நனைகின்றது நதியின் கரை 8(8)

அதோடு அத்தனைக்கும் பின்பாக இவனது காரில் ப்ரபாத் சுகவிதாவை அவள் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வந்திருந்தான். விருப்பமில்லை எனினும் இவன் தன் காரை அதற்கு தந்திருந்தான்.

ஆனாலும் மறுநாள் என்கொயரி என இவன் அப்பாவை பள்ளிக்கு இழுத்திருந்தார் அவளது தந்தை அனவரதன். அதுதான் 20 வருட யுத்தத்தின் தொடக்கம்.

பெண்பிள்ளய எப்டி கை நீட்டலாம்….அதுவும் என் டாட்டர் அந்த திரியேகன் சன் க்ளாஸ் கூட கிடையாது தேடி வந்து அடிக்கனும்னா?….சரி அடி மேல விழலை…பட் அடிச்சது அடிச்சது தான….அந்த திரியேகன் எங்க ஊர் காரர்தான்…..பரம்பர பணக்காரங்கன்னு திமிர்….அவங்க தாத்தாட்ட எங்க ஃபோர் ஃபாதர்ஸ்லாம் கூலி வேலை செய்தாங்கன்னு இப்ப வரை எங்களை அப்டியே நினச்சுகிட்டிறுக்கார் போல…அதான் பையனை இப்டி வளத்து வச்சிருக்கார்…..பையன் மேல கண்டிப்பா டிசிப்லினரி ஆக்ஷன் எடுக்கனும்….இல்லனா நான் லீகல் ஆக்க்ஷன் எடுப்பேன்…” அனவரதன் மனப் பார்வை இப்படித்தான் இருந்தது.

“திரியேகன் குடும்பம் பணத்திமிர் பிடிச்சவங்க, நம்மள இளக்காரமா பார்க்காங்க…” இதுதான் அவரது எண்ணமும், மகளிடம் அந்த நிகழ்ச்சிக்கு பின்பு அவர் சொல்லிக் கொடுத்த கொம்பு சீவலும்.

உண்மையில் சுகவிதா தன் ஊரைச் சேர்ந்தவள் என்றே அரணுக்கு தெரியாது.

அந்த அறை இன்சிடெண்டில் பள்ளி நிர்வாகம் அரணையும் சுகவிதாவையும் எச்சரித்துவிட்டு ப்ரச்சனையை முடித்துவிட்டது. அதற்கு திரியேகன் கொடுத்த டொனஷனே காரணம் என நம்பினார் அனவரதன். உண்மையில் எந்த டொனஷனும் கொடுக்கப் படவுமில்லை, வாங்கப் படவுமில்லை.

ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பின் அரணிடம் இரண்டு மாற்றம்.

முதலாவது அவனது அப்பா திரியேகன் மகனிடம் நடந்தவைகளை நண்பனாக பேசித் தெரிந்து கொண்டார்.

“ப்ரபு அவட்ட சிப்லிங் மாதிரி பழகுறான்பா…உனக்கு ஒரு தங்கை இருந்தா அதுக்காக உனக்கு ப்ரபுவ பிடிக்காம போய்டுமா?…என்னை பிடிக்குதுங்றதுக்காக உனக்கு ப்ரபுவ பிடிக்கலைனு ஆகுமா? அது மாதிரிதான் இது….இப்ப உனக்கு ஒரு தங்கை இருந்து அவள ப்ரபுக்கு பிடிக்கலைனா என்ன செய்வ?” இந்த கோணத்தில் அவர் பேசிய வார்த்தைகள் அவன் பொச்சிவ்நெஸை விட்டு வெளியேற உதவியதோடு சுகவிதா மேல் இருந்த எரிச்சலையும் காலி செய்திருந்தது.

அடுத்த விஷயம் அந்த அடம் பிடித்து அவள் வீடு சென்ற நாளுக்குப் பிறகு அவள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் லீவு. முதலில் அவனுக்கு அது உறைக்கவே இல்லை. இரண்டு வாரத்திற்குப் பின் அவள் மீண்டுமாய் ப்ரபுவைத் தேடி லன்ச் டைமில் வந்து நின்ற பின்புதான் அத்தனை நாள் அவள் இவன் கண்ணில் படவில்லை என்பதே அவனுக்கு உறைத்தது.

