நனைகின்றது நதியின் கரை 8 (5)

இதற்குள் மொபைலை அரணிடம் நீட்டி இருந்தாள் அவள். அழைப்பவர் பெயரைப் பார்த்துவிட்டு “அவன் தான் .. உன்ட்ட பேசத்தான் கூப்டுவான்” என்ற படி காரை விட்டு இறங்கிவிட்டான் அரண்.

“ ஜோ..ஜோனத்”

“ என்ன பேசிட்டு இருக்றப்ப காலை டிஸ்கனெக்ட் செய்துட்ட…?”

“அது….நீங்க பேசலைனதும்…”

“சரி என்ன விஷயம்னு இப்ப சொல்லு….”

“இல்ல நாளைக்கே சொல்றேன்…”

“ஆர் யூ ஷ்யூர்?”

“ஷ்யூர்…”

“நைட் அம்மாவ உன் கூட வந்து இருக்க சொல்லட்டுமா?”

“இல்ல வேண்டாம்….”

“உன் ஃப்ரெண்ட்ஸ் யாரையவது பார்க்கனுமா உனக்கு…? அரணை ஹெல்ப் பண்ண சொல்றேன்….”

இவளை பீச்சுக்கு கூட்டி வரும் படி ஜோனத் அரணிடம் சொன்னது ஞாபகம் வருகிறது.

அதற்காகத்தானே அரண் இவளை கூட்டி வந்தான். எந்த சந்தேகமும் இன்றி.

“உங்களுக்கு அரண் அண்ணா மாதிரி ஃப்ரெண்ட்ஸ்லாம் எனக்கு கிடையாது”

‘கன்ஃபார்மா இவ அரண் விஷயத்துல எதையோ சொதப்பிருக்கா’ அவன் மனதுக்குப் புரிகிறது.

“சரி….எதையும் போட்டு ரொம்ப குழப்பிக்காத நாளைக்குப் பேசுறேன்”

“தேங்க்ஸ்”

“டேக் கேர்…பை.”

“ யூ டூ…பை”

ரண் மீண்டுமாய் உள்ளே வந்து காரை கிளப்பும் வரையும் மட்டுமல்ல அடுத்து அவன் அதை தன் வீட்டில் சென்று நிறுத்தும் வரையுமே கற்சிலை போலத்தான் இருந்தாள் அவள் அசைவற்று.

அடுத்து என்ன என நிச்சயமாய் அவளுக்குப் புரியவில்லை.

“நீ போய் ட்ரெஸ் மாத்திக்கோ லியா….நான் உன்னைப் பார்க்க டாக்டர்க்கு போன் செய்றேன்….வருவாங்க….” அடுத்த நடவடிக்கையாக அரண் சொல்ல

அசந்து போனாள் சங்கல்யா. இவள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறாள்? இவன் என்ன பேசிக் கொண்டிருக்கிறான் ?

அந்த மிருகங்கள் தள்ளி இவள் கீழே விழுந்த போது கை கல்லில் இடிபட்டு  சிறு காயம். அதை ஒரு முறைப் பார்த்துக் கொண்டாள்.

ஒருவேளை நான் அந்த டைரிய எதுக்கு எடுத்துட்டுப் போனேன்னு இவனுக்குப் புரியலையோ?

“அரண் சார்”

அவன் அவளை நெற்றி சுருக்கி தீவிரமாய்ப் பார்த்தான்.

அந்த டைரிய பீபுள் சேனலுக்கு கொடுக்க கொண்டு போனேன்…”

“நீ இது மாதிரி எதுக்கோ தான் டைரிய எடுத்துட்டுப் போயிருப்பன்னு எனக்கும் தெரியும்…முதல்ல போய் ட்ரெஃஸ் மாத்திட்டு வா டாக்டரைப் பார்க்கலாம்.”

நம்பமுடியா பாவத்துடன் நின்றாள்.

“லியா போய் ட்ரெஸ் மாத்திட்டுவான்னு சொன்னேன்…” அவன் குரலில் அழுத்தம் வந்திருந்தது.

அவனை எதிர்க்கும் எண்ணம் எதுவுமில்லை என்பதால் அவளது அறைக்குப் போய்  உடை மாற்றி வந்தாள்.

“உட்கார்”

அரணுக்கு எதிரில் அமர்ந்தாள்.

அதற்குள் அங்கு ஜீஸ்  மற்றும் பழங்கள் கொண்டு வந்து வைக்கப் பட்டிருந்தது.

“குடி லியாமா”

குடித்தாள்.

அடுத்து ஒரே மௌனம்.

“ப்ரபு மேல என்ன கோபம்?…ஏன் இப்டி செய்த?”

“என்னால காரணத்தை அவங்கட்ட மட்டும் தான் சொல்ல முடியும்”

“ஓ…குட்”

“…..”

அந்த நேரம் அரணின் மொபைல் சிணுங்க அதை எடுத்தவன்

“யெஸ் டாட்……டாக்டர் மோனிகா மேம் வர்றாங்க…அவங்க போன பிறகு இந்த போலீஃஸ் கம்ப்ளெய்ன்ட் விஷயத்த பார்த்துகிடலாம்னு நினைக்கிறேன்….ம்…ப்ரபுட்டயும் சொல்லனும்……..”

அவன் பேசிக் கொண்டிருக்க சட்டென பழம் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து  ஓங்கினாள் சங்கல்யா.

இதை சற்றும் எதிர் பார்த்திருக்கவில்லை அரண்.

அடுத்த பக்கம்