அடுத்து கிளம்பித் தாயாராகிறேன் என்ற பேரில் எளிதாய் அரண் அறையிலிருந்து டைரி, ஃபோட்டோஸ் என சுருட்ட முடிந்ததை சுருட்டினாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஏர்போர்ட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் சங்கல்யா அரணுடன்.
ஏர்போர்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்திய அரண், காரில் இருந்து இவளை இறங்க அனுமதிக்கவே இல்லை.
“வேண்டாம் லியா, எதுக்கு தேவை இல்லாம…இப்ப அவனே இங்க வருவான்…” ஜோனத்திற்கு அவன் மொபைலில் அழைத்தான்.
“ம் வந்துட்டோம்….” ஏர் போர்ட் பார்க்கிங்கில் இவர்கள் கார் எங்கு நிற்கிறது என அரண் ஜோனத்திற்கு அடையாளம் சொல்ல சொல்ல அதைக் தன் மொபைலில் டெக்ஸ்ட் செய்து அந்த பிபூள் ரிப்போர்டருக்கு அனுப்பினாள் இவள்.
அருகிலிருக்கும் காருக்கு அடியில் இவள் கொண்டு வந்தவைகளை வைத்துவிட்டுப் போய் விடுவதாக குறிப்பிட்டாள்.
அரண் கவனம் தவறிய நேரம் அடுத்த காருக்கு அடியில் இந்த பார்சலை வைத்தால் போதும் வேலை முடிந்துவிடும் தானே…
இப்பொழுது ஜோனத் இவர்கள் காரின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறான்.
அரண் சில நிமிடங்கள் ஜோனத்திடம் பேசிவிட்டு கீழே இறங்கிக் கொள்கிறான்.
‘ஐயோ…இப்ப இவன்ட்ட என்ன சொல்லனும்? எதாவது சொல்லனுமே…? இல்லனா சந்தேகம் வந்துடுமே…இவ இங்க எதுக்கு வந்தான்னு…’
அரணுடன் வரும் போதும் காரை டிரைவ் செய்தது அரண், இவளோ பின் சீட்டில் இருந்தாள். இப்போது ஜோனத்தும் முன் இருக்கையில் இருக்க இவள் பின் சீட்டில்.
சங்கல்யாவின் பிடிவாதம் பற்றி அறிந்தவன் அல்லவா ப்ரபாத், அவள் கடைசி வரை கதவை திறந்தே விடவில்லையே அன்று ட்ரெய்னில்….இன்று எப்படி இவனைத் தேடி வந்துவிட்டாள்?
‘ம்..அவளுக்கு இப்ப இருக்க இந்த எங்கேஜ்மென்ட் பத்தின கோபத்துல அவ எங்க இவனத் தேடி வர?…வீட்டுக்குள்ள அடைஞ்சுகிடக்க பிடிக்காம வெளிய வந்தாலும் வந்துருப்பா..’
“உனக்கு பீச் பிடிக்கும்னு சொன்னல்ல…போற வழியில அரண பீச் கூட்டிட்டுப் போய்ட்டு போக சொல்லட்டுமா…? கொஞ்சம் ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவ…” எடுத்தவுடன் இப்படித்தான் கேட்டான் ப்ரபாத்.
‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டுனு சொல்லுவாங்களே…அது இதுதான்… என்னமா சீன் போடுறான்…’ அதை இப்படிக் காரணப் படுத்தினாள் சங்கல்யா.
இப்பொழுது ப்ரபாத் முகத்தில் சிறு புன்னகை. “என்னை இப்டி பார்துகிட்டே இருக்கவா இவ்ளவு தூரம் வந்த?”
அதுவரை அவனையே பார்த்துக் கொண்டிருப்பது உறைக்க பார்வையை தாழ்த்திக் கொண்டாள் பெண்.
“எது எப்டியோ சிக்ஸர், நீ வந்ததால எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா ஃபீல் ஆகுது….” சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“ தேங்க்ஸ்…” அதில் நிச்சயம் நிம்மதி நிரம்பி இருந்தது. இவளுக்காக ஃபீல் பண்ணிருப்பானோ?
ஒரு கணம் அவளது காட்டிக் கொடுக்கும் திட்டத்தை கை விட்டுவிடலாமா எனக் கூட தோன்றிவிட்டது அவளுக்கு. இதுக்கெல்லாம் ஏமாந்தா வாழ்நாள் முழுக்க இவன்ட்ட ஏமாந்துகிட்டே தான் இருக்கனும். கலைந்த மனதை மீண்டுமாய் கட்டிக் கொண்டாள்.
“சரி நான் கிளம்புறேன்…டேக் கேர் ஆஃப் யுவர் செல்ஃப்…”
“……..”
“பை “
“……….”
“பை கூட சொல்ல மாட்டியா நீ….? இன்டியாக்காக தான விளையாடப் போறேன்…?”
அவன் கார் கதவை திறந்து கொண்டு இறங்கப் போக அவளையும் மீறி வாய் முனுமுனுக்கிறது “ஆல் த பெஸ்ட்”
அவனிடம் தான் தோற்கத் தொடங்குவதை அவள் முதன் முதலாக உணந்த தருணம் இது தான். அவளையும் மீறி அவன் மன சந்தோஷத்திற்காக மட்டுமே சொல்லப் பட்ட வார்த்தைகள்.
மனதிற்குள் கோபமும் கூடவே பயமும் சடுதியில் எழும்பி சந்திர மண்டலம் அளவு உயர்கிறது அவளுள்.
திரும்பிப் பார்த்து ஒரு சிறு புன்னகை புரிந்தவன் அப்படியே இறங்கிப் போயிருக்கலாம்.
“தேங்க்ஸ்டா…திஸ் வில் டூ “ என்றான். எல்லாம் ஊருக்கு போற பிரிவாற்றாமை தான். அதோட அவனைத் தேடி இவ்ளவு தூரம் வந்துட்டாளே…
‘டா….வா ? எப்படிப் பட்ட உரிமையை இவள் இவனுக்கு கொடுக்கிறாள்? நிச்சயமாய் இவனை ஜெயித்தாக வேண்டும். இவள் புறம் அவன் திரும்பாமல் செய்தே ஆக வேண்டும். சங்கல்யாவோ மனதிற்குள் பழி வாங்க உறுதி பூண்கிறாள்.
ஜோனத் இறங்கவும் அரண் காருக்குள் ஏறிவிட்டான். அதோடு காரை வேகமாக கிளப்பியும் விட்டான். ஆக இப்பொழுது இவள் அந்த பீபுள் ரிப்போர்டரிடம் சொல்லிய படி பக்கத்துக்கு காருக்கு அடியில் எதையும் பதுக்க முடியவில்லை.
இப்பொழுது இவள் என்ன செய்ய?
அதற்குள் அரண் எண்ணில் அழைப்பு.
“என்னடா…? விட்டுட்டுப் போற மாதிரி ப்ளான் இல்லையோ?”
“……..”
“அதெல்லாம் பார்த்துகிடலாம்”
“………”
“பீச்சா…ஓகே டன்…”
அரணின் உரையாடலைக் கேட்டிருந்த சங்கல்யா, ஆக இப்போ பீச்சுக்குதான் அந்த ரிப்போர்ட்டரை வரச் சொல்லனும்..சடுதியில் முடிவெடுத்து, தன் அடுத்த திட்டத்தை அவசரமாக மீண்டுமாக அந்த பீபுள் நபருக்கு டெக்ஸ்ட் செய்தாள்.