நனைகின்றது நதியின் கரை 8 (2)

“ஏன்டா ஒன் மந்த் பார்க்க முடியாது…போர்ட் ஆக முன்னால லியாக்கு கால் பண்ணி சந்தோஷாமா பை சொல்லிட்டு கிளம்ப மாட்டியா? நான்லாம் கால் பண்ணாம போர்ட் ஆகிட்டனோ சுகா கொன்னுடுவா…” அருகிலிருந்த அரண் சொல்ல, ப்ரபாத்திற்கும் நிச்சயம் கேட்டிருக்கும்.

இவளுக்கும் ஜோனத்தை சந்தோஷமாய் வழி அனுப்பு என அரண் மறைமுகமாக சொல்வதும் புரிகின்றதுதான்.

அதே நேரம் அரணும் ஜோனத்திடம் பேச முயல்வதை உணர்ந்து ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

“பொண்ண விட்டுட்டு இது மாதிரி ட்ரிப் போய் எனக்கென்ன அனுபவமா? நெக்ஸ்‌ட் டைம்ல இருந்து கரெக்ட்டா பண்ணிறேன்டா…” என அரணுக்கு பதில் சொன்ன ப்ரபாத்

“சிக்‌ஸர் கேர்ள் ஸ்பீக்கரை ஆஃப் பண்ணு உன்ட்ட கொஞ்சம் பேசனும் “ என்றான்.

அரண் காதில் இது விழும் என அவனுக்குத் தெரியும் தானே. இவளுக்குத் தான் ஒரு மாதிரியாய் இருந்தது. ஆனால் ஆண்கள் இருவருமே அதை சட்டை செய்ததாக தெரியவில்லை.

ஜோனத் சொன்னது போல் ஸ்பீக்கரை ஆஃப் செய்தாள் சங்கல்யா.

“ என்ன விஷயம்னாலும் நீ என்ட்ட பேசலாம்……இப்ப நான் போர்டாகிட்டா லண்டன் ரீச் ஆக 9 அவர்ஸ் ஆகும்……அல்மோஸ்ட் 10 அவர்ஸ் நான் ரீச்ல இருக்க மாட்டேன்…..இப்ப எதாவது நீ சொல்ல ஆரம்பிச்சு முழுசா சொல்லி முடிக்காம நான் அது என்னதுன்னு தெரியாம 10 அவர்ஸ் டென்ஷன்ல இருக்க வேண்டி இருக்குமேன்னுதான் அரண் சந்தோஷமா பை சொல்லுன்னு சொல்றது. அவன் என்ட்ட உன்னை விஷயத்தை மறைக்க சொல்றான்னோ பொய் சொல்லுன்னு சொல்றான்னோ புரிஞ்சுக்காத….என்ன விஷயம்னு கடகடன்னு சொல்லு…இன்னும் 2 மினிட்ஸ் இருக்குது…என்னால முடிஞ்சத செய்து தர்றேன்….”

அரணுக்கும் ஜோனத்துக்கும் இடையில் உள்ள அந்த புரிதல், அந்த அன்பு ஒருவரை ஒருவர் விட்டுக் கொடாத்தன்னமை ஒரு பக்கம் இவளைப் பந்தாடுகிறது என்றால்….அவர்கள் இருவரும் இவள் மீது காண்பிக்கும் அக்கறை அடுத்த புறம் தாக்க, ஏன் என்றே அவளுக்கு முழுதாய் புரியாமல், மனதிற்கு முக்காடிடும் எண்ணமும் வராமல், இருந்த மன அழுத்தத்தில்

“ஐ மிஸ் யூ வெரி பேட்லி…. உங்கட்ட பேசனும் போல தோணிச்சு” என அந்த நொடி மனதிலிருந்ததை சொல்லி வைத்தாள்.

அவன் புறம் சில நொடி மௌனம்.

அரணுக்கும் இவள் பேசுவது கேட்டிருக்கும். எப்படிப்பட்ட தில்லுமுல்லு செய்துவிட்டு என்ன கதை சொல்கிறாள் இவள் என அவன் நினைத்துக் கொண்டிருப்பானாயிருக்கும், ஜோனத்தும் என்ன ஒரு கேவலமான பொண்ணு இவன்னு தான் நினைப்பான்…அதுவும் நாளைக்கு இன்று நடந்த விஷயம் தெரிய வரும் போது அப்படித்தான் கட்டாயம் நினைப்பான்….ஆனால் இப்பொழுது இருக்கிற வேதனையில் உண்மையில் அவளுக்கு ஜோனத்திடம் கொட்டித் தீர்க்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது…..அவள் வரையில் இந்த வார்த்தைகள் 100% உண்மை.

