நனைகின்றது நதியின் கரை 9 (5)

ப்ரபாத் அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்ற செய்தி பள்ளி நேரத்தில் வந்திருந்ததால் தன் காரில் தான் ப்ரபாத்தை அனுப்பி வைத்திருந்தான் அரண். ஆக ட்ரைவர் இனி திரும்பி வந்து இவன் காத்திருப்பேன் என சொன்ன இடத்தில்  இவன் இல்லாததைக் கண்டு, இவன் தந்தையிடம் தகவல் சொல்லி அவர்கள் பள்ளிக்குள் தேடி வந்தால் மட்டுமே வெளியே இருந்து உதவி வர முடியும்.

அதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ? மானு வீட்டில் எப்படி பதறுவார்கள் இதற்கு?

மானு ஏற்கனவே சற்று பயந்த சுபாவம். அவள் ஓரளவிற்கு மேல் இவன் எத்தனை சொல்லியும் கேளாமல் அழ ஆரம்பித்துவிட்டாள். “என் அப்பா ஹார்ட் பேஷண்ட்….அப்பாக்கு எதாவது ஆகப் போகுது…ஒரு பாய் கூட லேட்டா வீட்டுக்குப் போனேனா என்னை கொன்னே போட்டுறப் போறாங்க…” என்ற ரேஞ்சுக்கு அழுது இவனை வேறு டென்ஷன் ஏத்தினாள்.

இவனும் செக்யூரிட்டியாவது இந்த பக்கம் தேடி வருவாரா என ஓரளவு பொறுத்துப் பார்த்தவன் இருட்டவும் அதற்கு மேல் நாமாக வெளியேறினால் தான் உண்டு என்ற மனநிலைக்கு வந்திருந்தான்.

லேப் அறையின் ரூஃப் அருகில் இருந்த க்ரில்டு வெண்டிலேட்டரை ஏறி கழற்றி, அதன் வழியாக அந்த 6வது மாடியின் வெளிப்புறமாக தொங்கி…. இருட்டென்றாலும் கூட இங்கிருந்து கீழே பார்த்தால் எப்படி இருக்கிறதாம்?

அங்கிருந்து கீழே 5ஆவது தள ஜன்னலின் மேலாக நீட்டிக் கொண்டிருந்த சன் ஷேட் ஸ்லாபில் இறங்கி, அங்கிருந்து ஒவ்வொரு தளத்தின் கீழிருந்த  ஜன்னலின் சன் ஷேட் மேலாக உயிரை பணயம் வைத்து குறி தவறாமல் குதித்து,  தரையை அடைந்து ப்ரின்ஸிபால் ரூமிற்கு அருகில் தண்ணி அடித்துவிட்டு விழுந்து கிடந்த செக்யூரிட்டியை எழுப்பிப் பார்த்தான் அரண். அவனிடம் அசைவு இல்லை. வெற்று உளறல் மட்டும் வந்தது.

இதற்குள் தனியாய் இருக்கும்  மானு பயத்தில் என்ன ஆனாளோ?

கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்தின் நுழைவு வாசல்களிலும் கிரில் கேட் உண்டு. இவன் பூட்டை உடைத்து மானுவை கீழே கொண்டு வர நினைத்தால் ஏறத்தாழ 13 பூட்டுகளை உடைக்க வேண்டும். நடக்கின்ற காரியமா?

சாவி ப்ரின்ஸிபால் அறையில் இருக்கும். ஆனால் நாளைக்கு +2 பரீட்சையை  வைத்துக் கொண்டு ப்ரின்ஸி அறையை உடைத்தால் கொஸ்டியன் பேப்பர் திருட என்று கூட ப்ரச்சனை வந்து நிற்கலாம்.

அவனால் அதற்கு மேல் இன்னொரு கிரிமினல் கேஸை எதிர் கொள்ள முடியாது. அப்படித்தான் அப்பொழுது அவனால் நினைக்க முடிந்தது.

ஆக வேறு வழி எதுவும் தோன்றாமல் அங்கு கிடக்கும் என தெரிந்த ஏணியை எடுத்துக் கொண்டு போனான். இவன் இறங்கிய வகையாக ,கட்டிடத்தின் பின் புறம் போய், தரையிலிருந்து க்ரவ்ண்ட் ப்ளோர் ஜன்னல் சன் ஷேடின் மீது அந்த ஏணியை சாய்த்து வைத்து, ஏணி மூலமா அந்த சன் ஷேடின் மீது ஏறிக் கொண்டான்.

