நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 2 (3)

“முதல்ல ஹர்திகா மேடம் தான் கமிட் ஆகுற மாதிரி இருந்தாங்க! ஆனா வருஷம் ஓடிப்போச்சு! மத்த காஸ்ட் கிடைக்கலை.. ஓரளவு காஸ்ட் கிடைச்ச பிறகு அவங்க இங்கே இல்லை.. அப்பறம் ஷ்ரவந்தி மேடம் தான் எங்களோட சாய்ஸாக இருந்தாங்க.. அவங்க ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிக்கவும் ஒத்துக்கிட்டாங்க! முதல் காட்சி அவங்களோடது தான்!” என்று மகிழ்வாய் பதில் தந்தான் ரமணன்!

அதுவரை இருந்த புன்னகை மறைந்து தீவிரம் குடிக்கொண்டது!

“ஹோ! ஹீரோயின் பேஸ் ஸ்டோரி வேறல?” அதே தீவிரத்துடன் வார்த்தைகளும் வெளிவந்தது!

அதில் ரமணனோ, “சார்! உங்களுக்கு அது பிடிக்கலையா? அவங்களுக்கு இன்னமும் யார் ஹீரோன்னு வேற தெரியாது!” என்று பயந்து போய் கூறினான்.

“ச்சே! ச்சே! இல்லை ரமணா.. நாங்க ரெண்டு பேரும் மூணு வருஷம் கழிச்சு மறுபடியும் ஒண்ணா நடிக்க போறோம்! அந்த நினைப்பு தான்! வேற ஒண்ணுமில்லை! நான் தான் நடிக்கிறேன்னு சொல்லவேண்டாம்! சஸ்பென்சா இருக்கட்டும்!” என்று ஆர்வமாய்.. சிநேகமாய் புன்னகைத்தான் சர்வா.

“சரி சார்!” என்றபடி மகிழ்வுடன் உண்ணவாரம்பித்தான் ரமணன்! சர்வாவோ மௌனமாய் சாப்பிட்டுக்கொண்டே யோசித்தான்!

‘தன்னோட உயிர்த்தோழி ஹர்திகான்னு தீவிர வசனம் பேசினா.. இப்போ அவ கமிட்டான படத்தில் இவ நடிக்கப்போறா? இப்படி தான் வினோத் படத்திலும் நடிச்சா? என்ன நினைச்சிட்டு இருக்கா? கண்டிப்பா சும்மா விடமாட்டேன்!’ என்று திண்மையடைந்தது அவனின் மனது!

மேலும், ‘எங்கே இருக்கிறாயடி நீ? என்னதான் பிரச்சனை உனக்கு?’’ என்ற கேள்விகளுக்கு விடைவேண்டி முதல் அடி எடுத்து வைக்க ஆயத்தமாக, ஷ்ரவந்தியோ அவனுக்கு முன்பே பல அடிகளை எடுத்து வைத்திருந்தாள்!

தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி