நனைகின்றது நதியின் கரை 7 (7)

பீச்.

“கார்லயே இருந்தா பீச் வந்த மாதிரியே ஃபீல் இருக்காது…ஒரு வாக் வாட்டர் வரை போய்ட்டு வர்றேண்ணா…”

அவன் சேர்ந்து வர மாட்டான் என நிச்சயமாக சங்கல்யாவுக்குத் தெரியும். தேவை இல்லாமல் மீடியா கண்ணில் விழுந்து வைக்க கூடாது என்று தானே அவளை ஏர்போர்ட்டில் காரை விட்டு இறங்கவே விடவில்லை.

ஆக நம்பிக்கையோடே கேட்டாள்.  ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆள் நடமாட்டம்.

“ஓகே…மொபைல் கைல இருக்குதுல்ல…”

அவ்வளவுதான் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் அவள். தூரத்தில் அலை அருகில் இருட்டில் அரைகுறையாய் தெரிந்த அந்த பெரிய படகை தான் அடையாளமாக சொன்னாள் அந்த ரிப்போர்ட்டருக்கு. பை டெக்‌ஸ்ட்.

அதன் அருகில் அடைந்து தான் சல்வாருக்குள் வைத்திருந்த அந்த பார்சலை எடுத்தாள். அரண் காரைவிட்டு  தூரத்தில் இருக்கிறாள் அவள். இந்த தூரத்தில் அங்கு நிற்பது அவள் என அரண் புரிந்து கொள்ள முடியுமே தவிர, அவள் செயல்களை அவனால் பார்க்க முடியாது.

அந்த படகின் அருகில் அந்த பார்சலை வைக்கவென மணலில் முழந்தாளிட்டாள். அவ்வளவுதான்…!!!!!!

யார் யாரோ அவள் மேல் வந்து விழுந்தார்கள். எத்தனைப் பேர்??? இருந்த இருட்டில் அந்த படகிற்குள் ஆட்கள் இருந்து போதை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றே அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

தூரத்தில் இருப்பவர்களுக்கு இந்த இருட்டில் இவள் கத்தினால் ஒழிய இங்கு இவள் மாட்டி இருக்கிறாள் என்பதே தெரியப் போவதில்லை.

தரையில் கிடந்தாள் இவள். முதலில் அந்த மிருகங்கள் அடைத்தது அவள் வாயைத்தான். ஆக கத்தவும் வழி இல்லை. பயத்தில் மிரண்டு போனாள் சங்கல்யா.

இவளைப் பிடித்திருந்த அந்த மனித மிருகங்களின்  நோக்கம் புரிய போராடத் துவங்கினாள் அவள். கையில் இருக்கும் மொபைலை எப்படி கையாண்டால் அரணை அழைக்க முடியும்.???? அதோடு அரண் ஒருவன்…. இவர்கள் மூவர்…

இப்பொழுது இவள் கையிலிருந்த மொபைலை பிடுங்கி தூரத்தில் எறிந்தான் மற்றவன்.

அதில் ஒருவன் அருகில் இருந்த கல்லை எடுத்து அவள் தலையை குறிப் பார்த்து ஓங்க….தன் முடிவு என்னவென்று அறிந்து போனாள் அவள்.

ஆனால் அந்த கல்காரனின் நோக்கம் மட்டுமல்ல மற்ற நாய்களின் நோக்கம் கூட நிறைவேறவில்லை.

அரண்!!!!

இவளை அனுப்பிவிட்டு இவளுக்கு சற்று இடைவெளியிட்டு அவன் இறங்கி வந்திருப்பான் என சங்கல்யாவே எதிர்பார்த்திருக்கவில்லை.. இவள் அந்த இருட்டில் அந்த பார்சலை மட்டுமாக படகு மறைவில் வைத்துவிட்டு  நிமிர்ந்திருந்தால் அவனுக்கு வித்யாசமாக தோன்றி இருக்காதுதான்.

ஆனால் விழுந்தவள் எழும்பவே இல்லை எனும் போது…??? அவன் அவளைத் தேடி வந்திருந்தான் படு வேகமாக.

போதையில் இருந்த அந்த கும்பலுக்கு சங்கல்யா தனியாக வந்து நின்றது மட்டுமே கவனத்தில் இருந்ததால் இதனை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

“டேய் விடுங்கடா அவள….” அவன் கர்ஜனை கேட்கவுமே  அத்தனை பேரும் தலைதெறிக்க விழுந்தடித்து ஓடினர்.

அவர்களை துரத்துவதை விட அவளுக்கு உதவுவதிலும், பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வருவதிலும் கவனம் செலுத்திய அரண், அவளை அழைத்துக் கொண்டு திரும்போது குனிந்து அங்கு கிடந்த தனது  டைரி அடங்கிய பார்சலையும் இயல்பாய் எடுத்துக் கொண்டான்.

இனி??????

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 8

Leave a Reply