அதன் பின் அங்கிருந்து ஏணியை தூக்கி இப்பொழுது இந்த சன் ஷேடிலிருந்து ஃபர்ஸ்ட் ஃப்ளோர்  சன் ஷேட் நோக்கி சுவரில் ஏணியை சாய்த்தான். அதன் பின் அந்த ஏணியின் மீது ஏறி படு ரிஸ்க் எடுத்து அதிலிருந்து ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வின்டோ சன் ஷேடுக்கு ஏறிவிட்டான்.

இப்பொழுது கீழிறுந்த ஏணியை படு ப்ரயத்தன பட்டு தூக்கி இந்த இவன் இருக்கும் சன் ஷேடில் வைத்து செகண்ட் ஃப்ளோர் சன் ஷேடை  நோக்கி அதை சாய்த்து வைத்தான். அதிலேறி செகண்ட் ஃப்ளோர்….இப்படி ஒவ்வொரு தளமாக கடந்து

இவன் வெளியே வந்த வென்டிலேட்டர் வழியாக மீண்டுமாய் உள்ளே சென்று அந்த மானுவையும் அழைத்துக் கொண்டு அதே போல் சன் ஷேட் டூ சன் ஷேட் ஏணியைப் பயன் படுத்தி மூன்று ஃப்ளோர் இறக்கும் முன், மானு உச்சகட்ட டென்ஷனில் மயங்கிப் போனாள்.

இப்பொழுது அவளையும் சுமந்து கொண்டு எப்படியோ சமாளித்து இவன் தரையை அடையும் முன் கோடி முறை நரகம் கண்டுவிட்டான்.

மூச்சிளைக்க இளைக்க சுமந்து சென்று அருகிலிருந்த வெளிச்சத்தில் மானுவை தரையில் கிடத்தி நிமிர்ந்தால் எதிரில் போலீஸ்காரர். அதுவும் அதே வில்லன் போலீஸ்….பட்ரோல் வந்தவர் கண்ணில் பட்டிருக்கிறான்.

இவன் காலரை பிடித்து இழுத்த படி ….”அந்த பொண்ண என்னடா பண்ண நாயே………” இவன் கன்னத்தில் விழுந்த அறையில், அவர் கர்ஜனையில், அரணிற்கு சர்வமும் ஆடிப் போனது….இனி இவன் கதை என்ன?

ஆனால் அதே நேரம் அவனைத் தேடி அங்கு வந்து சேர்ந்தார் திரியேகன். அவருடன் ஒரு குட்டி டீம்…

அதற்கு மேல் இவனுக்கு அடி விழாமல் காப்பாற்றியது அவர்கள் தான். மயக்கம் தெளிந்து விழித்த மானு நடந்ததை சொல்ல, அதற்குள் இவன் லாயர், மானு அப்பா என எல்லோரையும் திரியேகன் அங்கு வரவழைக்க, எப்படியோ அன்று எந்த சேதாரமும் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தான் அரண்.

இந்த முறை அந்த சுண்டெலி சூனியக்காரியை சும்மாவிட அவனால் முடியாது.

ன்றும் தொடர்ந்த சில தினங்களும் பள்ளியில் மற்ற வகுப்பினருக்கு விடுமுறை. +2 பரீட்சை ஆயிற்றே… அப்பொழுது தான் சுகவிதாவிற்கு அவனுக்கு எக்ஸாம் என ஞாபகம் வந்து சற்று உறுத்தியது.

‘ஆனாலும் நான் விம்பிள்டன் போக கூடாதுன்னு நீ நினச்சல்லா…..ஆனா நான் நீ பரீச்சை எழுதக் கூடாதுன்னு நினச்சு எதுவும் செய்யலையே….’ என்ற எண்ணத்தால் தன்னை சமாதானப் படுத்திக் கொண்டாள்.

அடுத்தும் சில தினங்கள் கழித்து அவள் பள்ளி செல்லும் போது அவள் அதை வெகு இயல்பாய் எடுக்கும் அளவிற்கு வந்திருந்தாள். ஏனெனில் அரண் எக்‌ஸாம் அப்பியர் ஆகி இராவிட்டால் பள்ளியிலிருந்து நிச்சயம் இவளை கூப்பிட்டு இதற்குள் டிசிப்ளினரி ஆக்க்ஷன் எடுத்திருப்பிருப்பார்கள் என இப்பொழுது தோன்றிவிட்டது அவளுக்கு.

அடுத்த பக்கம்