ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் 8

மருத்துவமனை விட்டு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்தான். அவனையும் மீறி அவன் இதழ்களில் சிரிப்பு ஒட்டிக்கொண்டிருந்தது. மனதில் மகிழ்ச்சி.

செய்ய நிறைய இருக்கு. சற்று கண் மூடி அமர்ந்து அமைதி ஆனான்.

அவன் பேச வந்தது என்ன !! அது முடிந்த விதம் தான் என்ன!!

சேர்ந்து ஒரு கூறைக்குள் நண்பர்களாக வாழ்வது எளிதான காரியமல்ல!! அதுவும் அவன் மனதில் காதல் இருக்கு, அதை மறைக்க இயலாது. அவள் பிள்ளை மனம் கொண்டு, பார்க்கும் விஷயமெல்லாம் அதிசயமாகப் பார்க்கிறாள்.

அவர்கள் அடையார் வீடு நான்கு தலைமுறை கண்ட வீடு. அதற்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கு. அதைக் கெடுக்க அவனுக்கு இஷ்டமில்லை. கெடுப்பது என்பதை விட அதன் மரியாதையை போற்ற வேண்டும். இதுவே மூத்த தலைமுறை இருந்திருந்தால் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் கட்டமைப்பைத் தானே தொடர்ந்திருக்கும்.

என்ன தான் மரியாதை என்று நினைத்தாலும் அந்த வீட்டில் அவனால் ராதிகாவோடு வெறும் நண்பனாக இருக்க முடியாது. ராதிகாவை சந்தித்த நாளிலிருந்து அவன் கற்பனைகளில் அவள் அந்த வீட்டில் எல்லா உரிமையும் இருக்கும் அவன் இணையென்றே இருக்கிறாள்.

அவள் வீடு அவன் மனநிலைக்கு சரி வராது. ஒரு நேரம் நல்லா இருக்கேன் என்பவள் அடுத்த நிமிடம் அழுது தீர்க்கிறாள். அதுவும் அது அடுக்கு மாடி குடியிருப்பு, யாரையும் யாரும் கவனிக்காமல் போனாலும் கல்யாணம் ஆகாமல் இருவரும் சேர்ந்திருப்பதை பார்த்துச் சும்மாவா போவார்கள் ??

அலைபேசி எடுத்து அடுத்தடுத்து அழைத்துப் பேசினான். ரம்யாவின் ஆலோசனை வேண்டி அவளிடம் சென்றான்.

“நல்ல தூக்கம் வேண்டும் அவளுக்கு”

“சரி”

“உணவுக் கட்டுப்பாடு வேண்டும்”

“எப்படி?”

“இனிப்பு அதிகம் கூடாது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எளிதாக ஜீரணம் ஆகும் உணவு சாப்பிட வேண்டும்”

Advertisements

“நிறைய உணர்ச்சி வசப்படுகிறாள்!! ஒரு நிமிடம் நன்றாக இருக்கிறாள் மருநிமிடம் கோபம், அழுகை!!” அவன் கவனித்ததை சொன்னான்.

“அது தான் பிரச்சனை. மனசை கட்டுப்படுத்த பழகனும்”

“என்ன செய்யலாம்?”

“முதல உணவுப் பழக்கம், அடிப்படை உடல் பயிற்சி பழகலாம். அதன் பின் ஒவ்வொன்றாகச் செய்யலாம். ”

அவனுக்கு அது சரி என்று தோன்றியது. வரேன் என்று அவன் கிளம்ப “முக்கியமான விசயம். அவளை பேச  விடுங்க மனதில் இருப்பது எல்லாம் வெளியே வரட்டும். ”

அது தானாகவே நடக்குதே என்றெண்ணிக்கொண்டான்.

ரம்யாவுக்கு தெரிந்த ராதிகா யாரையும் அவள் பக்கம் விடமாட்டாள். அவளுக்குள் எப்போதும் ஒரு பாதுகாப்பின்மை இருக்கும். அவள் நம்பிக்கை வைத்து ஒருவரிடம் பழகுவது அவ்வளவு சுலபமானது அல்ல. விஜயுடன் ஒரு வீட்டில் வசிக்கப் போகிறாள் என்றால் அவன்மீது அவளுக்கு நம்பிக்கை இருக்கு. போதுமே!! நல்லது சீக்கிரம் நடக்கட்டும் என்றெண்ணி அடுத்த வேலையைத் தொடங்கினாள்.

ஏழு மணிக்கு வந்து அழைத்துப் போகிறேன் என்றவனுக்காக மருத்துவமனை வரவேற்பில் அவள் அறையைக் காலி செய்துக்கொண்டு வந்து அமர்ந்தாள்.

எல்லாம் தயார் என்றானதும் மருத்துவமனை சென்றான் விஜய்.

வரவேற்பில் அவளைப் பார்த்ததும், “போலாம் வா. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு!!” சொல்லிச் சிரித்தான்.

அந்தச் சிரிப்பு அத்தனை இதமாக இருந்தது. அவளும் மெலிதாக அவனை பார்த்துச் சிரித்தாள்.

பயணம் தொடங்கியது.

“விஜய்!! எனக்கொரு சந்தேகம்”

“ம். கேள் தெரிந்தால் சொல்றேன்”

அடுத்த பக்கம்

Advertisements