நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 10 (3)

போனிலேயே குடியிருந்த தயாரிப்பாளர் இதையெல்லாம் கவனத்தில் வைத்திருக்கவில்லை! ஆனால் அந்த பெண் இயக்குனரோ ‘சர்வாவின்’ இந்த புதிய பரிமாணத்தில் ரகசியமாக சிரித்துக்கொண்டார்!

‘படத்துல காதல் மன்னனா இருந்தவர்.. இப்போ நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனா வலம் வரப்போகிறாரா? நடக்கட்டும்.. நடக்கட்டும்!’ என்று மனத்துள் நினைத்துக்கொண்டார்!

தயாரிப்பாளர் சர்வாவின் தந்தை, தாயைப்பற்றி விசாரிக்க, ‘அப்பா டார்ஜிலிங்ல இருந்து வர எப்படியும் ஒருவாரம் ஆகும்! புதுப்படத்துக்கு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கார்.. எழுத உட்கார்ந்துட்டார்ன்னா சோறு தண்ணியை மறந்துவிடுற ஆள்! உடம்பை கெடுத்துக்குவார்ன்னு அம்மா இதுபோல நேரத்துல அப்பாவை தனியா அனுப்ப மாட்டாங்க! அதனால கூட அவங்களும் போயிருக்காங்க!’ என்று பதில் தந்தான் சர்வா!

ஒருவழியாக வேண்டிய எல்லாம் சொன்னபிறகு, தயாரிப்பாளரும், இயக்குனரும் கிளம்பிவிட, சர்வாவும் அபியும் மட்டுமே தனித்து இருந்தனர்! குறித்து வைத்த அனைத்தையும் சஞ்சுவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியவள் தானும் எழுந்து கிளம்புவதாக சொல்ல, அதை மறுத்தவனோ அவளை உணவருந்தி விட்டுத்தான் செல்லவேண்டும் என்று கட்டளையிட்டான்!

அவள் வேண்டாமென்று மறுத்ததற்கும் விடவில்லை! அதற்குமேலும் அவளால் அவனுக்கு மறுப்பு சொல்லமுடியவில்லை! இருவரும் உண்ண ஆரம்பித்தனர்! அடிக்கடி இதுபோல சர்வாவுடன் உணர்வருந்த திரையுலக ஆட்கள் வருவதால், யாரும் அவளை குறுகுறுவென பார்க்கவில்லை!

சில நிமிடங்கள் மௌனத்தில் செல்ல, பின் சர்வா தான் பேச ஆரம்பித்தான்!

“உனக்கு யாருமில்லை.. அவ பொறுப்பில இப்போ இருக்கிறதா ஹர்திகா சொன்னா? ஆமா சின்ன வயசுல எங்கே வளர்ந்த? எப்படி இவங்களை மீட் செஞ்ச?” என்று சர்வா கேட்டதும் ‘பெக்கே.. பெக்கேவென’ முழித்தாள் அபி!

சர்வாவோ குனிந்து உண்டுக்கொண்டு இருந்தவன் அவளின் மௌனத்தில் நிமிர, கேள்விக்கு பதில் எங்கேயென்று அவன் பார்ப்பது போல தோன்றியது அவளுக்கு!

“அது.. அது.. ரிலேடிவ் வீட்ல இருந்தேன்.. அப்பறம் காலேஜ்.. ஹாஸ்டல்..” என்று திக்கலும் திணறலுமாய் சொன்னவள், “ஆப்லா.. ரெண்டு பேரையும்.. எலகன்ட் ரங்ல இன்டர்ன்ஷிப் அப்போ மீட் பண்ணினேன்!” என்று பதில் தந்தாள்.

அபிக்கு அவளின் குடும்பத்தை.. அவர்களின் பிற்போக்குத்தனத்தை பற்றி வெளியில் சொல்லவே அசிங்கமாக இருந்தது! மேலும் சஞ்சுவும் ‘உனக்கு அவர்கள் இனி தேவையில்லை.. அவர்களைப்பற்றி இனி எங்கும் யாரிடமும் பேசாதே!’ என்று பலமுறை அறிவுறித்தியிருந்ததில் யாரிடமும் குடும்பத்தை பற்றி கூற விரும்பவே மாட்டாள்!

இன்று சர்வா கேட்டதும் அவனிடம் பொய் சொல்கிறோமே என்ற உணர்வும், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி’ என்ற கழிவிரக்கமும் அவளை அதற்குமேல் கூறவிடாமல் மௌனமாய் இருக்க வைத்தது!

‘ஹ்ம்ம்..’ என்று அவளின் பதிலை தனக்குள் உள்வாங்கிக்கொண்டான் சர்வா! அதன்பிறகு அவன் எதுவும் கேட்கவில்லையென்றாலும் அபிக்கோ எங்கே இன்னமும் அதற்கு சம்பந்தமாக ஏதாவது கேட்டுவிடுவானோ என்று இருந்தது!

ஆனால் சர்வாவோ அவள் சொன்னதை முற்றிலுமாக நம்பினான்! அதைப்பற்றி தூண்டித்துருவ வேண்டிய சிந்தனையெல்லாம் வரவில்லை! அவன் இன்னும் கொஞ்சம் அதைப்பற்றி பேசியிருந்தாலும் அபி கண்டிப்பாக அவனிடம் உண்மையை சொல்லியிருப்பாள் தான்! ஆனால் இது எதுவுமே அதற்கு பிறகு நடக்கவில்லை!

ஒருக்கட்டத்தில் நிசப்தத்தின் அழுத்தம் தாளமுடியாமல் அபி தான், “சர்வா சார்! இனிமே இதைப்பத்தி கேட்கவேண்டாம்! ப்ளீஸ்!” என்று சொல்ல.. அந்த குரலின் வருத்தத்திலும், கலங்கிய கண்களின் மாற்றத்திலும் சர்வா தான் இப்பொழுது வருத்தப்பட வேண்டியிருந்தது!

‘யாருமில்லாமல் சிறு வயதில் கஷ்டப்பட்டிருப்பாள் போல.. அதைப்பற்றி கேட்டு இன்னமும் வருத்தப்பட வைத்துவிட்டோம் போல’ என்று தன்னையே கடிந்துக்கொண்டான்!

“அதுக்கு எதுக்கு கலங்குற? கேட்கமாட்டேன் எப்பவும்..” மேஜையை இறுகப்பற்றியிருந்த அவளின் இடது கையை அழுத்தமாய் பிடித்துக்கொண்டவன், அவளின் உள்ளங்கையில் வருடியபடி உரைத்தான்! அதற்கு பதிலாய் அவள் தந்ததோ வேகமாய் தலையாட்டலும் லேசான புன்னகையும் தான்!

இவனும் மென்னகை புரிந்தவன், அவளின் தலையை செல்லமாய் கலைத்துவிட்டு சாப்பிட சொல்ல, உண்ண ஆரம்பித்தாள் அபி!

சர்வா எப்பொழுதும் புது ஆட்களிடம் அத்தனை சீக்கிரத்தில் பேசிவிடமாட்டான்! அவனுக்கு அவர்களோடு பழக கொஞ்ச நாளாகும்! ஏன் புதுப்படங்களுக்கு கதை சொல்ல இயக்குனர்கள் அணுகும் பொழுது அவன் உடனே கதை கேட்க உட்கார்ந்துவிடமாட்டான்! தெரிந்தவர்கள் மூலமாக வந்தால், நலன் விசாரித்துவிட்டு கதை கேட்பவன்.. புது ஆட்கள் என்றால் அவர்களுடன் கேஷுவலாக சிறிது நேரம் பேசிப் பார்ப்பான்! இருபது நிமிடம் வரை பேசுபவன், அவர்களது அலைவரிசை தன்னுடன் ஒத்துவரவில்லை என்றால் அவர்களோடு செயலாற்ற மாட்டான்!

திரையுலக நண்பன் என்று தீபக், ஆரம்ப காலத்திலிருந்து தன்னோடு நடித்துவந்த ஹர்திகா, சிறுவயது தோழியான ஷ்ரவந்தி, தோழிக்கும் மேலாய் சகோதர பாவத்துடனேயே பழகி வரும் சஞ்சு இவர்கள் நால்வர் மட்டும் இதில் விதிவிலக்கு! இந்த விதிவிலக்கினுள் அவனறியாமலேயே அபியை நுழைத்திருந்தான்! அதை இப்பொழுது உணரும் பொழுது ஏனென்ற விடை தான் கிடைக்கவில்லை! கிடைத்தபொழுதோ அவன் மனவெளியில் மின்னல்கள் கூத்தாடியது மிக உற்சாகமாய்!

தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி