நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 6

மாலை ஆறு மணியளவில் தனது வீட்டிலிருக்கும் அலுவலக அறையில் மறுநாளைய படப்பிடிப்பிற்கு பேசவேண்டிய வசனங்களை தீவிரமாய் பார்த்துப் படித்துக்கொண்டிருந்தாள்! எப்படி, என்னமாதிரி உச்சரிப்பில், பாவனையில் பேசவேண்டுமென்று வசனங்களுக்கு மேலேயே பென்சிலால் குறித்து வைப்பது அவளது வழக்கம்! அதைத்தான் இப்பொழுது செய்துக்கொண்டிருந்தாள்!

இதுபோன்ற நேரத்தில் அவளை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது! அவளை சந்திக்க யாருக்கும் அனுமதி கிடையாது! தாய் தந்தைக்கு கூட இல்லை! வேலையில் இடையூறு ஏற்படுவதை ஷ்ரவந்தி என்றுமே விரும்பியதில்லை!

‘ஆனால் இன்று நீ நினைப்பதெல்லாம் நடக்காது! என்று முரசு கொட்டி அறிவிக்காத குறையாய், சரியாய் அந்நேரம் அவளின் வேலையை கெடுக்கவென்றே அறைக்கதவை தாடலென திறந்தபடி வந்தனர்!

“ச்சே!” என்று எரிச்சலடைந்தவள், யாரென்று நிமிர்ந்து பார்க்க, அங்கே ஆத்திரத்துடன் வேகமாய் வந்து நின்றவள் சஞ்சு! ஷ்ரவந்தியோ எதுவும் பேசாமல் அவளை பார்க்க, சஞ்சுவோ அதையெல்லாம் சுத்தமாய் கண்டுக்கொள்ளாமல் வந்த வேகத்திலேயே தோளில் மாட்டியிருந்த பெரிய புகர் வண்ண தோல்பையை சோபாவில் ஆத்திரமாய் வீசினாள்!

“என்னாச்சு உனக்கு?” ஷ்ரவந்தி கையிலிருந்த பென்சிலை கொண்டே தோழியை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டாள்!

“இன்னும் என்னாகனும்? மொத்தமா என்னோட வேலையை எவனுக்காவது தூக்கி கொடுக்கணும்!” இடுப்பில் கைவைத்து ஷ்ரவந்தியை ஆத்திரத்துடன் முறைத்தாள் சஞ்சு!

“புரியுற மாதிரி.. ஒழுங்கா.. தெளிவா.. சொல்றதா இருந்தா சொல்லு! இல்லாட்டி வெளில போ!” என்று நிறுத்தி நிதானமாக சொன்ன ஷ்ரவந்தி, கையிலிருந்த பென்சிலாலேயே கதவை சுட்டிக்காட்டினாள்!

“அந்த பைத்தியக்காரன் செஞ்சதுக்கு நான் இங்கிருந்து மட்டுமில்ல, இந்த சினிஃபீல்டை விட்டே ஓடனும்!” சஞ்சுவிற்கு மனம் வெதும்பிதான் போனது!

“யாரு என்ன செஞ்சா?” கூர்மையாக தோழியை பார்த்தபடி ஷ்ரவந்தி கேள்வியெழுப்ப, சஞ்சுவோ, “சர்வா தான்! என்னோட மொத்த கரியரையும் ஒழிச்சு கட்டப்போறான்!” என்று குற்றம் சாட்டினாள்!

“உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா? அப்படியே இருந்தாலும் அவனைப்பத்தின விஷயம் எதையும் கேட்க எனக்கு இஷ்டமில்லை! பேசாம போயிரு!”

சற்றும் சலனமேயில்லாமல் பேசும் ஷ்ரவந்தியை பார்த்து, “ஹோ! அப்படியா? அவனைப்பத்தி பேசவே இஷ்டமில்லாதவங்க தான் அவன்கூட அடுத்த படத்துல ஜோடியா நடிக்கப்போறிங்களா?” நக்கலாக கேட்டாள் சஞ்சு!

கையிலிருந்த பென்சிலை நொட்டென்று மேஜையில் வைத்த ஷ்ரவந்தி, “ஏதாவது உளறாத! நானும் அவனும் ஒண்ணா நடிக்கமாட்டோம்ன்னு தெரியாதா உனக்கு? தெரியாதவ மாதிரியே வந்து கேள்வி கேட்கிற?” என்று தானுமே நக்கலுடன் தான் கேட்டாள்!