ப்ராபாத்தைப் பொறுத்தவரை இது பௌன்ஸரல்லவா…..திக்குமுக்காடிப் போயிருந்தான் அவன்.

அவனிடமிருந்து உடனடியாக பதில் வரவிலை எனவும் இவள் மனம் இங்கு இன்னுமாய் குற்றம் சுமத்த

“பை ஜோனத்….சேஃப் ஜர்னி….நாளைக்கு என்ட்ட ஒன் டைம்மாவது பேசுங்க…” கெஞ்சலாய் சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டாள்.

அரண் வழியாய் விஷயம் தெரியவும் இவளிடம் பேசாதே போய்விடுவான் ஜோனத் என புதிய பயம் வருகிறது அவளுக்கு.

தற்குள் ப்ரபாத் சுதாரித்துவிட்டான்.

நேற்று நடந்த எங்கேஜ்மென்டே அவன் எதிர் பாராத திருப்பம் தான். அவன் நிச்சயமாக இப்படி ஒரு திட்டம் வைத்திருக்கவில்லை.

அதன் ஆரம்பம் அவனது அம்மாவின் அதிரடி திட்டம் + பிடிவாதம்.  லியாவிற்கு அவளே அறியாத  ஒரு ஈர்ப்பும், நம்பிக்கையும் இவன் மீது வந்திருக்கிறது என்று அவனுக்கு தெரியும்தான். இருந்தாலும் இது டூ இயர்லி. இவன் அம்மா கேட்டதற்கு அவள் நிச்சயத்திற்கு சம்மதித்து இப்படி ஒரு நிலையை கொண்டு வருவாள் என்றெல்லாம் அவன் கற்பனை செய்திருக்கவில்லை.

ஆக இவனிடம் இவன் அம்மா “நான் அவட்ட நேத்து நைட்டே பேசிட்டேன், அவல்லாம் சரின்னு தான் சொல்றா, நீதான் அவள காரணம் காமிச்சு கத சொல்ற….என் மேல உண்மையிலே நம்பிக்கையும் அக்கறையும் இருந்தா இத நீ செய்வ….நான் அரேஞ்ச்மென்ட ஆரம்பிக்கப் போறேன்….”

என்று சொன்னதும் அவளைக் காண கிளம்பி வந்தான் அத்தனை டைட் ஷெட்யூலிலும்.

அவன் மனதில் அவள் மன நிலை பொறுத்து இரு வித திட்டங்கள்.

அவன் மறுநாள் இரவு இங்லண்ட் கிளம்ப வேண்டி இருந்தது. ஒரு மாதம் அவளை தனியாக  விட்டுச் செல்ல வேண்டும்.

எதாவது மிரட்டல்கள் அவளுக்கு இருக்கும் என் ஒரு யூகம் இருந்திருந்தாலும், அனவரதன் வல்லராஜனின் மிரட்டல்களை பற்றி முந்திய நாள் அவள் சொல்லித்தான் முழுதாக அவனுக்குத் தெரியும். வல்லராஜனைப் பற்றி ப்ரச்சனை இல்லை.

அவன் வாயை அடைக்க அனவரதன் செய்த மிரட்டலே போதும், இனி வாயைத் திறக்க மாட்டான். ஆனால் அனவரதன் விஷயத்தில் இவன் அவசரப் பட விரும்பவில்லை.

ஏதோ ஒரு வகையில் சங்கல்யாவின் அரண் பற்றிய ரிப்போர்ட் நடுநிலைமையாக இருக்கும் என அவர் நம்புகிறார். அதன் வழியாகவாவது அவர் தன் மகளுடன் சேரட்டுமே என்பது இவன் எண்ணம்.

சுகா தன் பெற்றோருக்காய் எத்தனை தவிக்கிறாள் என்பதும், அவள் தந்தையும் மகளுக்காய் எத்தனை ஏங்குகிறார் என்பதும் இவன் அறியாததா? இதில் அரணின் வேதனை அவன் காணாததா?

ஆனால் இப்பொழுது தன் தவறை லியா உணர்ந்துவிட்டப் பின்பும் அனவரதன் பற்றிய ஒரு அழுத்தத்தில், ஒருவித பயத்தில் அவளை விட்டுச் செல்லவும் அவன் விரும்பவில்லை.

ஆக அனவாரதனிடம் சற்றுப் பேசிப் பார்த்தான்.

அடுத்த பக்கம்