ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் 8 (3)

ரோஜா முனகளாக “போப்பாட்டி உனக்கு என்னை அதட்டி பேசலனா தூக்கம் வராது”

ராதிகா முகம் கைக்கால் கழுவி உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள். தரையில் அமர்ந்துக்கொண்டு பாட்டி பரிமாற மூவரும் சாப்பிட்டு முடித்தனர்.

 

“பாட்டியும் ரோஜாவும் இனி நம்மோடு இருப்பாங்க. உனக்கு எது வேண்டுமென்றாலும் எங்க மூன்று பேர் கிட்டயும் கேட்கலாம்.இந்த வாயாடிக்கு இந்தப் பக்கம் இடமெல்லாம் பழக்கம்” அவன் சொல்ல

ரோஜா “யக்கா… இந்தப் பக்கம் நான் உன்னைக் கூட்டி போய்ச் சுத்தி காட்டுறேன். நிறைய வித்தியாசமான பறவை எல்லாம் இந்தப்பக்கம் வரும், அப்பறம் பெருமாள் சாமி கோயில் தோசை வாங்கி தாரேன் ஒரு ஜான் கிணறு மலைக்குக் கூட்டி போறேன் ஆனால் பதிலுக்கு நீ எனக்குக் கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும்”

 

அவள் சிரிக்க. “அண்ணன் சொல்லிச்சு நீ நல்லா கணக்கு போடுவே என்று”

 

பாட்டி “ஒரு ஒருவாரம் டையம் குடு ராசா, மொத்த வீடும் சுத்த படுத்தி அடுக்கி வைக்கிறேன்”

விஜய்,”ஆகட்டும். இப்போ ராதிகா அறை தயார் தானே… நாம எல்லாரும் தூங்க முடியும் தானே. அது போதும். ” என்றவன் கூடவே “நீங்களே செய்யாதீங்க… ஆள் வைச்சு செய்யுங்க” என்றான்.

 

ராதிகாவிற்கு அது அதிர்ச்சி தான். இனிமையான அதிர்ச்சி. எத்தனை சந்தேகம்!! எத்தனை குழப்பம்!! எத்தனை தயக்கம்!!

Advertisements

நடைமுறையில் ஏற்க தயங்கும் விசயத்தை அல்லவா அவள் பேசினாள். ஆனால் அது நடந்த விதம் அவளுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

ஒரு குடும்பமாகத் தரையில் அமர்ந்து க்கொண்டு சாப்பிட்ட விதம் நெகிழ்ச்சியாக இருந்தது. மனம் லேசானது.

 

அதன் பின் அவள் மனநிலையில் முன்னேற்றம் மட்டுமே. விடியும் வேளை எழுந்து ஒரு மணிநேரம் ரோஜா, விஜயுடன் சேர்ந்து வாக்கிங் அதன்பின் ரோஜா ஸ்கூல் போக விஜய் கடைக்கு போகப் பாட்டியுடன் சேர்ந்து வீட்டைச் சுத்தம் செய்து அழகு படுத்துவது அதன் பின் அவள் வேலைகளைச் செய்வது, ஓய்வெடுப்பது. ரோஜா பள்ளியிலிருந்து வந்ததும் அவளுடன் கதை பேசுவது.

 

ரோஜாவுக்குப் படிப்பை தவிர எல்லாவற்றிலும் கவனம் போகும் அதைத் திசை திருப்பிப் படிப்புக்கு கொண்டு வருவதே ராதிகாவுக்கு வேடிக்கையாக அதே சமயம் பெரிய வெள்ளையாகவும் இருக்கும்.

 

“யக்கா… இத்தனை நாள் இது தெரியாம ஃபெயில் ஆகிட்டேனே. அடுத்த வாட்டிப் பாரு பாஸ் ஆகுரேன். அப்பறம் பிள்ஸ்டூ படிக்கறேன். அப்பறம் பீ.காம் படிச்சு அண்ணன் கடையில கள்ளால உட்காறேன்” என்பாள்.

“அது என்ன கள்ளால உட்காருவது?”

“ஜாலியாக இருக்கலாம் இல்லையா?”

“அப்படியா… அப்போ உங்க அண்ணன் என்ன ஜாலியாகவா இருக்கார்”

“இல்லையா அப்போ!! ஐயோ!! எப்போ தான் அக்கா அப்போ நான் சந்தோசமா இருக்கிறது”

 

படி படி என்று சதா சர்வகாலமும் படிப்பு விட்டால் பாட்டியின் பத்திரம், பத்திரம் என்று தொணதொணப்பு. எங்க சந்தோசமா எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருக்க விடறாங்களா இவங்க!!

 

சாப்பிடும் பழக்கம் விடவில்லை. அம்மாபற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. புதிதாக விஜயை கஷ்டப்படுத்துகிறோம் என்கிற எண்ணம் கூடியிருக்கு. மனம் கோணல் வழியில் செல்ல….

 

அமைதியாக இருந்தவளை கவனித்தான் விஜய். “ராதிகா… மங்கிரோவ் போகலாம் தானே அடுத்த வாரம் முதல்”

“எனக்கு இங்கே இருக்க தான் பிடிச்சிருக்கு”

“ஏய்… உன் ஆசை கனவு எல்லாம் என்ன ஆகுறது”

“அது கொஞ்சம் காத்திருக்கட்டும்”

“அது வேலைக்கே ஆகாது. கிளம்பு நீ… இப்படியே இருந்தா துரு பிடிச்சு போயிடுவ…”

அடுத்த பக்கம்

Advertisements