“நீதான் எதுவும் தெரியாதமாதிரி கேட்டுக்கிட்டு இருக்க? இல்லை நிஜமாவே தெரியாதா?” என்று கேட்ட சஞ்சுவின் கேள்வியில் குழம்பி போனவள், என்ன நடந்தது என்று கேட்க ஆரம்பித்தாள்!

“இன்னைக்கு பார்த்துட்டு போனப்பிறகு சர்வா வீட்டுக்கு போனேன்! இனி நடிக்கப்போற எந்தவொரு படத்துக்கும் என்னை அவனோட காஸ்ட்யூம் டிசைனரா இருக்க ஒத்துக்கமாட்டானாம்! சரி போடான்னு விட்டா.. அடுத்த வாரம் நடக்கப்போற ராம்ப்க்கும் வரமுடியாதுன்னு சொல்றான்! என் முன்னாடியே மும்பைல இருக்க இன்னொரு கம்பெனி டிசைனருக்கு கால் பண்ணி பேசுறான்!” என்று மனம் குமுறிய சஞ்சு, “அசிங்கப்பட்டு வெளில வந்தப்பத்தான் டைரக்டர் மனோஜை பார்த்தேன்! புதுப்படத்தை பத்தி நல்ல விபரமா சொன்னார்!” என்று எகத்தாளமாக சொன்னாள்!

“என்ன சொன்னார்?”

“ஷ்ரவந்திக்கு காஸ்ட்யூம் டிசைன்ஸ் ஸ்டார்ட் பண்ணுங்க! நல்ல சிம்பிளா அதேசமயம் இப்போ ட்ரென்ட்க்கு ஏத்தமாதிரி காட்டன் சேரிஸ் ரெடி பண்ணுங்க! சர்வாவுக்கும் பண்ணிருங்க! ரெண்டு பேரும் ஹீரோ ஹீரோயின்னு சொன்னார்! இங்கே வந்து பார்த்தா உனக்கே இன்னமும் விஷயம் தெரியலை போல?” தனது கோபத்தையெல்லாம் கொட்டியபிறகு தோழியை பதிலுக்கு விசாரிக்க ஆரம்பித்தாள் சஞ்சு!

ஷ்ரவந்திக்கோ தான் சரியாகத்தான் கேட்டோமா என்று தோன்றிவிட்டது! தோழியின் கேள்விக்கு ஷ்ரவந்தி பதில் சொல்வதற்குள், அவளின் அழைப்பேசி அடிக்க ஆரம்பித்தது!

யாரென்று பார்த்தால்.. இயக்குனர் மனோஜ்!

“யாரு? சர்வா தானே! எனக்கு தெரியும்! என்னையும் உன்னையும் சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறான்!” என்று தனக்குத்தானே பேசி டென்ஷனானாள் சஞ்சு!

“கூப்பிட்டு இருக்கிறது டைரக்டர் மனோஜ்!!”

“பேசு பேசு! உனக்கு பெரிய ஆப்பை இவர் மூலமாதான வைச்சுருக்கான் சர்வா!” என்று அப்பொழுதும் சர்வாவை திட்டித்தீர்த்தாள் சஞ்சு!

“நீ கொஞ்சம் அமைதியா தான் உட்காரேன்!” என்று சலித்த ஷ்ரவந்தி அவரின் அழைப்பையேற்று பேச ஆரம்பித்தாள்!

“சொல்லுங்க மனோஜ் சார்!”

“வணக்கம்மா! என்னோட ஜூனியர் ரமணன்னு ஒருத்தர் கொஞ்ச நாள் முன்னாடி உன்கிட்ட கதை சொன்னார்ல? அந்தப்படம் இப்போ கண்ஃபார்ம் ஆகிருச்சு! ஹீரோவும் முடிவாகிருச்சு! நம்ம சர்வா சார்தான் ஹீரோ! அடுத்தவாரம் வியாழன் பூஜை போடப்போறோம்! வந்துரும்மா!” என்று விபரம் தெரிவித்தார்! ஷ்ரவந்திக்கோ பதில் சொல்லவே முடியாத நிலை!

“என்னம்மா?” மனோஜோ அவளிடமிருந்து பதில் வேண்டி காத்திருக்க, கண்கள் மூடி தன்னை சமன்செய்தவள், “சார்! நானும் சர்வாவும் ஒண்ணா நடிக்கமாட்டோம்ன்னு உங்களுக்கு தெரியாதா? நாங்க ரெண்டு பேரும் எப்படி?” என்று புரியாமல் கேள்வி எழுப்பினாள்!

