நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 2 (2)

அதுவரை இருந்த புன்னகை மொத்தமாய் உறைந்து மறைந்துவிட, வேகவேகமாய் தனக்காய் காத்திருந்த காரில் ஏறி “ஃபார்ம் ஹவுஸுக்கு போங்க!” என்று ஓட்டுனருக்கு கட்டளையிட, வண்டியை கிளப்பினார் அவர்.

செல்லும் வழியெல்லாம் தனது போனிலிருந்து ஒரு எண்ணிற்கு அழைப்பு விடுக்க, அந்தப்பக்கம் இருந்தோ, ‘ஸ்விட்ச்ட் ஆஃப்’ என்று மட்டுமே வர, வெறுத்து தான் போனான்!

‘ச்சே!’ என்றபடி போனை அருகில் வீசியவன், அப்படியே பின்னே நன்றாய் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்!

இருள் போர்வையை மீறி அவளே கண்களுக்குள் வந்து நின்றாள்!

வீடு வந்து சேர்ந்தவன் ‘அடுத்து என்ன செய்யலாம்’ என்ற சிந்தனையிலேயே உழன்றான். அதன்பின் எப்பொழுது தூங்கினானோ அவனே அறியான்!


இப்பொழுது தனது ஓட்டத்தை முடித்து வீட்டிற்குள் சென்றவன், சோபாவில் ஆசுவாசமாய் அமர, அவனது போனையும், ட்ரேயில் கிரீன் டீயையும் கொண்டுவந்து வைத்தார் அங்கே வேலை செய்பவர்.

அவருக்கு நன்றி சொன்னவன், தனது போனை வாங்கி அதில் நாட்காட்டியை ஆராய்ந்தவன், அன்று படப்பிடிப்பு எதுவும் இல்லை என்று உணர்ந்து கொண்டான்.

தேநீரை எடுத்து பருகியவன், “என்னைப்பார்க்க ரமணன்னு ஒருத்தர் வருவார்! உட்கார வைங்க.. நான் போய் குளிச்சிட்டு ரெடியாகிட்டு வரேன்!” என்று வேலை செய்பவரிடம் கூறிவிட்டு தனது அறை நோக்கி சென்றான்.

அரைமணி நேரத்தில் தனது கடமைகளை முடித்த சர்வா, ரமணன் இன்னும் வராத காரணத்தால் தனது ப்ரேத்யேக ஹோம் தியேட்டரில் ‘ய ப்ரைவேட் வார்’ என்னும் படத்தை பார்த்து கொண்டிருந்தான். உலகளாவிய படங்கள் அனைத்தும் பார்க்க பிடிக்கும் அவனுக்கு! படப்பிடிப்பு இல்லாத நாட்களில் படம் பார்ப்பதே சர்வாவின் பொழுதுபோக்கு! படம் பார்க்க விருப்பமில்லை என்றால் தூக்கம்! நாள் கணக்கில் தூங்குவான்! அதுவே அவனது சிறந்த நண்பன் என்று வர்ணிப்பான்!

படத்தில் தீவிரமாய் கவனத்தை பதித்து இருந்த வேளை, ரமணன் வந்திருப்பதை தெரிவித்தார் பணியாள் ஒருவர். மணியை பார்க்க, ஒன்பதரை என்று காட்டியது கடிகாரம்!

படிகளில் இறங்கி வரும்போதே ரமணனை பார்த்து புன்னகை புரிந்த சர்வா, “வாங்க ரமணன்! இடம் கண்டுப்பிடிக்க ரொம்ப கஷ்டமா இருந்ததா?” என்று விசாரித்தான்!

“இல்லை சார்! அப்படியெல்லாம் எதுவும் இல்லை!” என்று சோபாவில் இருந்து எழுந்தபடி பணிவுடன் மறுத்தான் ரமணன்.

“உட்காருங்க ரமணன்!” என்றபடி அவனின் தோளை அழுத்தி அமரவைத்த சர்வா, “என்ன சாப்பிடுறிங்க? டீ.. காஃபி..” என்று விருந்தோம்பலில் இறங்கினான்!

“காஃபி போதும் சார்!” என்று ரமணன் கூற, சர்வா காட்டிய கண்ஜாடையில் காஃபி எடுத்துவர சமையல் அறை நோக்கி சென்றார் பணியாள்!

ரமணனுக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்த சர்வா, “ஸ்க்ரிப்ட் படிச்சேன் ரமணன்! எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்தது! டைரக்டர் மனோஜ் வேற உங்களை ரொம்ப ரெக்கமன்ட் செஞ்சாரு!” என்று சொல்லியதில் உச்சி குளிர்ந்து தான் போனது ரமணனுக்கு!

“உங்களுக்கு பிடிச்சு இருந்ததில் ரொம்ப சந்தோஷம் சார்!” என்று சொல்வதற்குள் அவனுக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது!

“என்ன ரமணா? என்னாச்சு? எதுக்கு கலங்குறிங்க?”

“இல்லை சார்! ஃபீல்ட்க்கு வந்து மூணு வருஷம் ஆச்சு சார்! எல்லாரும் நான் எழுதின எந்த கதைக்குமே சரியா ரெஸ்பான்சே கொடுக்கலை.. கதை கேட்டாலும் ஸ்க்ரிப்ட்ல சேன்ஜ் செஞ்சா நடிக்கிறோம்ன்னு டிமாண்ட் செஞ்சாங்க! மனோஜ் சார் மட்டும் தான் ஸ்க்ரிப்ட்ல எந்த கதைக்கும் எந்த சேஞ்சும் சொல்லலை! அவர் தான் உங்ககிட்ட பேச சொல்லி நேத்து சொன்னார்” என்று நெகிழ்வுடன் சொன்னான் ரமணன்!

அவனின் கண்களோ சாதிக்க வேண்டும் என்ற தீவிரத்தில் இருந்தது! அது சர்வாவின் மனதில் இன்னமும் ஆழமாய் பதிந்தது!

‘அவளின் கண்களிலும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற தீவிரம் தென்பட்டது தானே! வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தவள், பாதியிலேயே நின்றுவிட்டு எங்கே சென்றாள்?’

உள்ளுக்குள் ஓடிய சிந்தனை அவனை மௌனமாக்க, லேசாய் கண்களை மூடி, தலையை உலுக்கி என்று தன்னை சமன் செய்து கொண்டவன்,

“கதையை நரேட் பண்ணுங்க!” என்று ரமணனுக்கு பணித்தான்.

“முழுக்க முழுக்க ஒரு ஃபீல் குட் ஸ்டோரி சார்! கதை ஆனந்தபூர்ல தொடங்குது.. அங்கே தான் ஹீரோ இருக்கான்.. அவன் அங்கே பெரிய ஆள்.. ஒரு நல்ல தலைவன் மாதிரி.. ஆனா அடிதடியே விரும்பாத ஆள் அவன்.. அவனோட அம்மா.. உடல்நிலை சரியில்லாதவங்க.. அப்போ அங்கே இருக்க மருத்தவமனையில் வேலைப்பார்க்க வர்றாங்க ஹீரோயின் தன்னோட டிவின்ஸ் பசங்களோட..” என்று கதையை பற்றி விவரிக்க ஆரம்பித்தான் ரமணா.

ரமணனின் கதையில் மெய்மறந்து கவனித்து கொண்டிருந்தான் சர்வா. நெகிழ்ச்சியான காட்சி விவரிக்கப்படுகையில் கண்ணோரம் கண்ணீர், காமெடி காட்சியில் அடக்கமாட்ட சிரிப்பு, காதல் காட்சி விவரிக்க படுகையில் மெல்லிய புன்னகை என்று அந்த கதையோடு பயணித்தான். இடையிடையே காஃபி, ஜூஸ் என்று பரிமாறப்பட்டது!

சுமார் மூன்று மணிநேர அளவில் சொல்லப்பட்ட அந்த கதையில் அப்படியே தன்னை ஒப்புவித்து இருந்தான் சர்வா.

“..இறுதில ரெண்டு பேரும் ஒன்னு சேருறாங்க.. அந்த குழந்தைங்க ஹீரோவ தங்களோட அப்பாவா கொண்டாடுறாங்க!” என்று சொல்லி முடிக்கையில் கைகளை தட்டி பாராட்டியிருந்தான் சர்வா!

