நனைகின்றது நதியின் கரை 9 (7)

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் தோற்பதை அனுபவமாய் உணர்ந்தான் அரண். இவன் பார்வை முழுவதும் அவள் கண்களில் சரணடைந்திருந்தது. அவளை நோக்கி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் மிதந்தான்தான்.

இவனுக்கு முன்பாக சென்றுவிட்ட ப்ரபாத்தைப் பார்த்து ஒரு முழு சிரிப்புடன் பன்னீர் தெளித்தவள் ஒரு மருண்ட பார்வையை வாயில் புறமாக அதாவது இவன் புறமாக செலுத்தினாள்.

அவள் பார்வை இவன் மீது என்றானதும் சட்டென புன்னகைத்தான் இவன். ஆனால் அவளோ அடுத்த நிமிடம் பன்னீர் செம்பை அங்கு வைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். அதென்ன ப்ரபாத்திடம் இயல்பாய் பழக முடிந்தவளுக்கு இவன் மீது பயம்? இவனைப் போல அவனும் தானே செலிப்ரிடி….ஒரு வேளை வெட்கமோ அது?

திருமண விழாவில் அவள் அங்குமிங்கும் ஓடி ஆடி உரிமையுள்ளவளாய் குடும்பத்தில் ஒருத்தியாய் சுழன்று கொண்டிருந்தாள். எல்லோரிடமும் இயல்பாய் பழகினாள். இவனுக்கு மட்டும் ஒரு வித கடினப் பார்வை பரிசு….அதுவும் வேறுவழியின்றி இவனை பார்க்க நேரிட்டுவிட்டால் மட்டுமே….மத்தபடி இவனை அவள் தவிர்த்தாள். ஆனால் இவன் பார்வை முழுவதும் அவள் மீதே….

மணமக்களை வாழ்த்த இவன் ப்ரபாத்துடன் மேடை ஏறினான்.

“சாரி அரண்….அந்த லேப் இன்சிடென்ட் அவளுக்கு முழுசா தெரியவும் உடனே வீட்டுக்கு வந்து சாரி கேட்டா….அப்ப இருந்து அப்டியே கொஞ்சம் கொஞ்சமா எங்க வீட்டுக்கு அவ ரொம்ப க்ளோஸ்….அவ அம்மா அப்பாவுமே வீட்ல ஒருத்தங்களாத்தான் பழகுவாங்க…..எல்லோரும் ரொம்ப நல்ல டைப் தான்.. ஏனோ உன்னைய அவளுக்கு பிடிக்கலை….சுகா உன்னை எதாவது இங்க ஃபங்க்ஷன்ல வச்சு சொல்லிருந்தான்னா ரொம்ப சாரி….” மானு சொல்ல சொல்ல அரணால் நம்ப கூட முடியவில்லை அது சுகவிதா என.

அவன் பார்த்த பல்லிப் பொண்ணா இது?

இவனிடம் தான் சரவெடி சாட்டையடி எல்லாம் போலும். மானுவைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்டது இயல்பாய் எல்லோரும் செய்வதாய் இருக்கலாம்….ஆனால் அதன் பின் அந்த குடும்பம் இவளை இந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ளுமளவிற்கு பழகவும் ஒரு தன்மை வேண்டும் தானே…..இன்னைக்கும் தான் ஒரு வி ஐ பி ங்கிற எந்த பந்தாவும் இல்லாம….டவ்ன் டூ எர்த்……இவனே அது சுகவிதான்னு நினைக்க முடியலை தானே…..

இவனும் ப்ராபாத்துமாக காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நண்பனை ட்ரைவ் செய்ய சொல்லிவிட்டு இவன் கற்பனை ஹார்சில்….….

அருகிலிருந்த ப்ரபாத்தை திரும்பிப் பார்த்தான் அரண். ‘பிறந்ததிலிருந்து ப்ரபுவோட ப்ரெண்ட்….அவனோட லிட்டில் சிஸ்…..’ இவன் மனம் இப்படி ஓடிக் கொண்டிருக்க…

“உன்ன அவளுக்கு சுத்தமா பிடிக்காதுடா மாப்ள….தேவையில்லாம ஆசைய வளக்காத….அவங்க அப்பாவ யோசி….அங்கிள் உனக்கு அவள தர்ற ஆளாடா…..?” இவன் மனம் எங்கு ஓடுகிறது என சொல்லாமலே புரிந்து கொள்ளும் ப்ரபாத்….

“தேவையில்லாம உனக்கு இருக்ற சந்தோஷம், நிம்மதி எல்லாத்தையும் கெடுத்துக்காத….அனவரதன் அங்கிள்க்கு அவ தான் உலகமே…உங்கப்பா நிம்மதியப் பத்தியும் யோசிச்சுப் பாரு….” அவனது இத்தனை வார்த்தைகளில் மனதை கட்டி கடலில் புதைத்துவிட்டான் அரண்.

செல்ஃப் கன்ட்ரோல் என்பது விளையாட்டில் தாரக மந்திரம். அது சொந்த வாழ்க்கைக்கும் யூஸ்ஃபுல் தான்.

அந்த காதல் அனுபவத்தை அவன் ஈசியாக தாண்டி விட்டான்தான்…..

ஆனால் அடுத்த முறை இவனை துரத்தி மிரட்டி கதலித்த ஜீவாப் பொண்னின் காதலைத் தான் அவ்வளவு எளிதாக ஒதுக்க முடியவில்லை அரணால்……இன்று சுகவிதா இவனை ஜீவா என அழைப்பதற்கும், அவள் இப்படி தன் நினைவு மறந்து இருப்பதற்கும் காரணமான அந்த பெண்ணை இவன் சந்தித்த இடம்…

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 10

Leave a Reply