நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 11 (2)

“ஹ்ம்ம்.. சரி.. ஹர்திகாவை உடனே வர சொல்லுங்க!” என்று அவருக்கு பணித்தவன், அவர் வெளியேறியதும், அபியின் பக்கம் திரும்பினான்! அவளோ சட்டென்று பார்வையை வேறுபக்கம் திருப்பினாள்! சர்வா அதை கவனித்தாலும், எதுவும் சொல்லாமல் அபியின் அருகில் அமர்ந்து அப்படியே பின்னே சாய்ந்துக்கொண்டான்!

“உன்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கவே கூடாது! நீ என்கூட வரலைனதும் கொஞ்சம் பதட்டமாகிருச்சு!” கண்களை மூடியபடி, புருவங்களை உயர்த்தியபடி சொன்னான்!

இப்பொழுதும் மௌனம் மட்டுமே பதிலாய் அவளிடம்! ஆனால் இணைந்திருந்த கைகளில் அவன் காட்டிய அழுத்தத்திற்கு ஈடாக இவளும் அழுத்தினை கூட்டினாள்!

‘நான் நல்லாயிருக்கேன்! பயப்படவேணாம்!’ என்று அவள் கூறவருவது இவனுக்கு புரிந்தது! இவனும் சரியென்பது போல தலையாட்டி கண் திறந்த வேளையில், கதவை திறந்து உள்ளே வந்தாள் ஹர்திகா யாரிடமோ சலசலவென்ற பேச்சோடு!

அவள் வந்ததும், சர்வாவின் பிடியிலிருந்து கையை உருவிக்கொண்ட அபி, பாய்ந்து போய் ஹர்திகாவை கட்டிக்கொள்ள, சர்வாவிற்கு தான் இங்கே சுறுசுறுவென பொறாமை, கத்தி வைத்து அறுக்கப்பட்ட சாக்லேட் கேக்கில் வெளிவரும் லாவா போல பொங்கி வழிந்தது!

‘இவ்வளவு நேரம் என்கூடவே மழைல நனைஞ்ச குருவி போல, வாயே திறக்காம இருந்துட்டு.. இப்போ அதுக்கு ஆள் வந்ததும் என்னை விட்டுட்டு போறதை பாரேன்! இதுவும் எனக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லாம நிற்கிறதை பாரேன்!’ மனத்துக்குள்ளேயே பொருமினான் சர்வா!

ஆனால், சர்வாவிற்கு நன்றி நவின்ற ஹர்திகா, அபியை தன்னிடமிருந்து பிரித்து, “எதுக்கு பயப்படுற? அதான் சர்வா உன்னை பத்திரமா கூட்டிட்டு வந்துட்டாங்கள? உலகத்தை காக்குற உன்னோட அவேன்ஜெர் ஹீரோஸ் போல..” கண்சிமிட்டி சமாதானமாய் சொன்ன வார்த்தைகளில் சர்வாவின் பொறாமையெனும் சாக்லேட் லாவா மந்திரம் போட்டது போல ஃபிரீஸாகி சாக்லேட் பார் போல ஆனது!

‘கேர்ள் பெஸ்டீஸ் ஆர் ஆல்வேஸ் பெஸ்ட்’ அவனே அவனுக்குள் கூத்தாடினான்! ‘அட மானஸ்தா!’ மனசாட்சியோ வாயை பிளந்தது! பெண்களோ இவனது மன ஆட்டத்தை அறியாதவர்களாய் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு இருந்தனர்!

சிறிது நேரம் கழித்து, ஹர்தி இவன் பக்கம் திரும்பியவள், “சரி சர்வா! கிளம்பு! நானும் ப்ரோக்ராம் நடக்குற இடத்துக்கு போகணும்!” என்று ஹர்தி சொன்னதும், ‘அப்போ அபி?’ என்பதுபோல பார்த்தான் சர்வா!

“அபி இங்கேயே இருப்பா!”

“தனியாவா? நோ.. நான் அலோவ் பண்ணமாட்டேன்!”

‘ஏன்’ என்பது போல ஹர்திகாவின் பார்வை குழப்பமாய் படிய, அபிக்கோ ஓர் அதிர்வுக்குமிழ் உண்டானது! கண்களின் வழியே காட்டிவிடுவோமோ என்ற பயத்தில் தலை குனிந்து கொண்டாள்!

“ஷி வாஸ் பானிக்.. அப்படி பயந்துட்டா.. தனியா விடுறதில் எனக்கு இஷ்டமில்லை..” என்று அபிக்காய் மறுத்தான்!

“செக்யூரிட்டி இருக்காங்க சர்வா! அவங்களை மீறி யார் உள்ளே வரப்போறா?” என்று ஹர்தி எடுத்து சொன்னாலும்,

“வெளில அத்தனை செக்யூரிட்டி இருந்தும் அவ அங்கே மாட்டிகிட்டா! அவங்களை மீறி யாராவது ஒருத்தர் உள்ளே வந்தா.. நோ.. நோ..! தெரியாத ஒருத்தர்கிட்ட அவளை நான் தனியா விடமாட்டேன்!” என்று ஒத்துக்கொள்ளவேயில்லை சர்வா!

“சர்வா நீ தேவையில்லாம டென்ஷன் ஆகுற! அவளால பார்த்துக்க முடியும்ன்னு சொல்றாளே? சரி.. என்னோட அசிஸ்டன்ட்டை அனுப்பி வைக்கவா? அவங்க இவ கூட இருப்பாங்க!”

“அப்பறம் அங்கே உனக்கு ஹெல்ப்க்கு யாரிருப்பா? நோ.. நான் இங்கேயே இருக்கேன்! நீ போய் முடிச்சிட்டு வா!”

“லேட்டாகும் சர்வா!”

“என்ன பெரிய லேட்? அப்போ எதுக்கு இங்கே வர சொன்ன? பேசாம நீ தங்கியிருக்க ஹோட்டலுக்கே போயிருன்னு சொல்லியிருக்க வேண்டியது தானே?” சர்வாவின் குரல் உயர்ந்தது!

“நீங்க ரெண்டு பேரும் டென்ஷன் ஆகவேண்டாம்! நான் மேனேஜ் பண்ணிருவேன்! நீங்க போயிட்டு வாங்க சர்வா!” என்று அபி சமாதானம் சொல்ல, அவளுக்கும் ஒரு முறைப்பையே தந்தான் சர்வா! வாயை மூடிக்கொண்டாள் அபி!

“இப்போ என்ன செய்யனும்ன்ற?”

ஹர்திகாவிற்கு கொஞ்சம் கோபம் வந்தது தேவையில்லாமல் கத்துகிறானேயென்று.. சர்வாவும் அதை உணர்ந்து தான் இருந்தான்! ஆனாலும் தனது பிடியிலிருந்து கொஞ்சமும் வெளிவர விரும்பவில்லை அவன்!

“நீ போ.. நான் இருக்கேன்!” கட் அண்ட் ரைட்டாக சொன்னவன், சோபாவில் சென்று மீண்டும் அமர்ந்துவிட்டான்!

“எல்லா நேரத்திலயும் நீ அவகூட இருக்கமுடியாது சர்வா!” என்று அவனை கூர்மையாய் பார்த்தபடி உரைத்தாள் ஹர்திகா!

தெரியாமல் சொன்னாளா? இல்லை உணர்ந்து சொன்னாளா? அவளுக்கே வெளிச்சம்!

ஆனால் கேட்ட சர்வாவிற்கோ, எங்கிருந்து தான் அப்படியொரு கோபம் வந்ததோ?

“என்னால இருக்கமுடியும்! நீ கிளம்பு!” என்று ஹர்திகாவின் முகம் கூட காணாமல் சொல்ல அதில் ஹர்திகாவிற்கும் சுறுசுறுவென கோபம் வந்தது!

“என்னமோ பண்ணிக்கோ!” பட்டென்று சொன்னவள், இன்னமும் அங்கேயிருந்தால் சர்வாவை திட்டிவிடுவோமோ என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு வெளியேற முயல, அவளின் பின்னேயே அபியும் வருத்தமுடன் சென்றாள்!

ஹர்திகா கதவை திறக்கும் வேளையில், “ஆப்லா! நீங்களும் கோபப்படாதிங்க! எனக்கு கஷ்டமா இருக்கு! நான் அவங்ககிட்ட சொல்றேன்!” என்று அவளையும் அபி மெல்லிய குரலில் சமாதானம் செய்ய, சர்வா மேல் இருக்கும் கடுப்பை இவளிடமா காட்டமுடியும்?

ஹர்தியும் “ஊஊஃப்” என்று வாய் வழியாக மூச்சை வெளியிட்டு அரங்கிற்கு சென்றுவிட்டாள்!

செல்லும் போதே, “கண் பார்வை சரிவர தெரியாத ப்ளாக் ரைனோ போல தான் கத்துறான்! சொல்லவர்றதை ஒழுங்காவே புரிஞ்சுக்காம!” என்று சன்னமான குரலில் புலம்பிக்கொண்டே சென்றதை என்னவென்று சொல்ல?

அதைக்கேட்டபடி மௌனமாய் கதவை சாத்திவிட்டு வந்த அபியோ சர்வாவை பார்த்தாள். முன்னேயிருந்த டீபாயில் தண்ணீர் பாட்டிலை திறந்தபடியே, “உங்களுக்கு ரொம்ப கோபம் வருது! முதல்ல இந்த தண்ணியை குடிங்க!” என்று அவனிடம் நீட்டினாள் அபி! சர்வவோ எதுவும் பேசாமல் தண்ணீரை வாங்கியவன், வாங்கிய வேகத்தில் அவளின் கைப்பற்றி அருகே அமரவைத்தான்!

“நான் ஒன்னும் கோபப்படலை!” என்று விறைப்பாக சொல்லியதில், சிரித்துவிட்டாள் அபி!

“பாஸ்! அதை சிரிச்சிட்டு சொல்லணும்! இப்படி ஈஈஈஈன்னு” மொத்த பல்லையும் காட்ட, சர்வாவிற்கும் அவனறியாமல் புன்னகை தோன்றியது!

“வாலு! பயமெல்லாம் போச்சாக்கும்! பதிலுக்கு நக்கல் அடிக்கிறியா?” என்று அவளின் காதை பிடித்து திருகினான்!

“பின்னே என்னவாம்? நான் தான் மேனேஜ் பண்ணிப்பேன்னு சொல்றேன்ல.. அப்பறம் எதுக்கு இத்தனை பிடிவாதம் பிடிக்கிறிங்க?”

சிரிப்புடன் கேட்டாலும், அதில் ஆதங்கம் ஒளிந்திருப்பதை அறியாமலா இருப்பான்? அவனுக்குமே தனது பிடிவாதத்தை நினைத்து புதிராய் இருந்தது! மற்றவர்கள் என்றால் வந்து பத்திரமாக கொண்டு சேர்ப்பது வரை செய்திருப்பான் தான்! ஆனால் ‘இப்படி தனியாக இருக்கவேண்டுமே அவர்கள்’ என்று யாருக்காகவும் தவித்ததில்லை!

‘இவள் மேல் மட்டுமென்ன தனக்கு தனி அக்கறை? அவளுக்கு யாருமில்லை என்பதால் வந்த அக்கறையா? அப்பொழுது இவள்மேல் பரிதாப்படுகிறோமா?’ அவனுக்குள்ளேயே கேள்விக்கேட்டவனுக்கு ‘இல்லையென்ற’ பதில் தான் கிடைத்தது!

ஆனால்.. மேலே சிந்திக்க விடாமல், “சர்வா! உங்களைத்தான் கேட்கிறேன்? எதுக்கு இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிறிங்க! ஐ வில் மேனேஜ்!” என்று அவனது கையை விலக்கிவிட்டு கூறினாள் அபி!

“அபி! நீ மேனேஜ் செஞ்சாலும்.. எனக்கு தோணிட்டே இருக்கும்.. தனியா இருப்பன்னு.. எங்கேயோ இருந்துட்டு நான் உன்னை நினைக்கிறதுக்கு.. நீ என்னோட கண் முன்னாடியே இருக்குறப்ப நான் கவலை இல்லாம இருப்பேன்ல! இதோ.. இப்போ போன ஹர்திகா..” என்றபடி கதவை நோக்கி கைக்காட்டியவன்,

“அப்படி கத்திட்டு போனாலும், நான் இருக்கேன்னு தைரியமா இருப்பா! அவளோட அசிஸ்டன்ட் கூட நீ இருக்கன்னு கொடுக்குற தைரியத்தை விட!” என்று சொல்லும்போதே அவள் கண்ணெல்லாம் கலங்கியது!

சர்வாவோ அதைக்கண்டு அவளை சமாதானம் செய்யாமல், தனது போனில் மணி பார்த்தவன், அவள் பக்கம் நன்றாய் திரும்பி ஒரு காலை மடக்கி உட்கார்ந்தான்!

“இப்போ ஸ்டார்ட் செஞ்சா.. சரியா ஒரு மணி நேரம்! ஹ்ம்ம்.. கரக்ட்டா இருக்கும்! ஆரம்பி!” என்று அபியை கண்டு சொல்ல, அவளோ கலங்கும் விழிகளோடு புரியாமல் முழித்தாள்!

‘ஏதோ வம்பா சொல்றாங்க? ஆனா என்னன்னு புரியலையே?’

“இல்லை.. அடிக்கடி டாமை திறக்கிறயே.. அதான் ஒரு ஒன் ஹவர் திறந்துவிடு.. ஹைதராபாத்ல வேற வாட்டர் ஸ்கேர்சிட்டி பிரச்சனை இருக்கு! நீ திறந்துவிட்டா இவங்க எல்லாம் டாமை நிரப்பிருவாங்க.. தண்ணி பஞ்சமும் இருக்காது!” என்று நமட்டு சிரிப்புடன் உரைத்ததும், கண்ணீருக்கு பதில் சிரிப்பு தான் வெளிவந்தது அபிக்கு!

‘உங்களை’ என்றபடி சிரிப்பும் சிணுங்கலுமாய் அவனுக்கு கையில் ஒரு அடி கொடுத்தவள், “உங்களுக்காக பார்த்து சொன்னா.. நீங்க என்னை கிண்டல் பண்ணுறிங்க?” என்றாள்.

“நான் இதுக்கு பதில் சொல்லிட்டேன்!” என்று சாதாரணமாய் சொன்ன சர்வா அப்படியே பின்னே சாய்வாய் அமர்ந்து தலைக்கு பின் இரு கைகளையும் கோர்த்தபடி கண்களை மூடிக்கொண்டான்!

அடுத்த பக்கம்