“மார்வெலஸ் ஸ்டோரி.. மனசுக்கு நிறைவா இருக்கு.. அதுவும் ஹீரோவும் ஹீரோயினும் மீட் பண்ணுற ஒவ்வொரு பின்னணியிலும் பெய்யுற மழையை ஹீரோ – ஹீரோயின் மூடுக்கு ஏத்தமாதிரி சாரல் மழை, அடைமழை, ஆழங்கட்டி மழைன்னு வேறுபடுத்தி காட்டுறது இன்னமும் நல்லாயிருக்கு! ஜில்லுன்னு ஒரு காதல் கதை!” என்று சிலாகித்து பாராட்ட, தனது நன்றியை பகிர்ந்தான் ரமணன்.

“கண்டிப்பா இந்த படத்தை நான் தான் பண்ணுவேன்! இப்போ ஒரு படம் போயிட்டு இருக்கு! அது முடிய எப்படியும் ரெண்டு மாசம் ஆகும்! அதுக்குள்ளயும் நீங்க காஸ்ட் அண்ட் க்ரூ ரெடி பண்ணி வைச்சுக்கோங்க!” என்று அப்பொழுதே அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டான் சர்வா.

“க்ரூ ரெடி சார்! ப்ரொடக்ஷன் மனோஜ் சாரோடது! ஹீரோயின் தான் சார் இந்த படத்துக்கு முதல்ல கமிட் ஆனாங்க! காரக்டர் ஆர்டிஸ்ட்ஸ் பார்க்கணும்! அப்பறம் அந்த ட்வின்ஸ் பசங்களுக்கு மட்டும் ஆடிஷன் வைச்சு செலெக்ட் செய்யணும்! அவங்க மட்டும் கிடைச்சிட்டா ஹீரோயின் சோலோ போர்ஷனை ஆரம்பிச்சிருவேன்! பூஜை உங்களுக்கு வசதிப்படுற நாள்ல போட்டுறலாம்! மனோஜ் சார் தான் முதல் கிளாப் பண்ணுறார்” என்று படபடவென்று தகவல் தந்தான் ரமணன்!

‘நல்ல தொடக்கம் நல்ல முடிவை தரும்’ என்ற வார்த்தைகள் தனது வாழ்க்கையில் பலித்ததில் சந்தோஷம் கொண்டாலும், இடையில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்று வேண்டியது ரமணனின் மனது!

“பயப்படாதிங்க ரமணா! எல்லாம் நல்லபடியாவே நடக்கும்! கண்டிப்பா இந்தப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் தான்! அடுத்த வாரம் ஒரு நல்ல நாள் பார்த்து பூஜை போட ப்ளான் செய்ங்க!” என்று தைரியம் தந்தான் சர்வா.

“சரி சார்.. அடுத்த வியாழக்கிழமை நல்ல நாள் தான் சார்! அன்னைக்கே டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணிருறோம்!” என்றபடி எழுந்த ரமணன் விடைப்பெற,

“என்ன கிளம்புறிங்க? சாப்பிட்டு போலாம்! மணி இப்பவே ஒண்ணு ஆகிருச்சு! வாங்க!” என்று ரமணன் மறுக்க மறுக்க தன்னோடு சாப்பிட வைத்தான் சர்வா!

இந்தப்பழக்கம் அவனது தாய் தந்தையிடம் இருந்து வந்தது! வீட்டிற்கு யார் வந்தாலும்.. ஏன் பிடிக்காதவர்களே வந்தாலும் சாப்பிட வைத்துவிட்டு தான் பேசுவர்! அந்தப்பழக்கம் சர்வாவிடமும் உண்டு! வேலைக்காரர் பரிமாற, இருவரும் உணவுண்ண ஆரம்பித்தனர்.

“ஆமா.. ஹீரோயின் யாரு? இப்படி ஒரு போல்ட் அண்ட் லவ்லி ரோல்ல பண்ணப்போறவங்க?” என்று ஆர்வமாய் வேறு கேள்வி எழுப்பினான் சர்வா!

“நம்ம ஷ்ரவந்தி மேடம் தான் சார்! கதை கேட்டவுடனே ஒகே செஞ்சுட்டாங்க!”

புரையேறியது சர்வாவிற்கு!

அடுத்த பக்கம்