நனைகின்றது நதியின் கரை 9(2)

ப்ரபாத்தை அவள் எகிறுவதைப் பார்த்து ஒரு பக்கம் எரிச்சல் வரவா வரவா என்கிறது. ஆனாலும் அவனே அவளை பதிலுக்கு திட்டாமல் சமாதானம் சொல்லிக் கொண்டு இருக்கிறான் எனில்…..

கோபம் வந்தால் ப்ரபாத் எப்படி நடந்துகொள்வான் என இவனுக்கும் தெரியும் தானே….சோ லெட் மீ சீ கெர் த்ரூ ஹிஸ் ஐஸ்….இப்ப அமைதியா இருக்கனும் போல….

“சாரி…நான் எதையோ நினச்சு வந்தால் இப்டி ஆகிட்டு….”

ஒரு அளவுக்கு மேல் ப்ரபாத் திட்டு வாங்குவது பொறுக்காமல் அரண் இடையிட்டான்…..சுகவி ஷாக் வாங்கின புஸி கேட் மாதிரி ஒரு மாதிரியாக விரைத்துப் போய் இவனைப் பார்த்தாள்.

இந்த அருவாமண என்ன சொல்லுது…? என் காது எதுவும் தப்பா கேட்குதோ? ஒரு வேள போடிதான் நமக்கு அவன் மேல இருக்ற பயத்துல சாரின்னு கேட்டு வைக்குதா….நீட் ஒரு இம்மிடியட் இஎன்டி விசிட்….

அவள் வாயடைத்து நிற்க ஆப்பர்சூனிட்டியை ஆப்ட்டாக பயன்படுத்திக் கொண்டான் ப்ரபாத்.

“அவன் உன்ட்ட சாரி கேட்க தான் வந்தான்….”

“ஹான்…?”

அவள் அசந்து போய் நிற்க இதற்குள் கீழே விழுந்து கிடந்த அவளது பேக்கை எடுத்து விழுந்த வேகத்தில் சிதறி இருந்த  உடைமைகளை எடுத்து உள்ளே போட்டு  அவளிடமாக அதை நீட்டினான் அரண்.

மிரண்ட பார்வையுடன் அதை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டாள் அவள்.

அவள் சைக்கிளில் திரும்பி இருந்த ஹேண்ட்பாரை பேலன்ஸ் செய்து கொடுத்தான்.

இவன் யார்? இவன் யார்? இவன் யார்? இதத்தான் மங்கிலருந்து மனுஷன் வருவான்னு டார்வின் எழுதியிருப்பாரே…..உலகம் உண்மைய மாத்தி புரிஞ்சுகிட்டு போலயே….

திரும்ப மனுஷன் எப்ப மங்கியா எவால்வ் ஆவானோ….? நான் விடு ஜூட்….

ஆனால் நடக்க காலை அசைத்தால் உயிர் போவது போல் வலிக்கிறது.

ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட நினைக்கிறாள்.

‘இனிமேல்லாம் பெரிய பொண்ணு, சும்மா சும்மா அடுத்தவங்க முன்னால அழுது வைக்க கூடாது’ அம்மாவின் அட்வைஸை கடைபிடிக்க முயற்சி செய்தாலும் ஒன்னும் முடியவில்லை. கால் அதுவாக வலி தாங்காமல் நொண்டுகிறது.

அவளது இரண்டாம் எட்டில் ப்ரபாத் அவளை பிடித்து நிறுத்திவிட்டான்.

“ஏய் அரைடிக்கெட்….என்ன செய்து உனக்கு…?”

அடுத்தவனான அரண் முன் அதை சொல்ல விருப்பம் இல்லாமல் ஒரு பார்வை அவனைப் பார்த்தவள் மெல்ல தயங்கி ப்ரபாத்திடம் சொல்கிறாள்

“கால் ரொம்ப வலிக்குது….நடக்க கஷ்டமா இருக்குது…”

“சாரி….” உண்மையிலேயே உணர்ந்து சொன்னான் அரண்.

“பிரவாயில்ல….”

“டேய் ப்ரபு…நீ போய் அவளை அவங்க வீட்ல ட்ராப் பண்ணிடு…..நான் அவ சைக்ள கொண்டு வர்றேன்….”

ஆக ப்ரபாத்துடன் சுகவிதா. இரு சைக்கிளை ஓட்டிய படி அரண். அவளை அவள் வீட்டு வாசல் வரை சென்று விட்டு விட்டு திரும்பினான் அரண்.

துவரை அது ஒரு சின்ன நிகழ்வாகவே தெரிந்தது. ஆனால் மறுநாள் அதுவே வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக மாறிப்போனது.

காரணம் மறுநாள் காலை இவன் பள்ளியில் காரை விட்டு இறங்கும் போது கைது செய்யப்பட்டான். தன் வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் எந்த தகவலும் கொடுக்க அனுமதிக்கப்படாமலேயே இழுத்துச் செல்லப் பட்டான் அவன்.

இவனது ட்ரைவர் இவன் தந்தையிடம் தகவல் தெரிவித்து அவர் வந்து சேரும் போது சிறையிலிருந்தான் அரண். எஃப் ஐ ஆர் பதியப்பட்டிருந்தது அவன் பெயரில். கிரிமினல் கேஸ்.

திட்டமிட்டு இவன் தாக்கியதில் சுகவிதாவிற்கு காலில் எலும்பு முறிவு. மரண காயங்களுடன் அவள் மருத்துவமனையில் இருக்கிறாள் என்றது எஃப். ஐ ஆர்…

அரணால் அந்த நாளை எதிர்கொள்ளவே முடியவில்லை. 15 வயதில் இது ஒன்றும் சாதாரணமாக தெரியப் போவதில்லை. அதுவும் இயல்பு நிலை மீறாமல் வாழ்ந்து பழகி இருந்த அரணுக்கு இது தன்மானத்தில் விழுந்த மரண அடி. கூனிக் குறுகிப் போனான்.

காலையிலிருந்து சிறைக்குள் இருந்தான் அவன். முதன் முறையாக அவன் தந்தை தவித்து அவன் பார்த்த நாளும் அதுவே.

கிரிமினல் கேஸ்….ஒழுங்காக முடியவில்லை எனில் அவன் ஃபாரின் ட்ரிப் போக முடியாது…..என ஏதேதோ பயம் காட்டினார் இவர்களது லாயர். சம்பந்தபட்ட போலீசாஃபீஸரோ இவர்களிடம் பேசக் கூட தயாராயில்லை.

கடைசியில் சி. எம் வரை தலையிட்டு ஒரு வழியாக இரவு வீடு வந்தான் அரண்.

சுகவிதா ஏன் இப்படி நடந்து கொண்டாள் என அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவனைப் பற்றி அவள் அப்பாவிடம் அவள் கம்ப்ளெய்ண்ட் செய்யாமல் இதெல்லாம் ஏன் நடக்கிறதாம் என்பது அவன் எண்ணம்.

அவள் மீது சுத்தமாய் மரியாதையின்றிப் போனது அப்பொழுதுதான். ஏனெனில் அவள் அதிலிருந்து சில நாட்களில் ஜூனியர் விம்பிள்டன் போட்டிகளில் கலந்து அதை ஜெயித்து வைத்தாள்.

முறிந்த கால் என்பது கூட எத்தனைப் பொய் என்பதற்கு அதைவிட பெரிய எவிடென்ஸ் வேற என்ன வேண்டுமாம்?

ஆனால் உண்மையில் நடந்த கதை வேறு.

அடுத்த பக்கம்