நனைகின்றது நதியின் கரை 9

ன்னதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என அரண் நினைத்துக் கொண்டாலும் அதன் பின் அவன் சுகவிதாவை ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு மேல் பார்க்கவே இல்லை. இவன் கிரிக்கெட் படிற்சியிலும் பின் ஆஸ்திரேலியா ட்ரிப்பிலுமாய் பிஸி என்றால் சுகவிதா தீவிர டென்னிஸ் பயிற்சியில் இருந்தாள்.

அதோடு அரண் உடன் இருப்பதால் ப்ரபாத்தை பள்ளியில் வைத்து சுகவிதா சந்திக்க கூடாது என அவள் வீட்டில் சொல்லி வைத்திருந்திருந்தனர்.

மேலும் சுகவிதாவிற்கும் அருணுக்கும் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்பதால் ப்ரபாத்துமே ஒருவரை பற்றி மற்றவரிடம் எதையும் குறிப்பிட்டும் கொள்ளவில்லை.

ஆக சுகவிதா என்ற ஒருத்தி இருப்பதே ஏறத்தாழ அரணுக்கு மறந்து போயிருந்தது. ஆஸ்திரேலியா டூர் சென்று திரும்பி வந்த பின் ஒருநாள் இவர்கள் பள்ளியில் பைசக்கிள் டே.

வருடம் வருடம் நடப்பதுதான் இது. எதாவது ஒரு பொது நலக் கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுக்கென இவர்கள் பள்ளி மாணவ மாணவியர் ஒரு குறிப்பிட்ட தூரம் பைசைக்கிள் ஊர்வலம் போவர்.

ஸ்டூடண்ட்ஸ் தங்கள் சைக்கிளில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

அன்று அந்த பை சைக்கிள்டே நடந்து முடிந்தது. அதன் பின் தங்களுடைய சைக்கிள்களிலேயே தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர் அரணும் ப்ரபாத்தும். பைசைக்கிள் என்பதால் ட்ராபிக் அதிகமாக இருக்கும் சாலைகளை தவிர்த்து ஜனநெருக்கடியற்ற வழியை தேர்ந்தெடுத்து மாலை நேர பயண சுகத்தை அனுபவித்தபடி இவர்கள் வர தூரத்தில் இவர்களுக்கு முன்னாக சுகவிதா.

ப்ரபாத் நிச்சயம் அவளைப் பார்த்திருப்பான்தான். ஆனால் எதையும் அருணிடம் சொல்லிக் கொள்ளவில்லை. அரண்தான் அவளைப் பார்த்ததும் ப்ரபாத்திடம் சொன்னது.

“ஹேய் அது சுகா தான..?”

அரணின் சுகாவிலே பரபாத் கொஞ்சம் கலைந்துவிட்டான். ‘மங்கி டாங்கிக்கு இது எவ்ளவோ நல்லா இல்ல..?’

“ ம்”

“எப்டிடா இருக்கா உன் சிஸ்……பயங்கர பிஸி போல…பார்த்தே ரொம்ப நாளாச்சுல….”

இப்பொழுது ப்ரபாத் முழு அளவில் ஈ.

‘ஹை அரண் அவள திட்டலையே…. ‘ இதுதான் அவன் மனம்.

“நான் அப்பவே அவட்ட சாரி கேட்கனும்னு நினச்சேன்டா…..”

 

‘ஆஆஆஆஆஆஆன்ன்ன்ன்ன்’ நீ நல்லவன்னு தெரியும்டா…..ஆனா இவ்ளவு நல்லவனா???

“அப்பா சொன்னாங்கடா……நான் தான் கொஞ்சம் தேவையில்லாம அவட்ட இரிடேட் ஆகிட்டேன்னு தோணிச்சு…. அதான் இப்ப போய் கேட்க போறேன்….”

அவ்வளவுதான் ப்ரபாத் மற்றும் அரணின் சைக்கிள்கள் அவளை நோக்கி இறக்கை கட்டி பறந்தன. சும்மா ஃபார் ஃபன் ஒரு அறிவிக்கப் படாத குட்டிப் போட்டி அவ்ளவுதான்…..

சுகவியை ஓரளவு நெருங்கியதும் தன் வேகத்தைக் குறைத்துவிட்டான் ப்ரபாத்…..வேகத்தில் அவளை இடித்துவிடக் கூடாது என்பதோடு அவள் எதிர்பாராத தருணத்தில் இவன் போய் திடீரென அவள் அருகில் ப்ரேக் அடித்தால் பதறிப் போய் கீழே விழுவாள் தானே அவள்.

சுகா சுபாவம் இவனுக்கு தெரியாதா?

அவனால் அவ்வளவுதான் யோசிக்க முடிந்ததே தவிர, அதை அரணிடமும் சொல்லி வைக்க வேண்டும் என யோசிக்க முடியவில்லை.

விளைவு?! அரண் அப்படிப் போய் அவள் இடபுறமாக சடன் பிரேக் அடித்து சருக்கிப் போய் நிற்க எதிர்பாராத இந்நிகழ்வில் பதறிப் போய் அவள் அலறிய படி துள்ளியதில் அவள் சைக்கிள் சறுக்கி அவன் சைக்கிள் மேலேயே சரிய,

அப்பொழுதுதான் போய் நின்றிருந்ததால் இவனும் முழு பேலன்ஸில் இல்லாததால் இவனும் இவன் சைக்கிளோடு சரிய…..டடா டடா டம் டி டம்…..

அரண், அவன் மீது அவன் சைக்கிள், அதன் மேல் சுகவி, அவள் மேல் அவளது இரு சக்கர வாகனம்….

ப்ரபாத்தான் வந்து இந்த முறுக்கு சிக்கலை தீர்த்து வைத்து சக்கரங்களையும் சகாக்களையும் பிரித்து எடுத்தான்.

எழும்போதே சுகவிதா அழுது கொண்டுதான் எழுந்தாள். பின்னே கை காலில் அங்காங்கே சிராய்ப்புகள் அவளுக்கு. இடது கை முட்டியிலிருந்து ரத்தம் வேறு.

வலியில் கன்னா பின்னா என அவள் திட்டித் தீர்த்துவிட்டாள்…..அரணை அல்ல ப்ரபாத்தை….

அரணை திட்டிட்டு அடி வாங்குறது யாராம்? அதோட பிரின்ஸி முன்னால வேற போய் தலைய தொங்க போட்டுட்டு நிக்கனும்….ரவுடி பய குண்டு மண்டு….அறிவு கெட்ட அருவாமணை….திமிர் பிடிச்ச ரிச்சி பஜ்ஜி…

அரணும் எந்திரிக்கும் போதே எரிச்சலில் தான் எழுந்தான். அவனுக்கும் காலில் அடி. சே….ஒன்றர டன் ஒட்டடக் குச்சி… இதுக்குப் போயா விழுந்து வைப்பா…? நிக்றதுக்கு தெம்பு இல்ல…. ஆனா மேல விழுந்தா என்ன வெய்ட்டா இருக்கா?

ஆனால் அவன் எழுந்து சேர்க்கும் போது அவள் அழத் தொடங்கி இருந்தாள். அதோடு அவள் கையில் ரத்தம் வேறு. வாய்விட்டு திட்ட மனம் வரவில்லை.

அடுத்த பக்கம்