நனைகின்றது நதியின் கரை 8(6)

“ஹேய்…” என்றபடி துள்ளி எழுந்தவன் தடுக்கும் முன்பு விழுந்தது முதல் வெட்டு அவள் இடக்கையில்.

“நான் சூசைட்னாலும் பண்ணிப்பேன்…போலீஸ்ட்ட போக  மட்டும் ஒத்துக்க மாட்டேன்…” அப்படி ஒரு அகோர பயம் அவள் முகத்தில். அதற்கு இணையான போராடும் வெறி.

“லியா….யூ காட் மீ ராங்க்லி….அது இல்ல இது….” அரண் அவளுக்கு புரிய வைத்திட துடித்தான்.

“நான் பண்ணது தப்புதான்……ஜோனத் என்ன ஏமாத்திட்டாங்கன்ற கோபத்துல செய்துட்டேன்….இனி நான் அப்டி எதையும் செய்ய மாட்டேன்…ப்ளீஸ் என்னை போலீஸ்ட்ட ஹேண்ட் ஓவர் செய்யாதீங்க….யூ வான்ட் மீ டு பி பனிஷ்ட்….?”

அடுத்த வெட்டு இப்பொழுது சற்று தள்ளி அதே கையில் இறக்கினாள்….. ஆனால் இம்முறை அரண் அவளை தடுத்துப் பிடித்ததோடு மட்டுமல்லாமல் தட்டிவிட்டதில் கத்தி தூரப் போய் தள்ளி விழுந்தது.

அவனுக்கு இணையான பலத்தில் அவனிடமிருந்து விடுபட திமிறிக் கொண்டிருந்தாள் அவள்.

“லியா…கூல்…ஒன்னுமே இல்ல…ப்ளீஸ் புரிஞ்சுக்கோ…அட்டெம்ட் ஆஃப் ரேப்னா போலீஸ்ட்ட போகனும்னு நினச்சேன்…நீ வேண்டாம்னு சொன்னா வேண்டாம்…. “

அவள் மீதிருந்த தன் பிடியை விட்டான் அவன்.

நின்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் பார்வையில் உண்மை இருக்கிறதா? இதை நம்பலாமா?

உண்மை இருப்பதாகத் தான் தெரிகிறது.

“இல்ல வேண்டாம்…போலீஸ்ட்டலாம் போக வேண்டாம்…” தெம்பிழந்து போய் முனங்கினாள்.

“ஓகே அஸ் யுவர் விஷ்…..உட்கார் முதல்ல…கைல இருந்து எவ்ளவு ப்ளட் போகுது பாரு….பர்ஸ்ட் எய்ட் செய்யட்டுமா….?”

அவள் எதற்கு எப்படி ரியாக்ட் செய்வாள் என்றே இப்பொழுது இவனுக்கு புரியவில்லையே. எல்லாத்திற்கும் அனுமதி கெட்டுக் கொள்வது நலம்.

இதற்குள் அந்த டாக்டர், மோனிகா அங்கு வந்து சேர்ந்தார்.

அதன்பின்பு அவளது வைத்திய பொறுப்பை அவர் பார்த்துக் கொண்டார். அவர் கிளம்பிச் செல்லவும் கேட்டான்.

“ரிப்போர்ட்டரா இருந்துட்டு போலீஸ்னா அப்டி என்ன பயம்?”

“அது அப்டித்தான்….”

“நீ உன்னப் பத்தி சொன்னாத்தானே லியா எங்களாலயும் உனக்கு எதாவது ஹெல்ப் செய்ய முடியும்….?”

“உங்கட்ட இருந்து எனக்கு எந்த ஹெல்ப்பும் தேவயில்ல”

“அது எப்டி..? ப்ரபுவோட ஃபியான்சி நீ….அப்டின்னா நீ என் ஃபேமிலி மெம்பர் …என் வீட்ல வேற இருக்ற….நான் எப்டி அப்டி உன்னை கண்டுக்காம இருக்க முடியும்?”

அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

“உங்க பெர்சனல் விஷயம் வெளிய போய்டக் கூடாதுன்னு நீங்க எவ்ளவு எஃபெர்ட் எடுக்கீங்கா…எனக்கு மட்டும் அந்த ஃபீலிங் இருக்காதா?”

“அது வெளியாட்களுக்கு….மீடியாவுக்கு…..பட் அப்பாட்டயோ சுகாட்டயோ ப்ர்புட்டயோ நான் எதையும் மறைக்கிறதே இல்லையே…..இது ஃபேமிலி…..ப்ரபு ஃபியான்சின்னா நீ எனக்கு தங்கை…”

நான் உங்க ப்ரபுவோட ஃபியான்சியே கிடையாதே. உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள் அவனை பதிலின்றிப் பார்த்தாள்.

“சுகவியும் கோபம் வந்தா கொஞ்சம் எக்‌ஸ்ட்றீமாதான் ரியாக்ட் செய்வா…பட் அது முன்னால..அப்ப அவ ஒரு டீனேஜர்….எங்க மேரேஜுக்குப் பிறகு அவளுக்கு எல்லா கன்ஃப்யூஷனும் போய்..அவர் லைஃப் வாஸ் லைக் ஹெவன்… இப்பவும் இந்த ஆக்‌சிடெண்டுக்குப் பிறகும் லவ் ஹோல்ட்ஸ் அஸ் டுகதெர்…..”

அவன் சொல்லத் தொடங்க அவனை இமைக்காது பார்த்திருந்தாள்.

என்னைப் பத்தி எதுவும் சொல்ல மாட்டேன்….பட் உன்னைப் பத்தி நீ எல்லாம் சொல்லுனு சொன்னா அவ எப்டி ஓபன் அப் செய்வாள் என்ற கேள்வி அரண் மனதில்.

நட்பாய் உறவாய் முதலில் நான் என்னைப் பத்தி சொல்கிறேன்….அப்பொழுது அவள் இவனை நம்பி மனம் திறக்க வழி பிறக்க கூடும். குறைந்த பட்சம் இங்கு யாரும் அவள் எதிரி இல்லை என்ற நம்பிக்கையாவது வரும் என்பது அவனது எண்ணம்.

ஆனால் சங்கல்யாவுக்கோ அரணைப் பார்க்க இன்னும் ப்ரமிப்பாய் இருந்தது. இப்பொழுதுதான் அவன் டைரியைக் கொண்டு போய் விலை பேசிவிட்டு வந்தவளை உட்கார வைத்து தன் சொந்த கதை முழுவதையும் சொல்ல தொடங்கினால்???

உன்னை ஒருவன் ஒரு மைல் தூரம் தன்னுடன் வர பலவந்தம் பண்ணினால் அவனுடன் இரண்டு மைல் தூரம் போ என்பது இதுதானா?

அப்பொழுது அரண் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.

10த் படித்துக் கொண்டிருந்தான் அவன். ப்ரபுதான் அவனது பெஸ்ட் ஃப்ரெண்ட். காலையில் 7.30க்கு க்ரவ்ண்டில் இருப்பது இவன் வழக்கம். ப்ரபுவும் அதே நேரம் அங்கு வந்து சேர்ந்துவிடுவான். ஆனால் இன்று ஆளைக் காணோம்.

இவர்களது ஸ்கூல் கிரிகெட் அகடமி ப்ரசித்துப் பெற்றது. அதில் பயிற்சியில் ஈடுபடுவது இவர்களது வழக்கம். அப்பொழுதே இருவரும் இந்திய ஜூனியர் க்ரிக்கெட் டீமில் இருந்தனர்.

அடுத்த பக்கம்