இந்த முறை இவன் அவளை ப்ரபுவின் தங்கையாக பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் அதே சிடு மூஞ்சியுடன் இவனை கடந்து வந்து

“அம்மா உனக்கு கொடுக்க சொன்னாங்க பால் பாக்கெட்…” என்றபடி ஒரு பார்சலை ப்ரபுவிடம் கொடுத்துவிட்டு இவளைப் பார்த்து முறைத்துவிட்டுப் போனாள் அவள்.

அவள் முறைத்ததை இவன் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவளைத் தொடர்ந்து விறுவிறு என எழுந்து சென்ற ப்ரபாத்தை இவனால் கண்டு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

அவன் அவளை திட்டுகிறான் என்பது புரிகிறது. அது அவ்வப்பொழுது அவர்களுக்குள் நடப்பதுதான். இவன் கை கழுவ எழுந்து சென்ற போது அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது காதில் கேட்கிறது.

“உண்மைய சொல்றேன் சுகா உங்கப்பாவுக்கு அறிவே கிடையாது….” ப்ரபாத் இப்படி பேசுவான் என்றெல்லாம் அரணால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கேலி கிண்டல் என எல்லோரையும் பேசிக் கொள்வதுதான்.

ஆனாலும் யாருக்கும் தன் பெற்றோரை பிறர் திட்டும் போது கோபம் வரும்தானே…அப்படியெல்லாம் வலிக்க வைக்க மாட்டான் ப்ரபாத்.

அதையும்விட அவன் வார்த்தைகளைக் கேட்டு கோபம் ஏதும் கொள்ளாமல் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்த சுகவிதா இன்னும் ஆச்சர்யம். அரண் கவனம் அதுவாக அவர்களது குசு குசு சண்டைக்குள் சென்றது.

“எந்த காலத்துல இருக்காங்க….இப்பவும் இப்டிலாம் ஃபன்ங்க்ஷன் வச்சு…கேவலாமா இருக்கு…..இதுல இன்னைக்கு ஸ்வீட் கொண்டு வந்திருக்க நீ…. நான் அறைறதுக்குள்ள ஓடிப் போய்டு….”

“போடா இது பிரியாணி…இன்னைக்கு பூர்வி சித்தி வந்திருக்காங்க…அவங்க செஞ்சது உனக்கு பிடிக்கும்னு அம்மா கொடுத்துவிட்டாங்க….எதுக்கெடுத்தாலும் என்னய அறைவேன்னு சொல்லிகிட்டு இரு…உண்மையிலே தைரியம் இருந்தா எங்கப்பாவ வந்து கேளு….குறஞ்ச பட்சம் தைரியம் இருந்தா கூட, நாம பேசுறத ஒட்டு கேட்குதே ஒரு மண்டு குண்டு அதை நாலு போடு” என்றுவிட்டுப் போனாள் அவள்.

இப்பொழுது அரணுக்கு வேறு ஒன்று புரிந்தது

அவள் வீட்டிற்கு போக வேண்டும் என அழுத அன்று காரணம் சொல்லாமல் பிடிவாதம் பிடித்திருப்பாளாய் இருக்கும், ஆனால் காரணம் இல்லாமல் இருந்திருக்காது..பொண்ணுங்க பாய்ஸ் மாதிரி இல்ல…எல்லாத்தையும் இவன்ட்ட சொல்லிட்டு இருக்க….. ஆக இவன் தான் முட்டாள்தனமாக அவளிடம் எரிச்சல் பட்டிருக்கிறான் போலும் என்பதுதான் அது.

அது புரிதலோடு நின்றிருந்தால் ஷேமமாய் போயிருக்குமாய் இருக்கும். ஓகே ஒன் டைம் சாரி கேட்டுகிடலாம். நோ ஹார்ம் இன் தட். என இவன் இயல்பாய் எண்ணிய விஷயம் இழுத்து வந்து நிறுத்தியது அடுத்த விபரீதத்தை……

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 9

Leave a Reply