நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 4 (4)

“நீ தூங்கு! நாளைக்கு எனக்கு ஷூட்டிங் இருக்கு! சென்னைக்கு பறக்கணும்! நைட் பதினொரு மணிக்கு ஃபிளைட்!” ஹர்திகா விபரம் தெரிவித்தாள்!

“அப்போ என்னை அபார்ட்மென்ட்ல இறக்கிவிட்டுட்டு நீ ஏர்போர்ட் போயிரு!” என்று கூறிய சஞ்சு அப்பொழுது தான் நினைவு வந்தவள் போல அபியை நோக்கி திரும்பினாள்!

“தாங்க் யூ அபி! முதல் நாளே நல்லபடியா வேலைப்பார்த்தன்னு சிஈஒ கிட்டயே ரிப்போர்ட் போயிருச்சு! ஆல் தி பெஸ்ட்! நாளைக்கு நீ வா! வேலை எல்லாம் சேர்ந்து பார்க்கலாம்! இன்னைக்கு என்ன நடக்குதுன்னே சொல்லாம உன்னை உள்ளே இழுத்து வேற விட்டுட்டேன்! நாளைக்கு தான் எல்லா ப்ரோசீஜரும் பார்க்கணும்” என்று சொல்ல, ஹர்திகாவோ, “அப்போ நீ வர முடியாத பட்சத்தில் எனக்கு அபியை அனுப்பி விட்டுரு! அவங்களுக்கு என்னோட ஒத்துப்போகுது!” என்று தனது கோரிக்கையை முன்வைக்க அபியோ வழக்கம் போல திருதிருவென முழித்தாள்.

“மேம்.. அது.. அது.. நான் வேலைக்கு வரலை! அதை சொல்லத்தான் இங்கே வந்தேன்!” என்று திக்கலும் திணறலுமாய் அவள் சொல்ல, மற்ற இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்தனர்!

தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி