ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் 8 (2)

” நான் என் இஷ்டம் போல ஒரு வீட்டில் இருக்கலாம் என்று சொல்லிட்டேன். நீ வேற ஏதாவது விஷயம் சொல்ல வந்தியோ!!”

இப்போ கேளு. எத்தனை வாட்டிப் பேச வந்தான்.

“இல்ல… இல்ல. ”

“விஜய்… நான் எம். பீ.யே ப்படிச்ச பீ ஸ்கூல்ல தனி தனி விடுதியில்லை. ஒரே கட்டடம். ஆண் பெண் சேர்ந்தும் இருக்கலாம், தனி தனியாகவும் இருக்கலாம். அதை பார்த்துப் பழகியதில் உன்கிட்ட அப்படி ஈஸியாகப் பேசிட்டேன். ”

“சரி….”

“ஆனால். இது தமிழ்நாடு. ஒரு உறவும் இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு வீட்டில் தங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத விசயம் தானே.”

“ஆமாம்”

“அதுவும் நீ வேற கோடி ரூபாய் காரில் பயணம் செய்யும் பிஸ்னஸ் மேன்”

“ஏய் கலாய்க்கிற பார்த்தியா!! ” என்று அவன் திரும்பவும் சிரிக்க

 

“பின்ன… நான் சீரியஸ் விஷயம் பேசுறேன்… நீ ஆமா, இல்ல, சரி என்று ரோபோ மாதிரி பேசுற”

“பேசு, கேட்கிறேன்”

“அதான் விஜய்… எனக்காக உன் பெயர் கெட கூடாது ” என்றவள் அவன் கார் போகும் வழி புதிதாக இருக்க,

“இது என்ன விஜய்… எங்க போறோம் நாம்!!”

“வீட்டுக்கு”

“அப்படியா… ஓ… இது தான் சர்ப்ரைஸா … ”

“ஆமாம்… ”

சென்னை மாநகரம் வெளியே வந்து திருநீர்மலை பக்கம் சென்றது கார்.

Advertisements

பல வண்ண விளக்குகள், விளம்பர பலகைகள், கார், தூசி, மாசு எல்லாம் மறைந்து, அங்கங்கே குளம் போலத் தண்ணீர், சின்ன சின்ன வீடுகள் தெரிய தொடங்கியது.

சென்னை மாநகரம் பக்கம் இப்படியொரு இடமா?? இந்த மாதிரி வயல், கோழி, ஆடு, மாடு சத்தம் கேட்கும் கிராமம் எங்கோ திருநெல்வேலி, தென்காசி, குமரி போல இடத்தில் இருக்கும் என்றல்லவா நினைத்தாள்.

சென்னை பக்கமா இப்படி இடமா? நகராட்சி குள் சில இடங்கள் கிராமம்போல இருந்தாலும் சாக்கடை நீர், கொசு, சுவர் முழுக்க போஸ்டர் என்றல்லவா இருக்கும். இந்த இடம் என்ன இத்தனை எழிலாக உள்ளது?

அங்கங்கே நீர் தேங்கியிருந்ததால் சில்லென்ற காற்றும் வீசியது.

 

சிறிது நேரத்தில் ஒரு அழகான வீட்டின் முன் காரை நிறுத்தினான். வாசல் பளீச் டியூப் லைட் புதிது என்று பறைசாற்றியது.

வீட்டுக்குள் நுழைந்ததும் பழைய பாணி கட்டிடம் என்று சொல்லாமல் சொன்னது. காரைத் தரை, மங்கிய வண்ணம் ஆயில் பைண்ட் சுவர், ஒவ்வொரு அறை வாசலிலும் வாசகால் அந்த வசகாலில் பைண்ட் கோலம், தலைதூக்கி விட்டத்தை பார்த்தால் மரசட்டம் அதற்கு மேல சிமெண்ட் கூரைசுவர் தெரிந்தது. பெரிய வீடு, பழைய வீடு.”வீடு” என்கிற உணர்வைச் சட்டென்று கொடுத்தது.

கிட்செனிலிருந்து ஒரு பாட்டி வெளிய வந்தார். “ராது… இவங்க தான் வள்ளி ஆத்தா. எனக்கு ஒரு வகையில் பாட்டி முறை.” அறிமுகம் செய்து வைத்தான்.

இன்னொரு சின்னப் பெண் வெளியே வர “இது இவங்க கொள்ளு பேத்தி!! இவங்க தான் வளர்கிறாங்க. இங்க, பக்கத்துல ஸ்கூலில் பத்தாவது படிக்கறா. ”

 

அவள் அவர்களை பார்த்துச் சிரிக்கவும். “அக்கா… நீ என்ன பண்ணற?” சின்னப் பெண் துடுக்காகக் கேட்க

“நான்…. நான் ஒரு கம்பனியில் வேலை பார்கிறேன்.” தட்டு தடுமாறி பேசினாள்.

பாட்டி சின்னப் பெண்ணை “ரோஜா…!! சும்மா இரு… நீ போ பாப்ப…முகம் கைகால் கழுவிட்டு வா. சாப்பிடலாம்”

அடுத்த பக்கம்

Advertisements