வரை சாப்பிட்டாள். அவன் திட்டினான் என்று கோபித்துக்கொண்டாள்.

 

“எவ்ளோ நல்லாயிருக்கு இந்த மிட்டாய்”

ரோஜா “யக்கா எனக்குக் கொஞ்சம் கொடு” என்று ரோஜா பிடுங்கும் வரை மொத்த பாக்கேட்டும் காலி செய்யப் போனாள்.

 

” ப்பா… இந்தப் புளிப்பிற்கு இந்தக் காரத்துக்கு ஈடே இல்லை. ” என்று ரோஜா வாங்கிவந்த புளியை ரசித்து ருசித்துச் சாப்பிட்டாள்.

Advertisements

ரோஜாவுக்குப் பெருமையாகி போனது. செய்முறை சொல்லத் தொடங்கினாள். “இது ஒன்னில்லக்கா…கொஞ்சமாக  புதுபுளி எடுத்து அதோட மிளகா, கருவேப்பிலை, பெருங்காயம் போட்டுக் கல்லு வைச்சு இடுச்சு… உப்பு காரம் போட்டுச் சாப்பிட்டோம் வை… ஆஹ்…அவ்வளவு நல்லாயிருக்கும் ”

உப்பு காரம் போட்ட நெல்லி, சீதாப்பழம், நவ்வாபழம், அன்னாசிபழம், வத்தல், கோனபுளியங்காய், ஜெல்லி மிட்டாய், பல்லி மிட்டாய், எலந்தவடை, எலந்த கொட்டைபொடி, ஊறுகாய், ஐஸ் கோலா என்று பள்ளி வாசலில் விற்கும் எல்லாவற்றையும் ரோஜா வாங்கி வருவாள். ராதிகா அதை ரசித்து ருசித்துச் சாப்பிடுவாள்.

காய், கீரை என்று அவள் உணவு முறை மாறினாலும் இவள் இந்த ஜங்க் தீனிகளை விட்டபாடில்லை. சில சமயம் விஜய் திட்டுவானோ என்கிற பயத்தில் சாப்பிடாமல் இருக்கிறாள். பல சமயம் அவள் புத்தி அவனை ஏமாற்றி சாப்பிட தூண்டுகிறது.

 

“இந்த வேலையெல்லாம் வேண்டாம் ராது. நீ ஆபிஸ் கிளம்பு. ஸ்கூல் வாசலில் கடை வைத்திருக்கும் பாட்டியம்மா கடை காலியாம்”

 

களுக்கென்று ரோஜா சிரிக்க ராதிகா இருவரையும் முறைத்தாள்.

தொடரும்…

‘ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்’ தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

Advertisements