“நல்ல கதைகள்ல நடிக்கிறோம்ன்னு வரப்ப, இதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகிரும்! என்னைக்கோ நடந்த ஒரு சின்ன விளையாட்டுத்தனமான விஷயத்தை எல்லாம் இப்போவரைக்கும் மனசில் வைச்சிட்டு இருக்கக்கூடாதும்மா! சர்வா அதை உணர்ந்திட்டார்! அதான் உன்னோட நடிக்க முடிவும் பண்ணிட்டார்! அதில் அவருக்கு சந்தோஷம் தான்! வேணும்ன்னா நீயே கேளு!” என்று ஒரு அறிவுரையை வழங்கிவிட்டு அப்படியே ஒரு ஆட்டம் பாமையும் தூக்கி போட்டார்!

‘என்ன சர்வா இவர்கூட தான் இருக்கானா?’ அதிர்ந்து தான் போனாள் ஷ்ரவந்தி!

சஞ்சுவோ தோழியின் முகபாவனையை உள்வாங்கியவளாய், ஷ்ரவந்தியின் போனை பறித்து அதை ஸ்பீக்கரில் போட்டாள்!

“வாழ்த்துகள் நடிப்புலகின் ஜீவநாடியே!” என்று படு நக்கலுடன் வாழ்த்தினான் சர்வா!

‘நேர்ல இருந்த உன் நாடியை உடைச்சிருப்பேன்!’ மனதிற்குள் விறைப்புடன் சொல்லிக்கொண்டவள், எதுவும் பேசாமலேயே இருந்தாள்!

“என்ன பதிலையே காணோம்?” ஆழம் பார்த்தான் சர்வா!

“நீங்க ஏதாவது கேள்வி கேட்டிங்களா?” அலட்சியம் செய்தாள் ஷ்ரவந்தி!

“ஒருத்தவங்க வாழ்த்து சொன்னா.. அதுக்கு நன்றி சொல்லி பழகனும்! அதான் நல்ல பண்பு!” என்று மறைமுகமாய் அவளுக்கு குட்டு வைத்தான்! அதில் அவ்வளவுதான் ‘இனியும் முடியாதென்று கண்மண் தெரியாதளவு ஆத்திரமடைந்தாள் ஷ்ரவந்தி!

“மண்ணாங்கட்டி! என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? நீ நடிக்கிற படத்தில் நான் நடிப்பேன்னு நினைக்கிறயா? எனக்கும் ஸ்டார்டம், ரெபுட்டேஷன் எல்லாம் இருக்கு! ப்ரெஸ் மீட் வைச்சு அத்தனை பேர் முன்னாடியும் ‘என்கூட நடிக்கமாட்டேன்னு’ அவ்வளவு உறுதியா சொன்னவன் கூட நடிக்க எனக்கென்ன கிறுக்கா? நான் உன்கூட நடிக்கமாட்டேன்!” என்று எரிச்சலும், கோபமும் கொண்டு கத்திவிட்டாள் ஷ்ரவந்தி!

“அப்போ நான் நடிகர் சங்கத்துல, இயக்குனர் சங்கத்துல, ஏன்.. தயாரிப்பாளர் சங்கத்துல கூட புகார் கொடுப்பேன்! அங்கே உங்க அப்பா தானே தலைவர்? அப்பறம் உன் பேர் கெடும்! உங்க அப்பா பேர் தயாரிப்பாளர் சங்கத்துல கெடும்! ஃபீல்ட்டுக்கு புதுசா வந்துருக்க ஒரு ஆளை வளரவிடாம செய்றன்னு சொல்வேன்!” என்று அவளின் பேச்சுக்கெல்லாம் தடை போட்டவன், அவளின் செயல்களும் ‘தடை போடுவேன்’ என்று சொல்லாமல் சொன்னவன் அவளிடம் எந்தவொரு பதிலையும் எதிர்பார்க்காமலேயே வைத்துவிட்டான்!

ஷ்ரவந்தியோ அவன் பேச்சினை கேட்டு நம்பமுடியாமல் இருந்தாள்! அவளுக்கே அப்படியென்றால் சஞ்சுவிடம் கேட்கவே தேவையிருக்கவில்லை!

“இவனுக்கு என்னமோ ஆகிருச்சு? என்ன நினைச்சிட்டு இப்படி பண்ணுறான்?” சஞ்சுவிற்கு ஆத்திரமாய் வந்தது!

அடுத்த பக்கம்