நனைகின்றது நதியின் கரை 7 (3)

இவள் அசைவில் இப்போது அவன் விழித்துவிட்டான் போலும். “சுகவி”  தயங்கி அழைக்கிறான் அவன். பின்னே முந்திய தடவை அவன் தலையை உடைக்க ப்ளவர் வேஸை எறிந்துவிட்டு இப்பொழுது இப்படி அவனயே பில்லோவாக்கினா?

“ம்”

“தூங்கி விழிச்சாச்சா? பசிச்சா சாப்பாடு கொடுக்க சொன்னாங்க….”

“இப்பவா…? ம்ஹூம்….நான் இன்னும் விழிக்கலைனு நினைச்சுக்கோங்க”

மனதின் காதல் உணர்வுகளே அவள் வார்த்தைகளையும் ஆட்கொள்கின்றன.

“உண்மையிலேயே அப்டித்தான் தோணுதுங்க மேடம்…”

“அது… சில நேரம்….உங்கள ரொம்ப குழப்புறேன்ல…? ஒரு டைம் கோபம்…ஒரு டைம்….? சாரி…” அவள் குரல் இறங்க

“ இந்த சிட்சுவேஷனை உன்னவிட பெட்டரா யாரும் ஹேன்டில் செய்ய முடியாது விதுமா…எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்லை…சீக்கிரமே எல்லாம் சரி ஆகிடும்…” அவன் வார்த்தைகளில் ஆறுதல் குடி வந்திருந்தது.

“உங்கட்ட ஒன்னு சொன்னா எப்டி எடுத்துப்பீங்கன்னு தெரியலை…”

“சொல்லிப் பாரேன்…தெரிஞ்சுடப் போகுது”

“ம்…உங்க பக்கத்துல வந்தாலே கெட்ட கெட்ட விஷயமா ஞாபகம் வருது…பட் தூங்குறப்ப வேற மாதிரி ஆகிடுது…” கனவுகளை தவிர்த்து, ஒவ்வொன்றாக அவளுக்கு ஞாபகம் வந்த விஷயங்களை அவனிடம் சொன்னாள் சுகவிதா.

எல்லாத்தையும் பொறுமையாக கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான் அரண்.

“சாரிடாம…உனக்கு அந்த விஷயம்லாம் இன்னும்  இவ்ளவு தூரம் ஹர்டிங்கா ஞாபகம் இருக்குது போல…வெரி சாரிமா…இதை நாம உன்னோட டாக்டர்ஸ்ட்ட டிஸ்கஸ் செய்வோம்….என்ன செய்யலாம்னு அப்போ புரியும்.. ”

அவன் எதையும் மறுக்காததை அவள் மனம் குறித்துக் கொள்கிறது. ஆக அவளுக்கு நினைவு திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

அதோடு அரண் அதற்கு எந்த விளக்கமோ, தன் பக்க நியாயமோ என எதையும் சொல்லவில்லை.  நடந்த நிகழ்வுகளுக்கு வேறு வண்ணம் பூசவும் அவன் முயலவில்லை என்பதும் சேர்த்தே புரிகிறது அவளுக்கு.

ஆனால் அதே நேரம் அவனிடம் எந்த பதற்றமும் விலக்கமும் கூட இல்லை. ஆக அவனிடம் இதற்கெல்லாம் இவள் கன்வின்ஸ் ஆகும்படி பதில்கள் இருக்கின்றனதான். அதை அவன் சொல்லாமல் இவளுக்கே ஞாபகம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறான். அது தான் இவள் உடல்நிலைக்கு நல்லது என்பதற்காக…

அதன் பின் அவள் எதுவும் பேசவில்லை. அவன் மார்பிலிருந்து துளியும் அசையவும் இல்லை. சென்றன சில பொழுது மௌனமாய். “ஏன் சைலண்டாகிட்டீங்க ? எதாவது பேசுங்களேன்…”

“உன் வலிய நான் வாங்கிக்க முடிஞ்சா எவ்ளவு நல்லா இருக்கும்னு தோணுது விது….” அவன் இப்பொழுதுதான் இதைச் சொல்கிறான். ஆனால் முன்பும் அவன் இதைச் சொல்லியது அவள் காதுகளில் இப்பொழுதும் கேட்பது போல் ஒரு ப்ரமை….மெல்ல விரிகிறது மனக் கண்ணில் காட்சி….

ஆப்பரேஷன் தியேட்டரா இது? எலோரும் ப்ளூ கலர் நீள அங்கியில்…. இவள் முகம் பார்த்து குனிந்திருக்கும் அரைகுறையாய் மறைக்கப் பட்டிருக்கும் அந்த முகம் அரண் தான்… சர்ஜிகல் மாஸ்க் அணிந்திருக்கிறான். இவளுக்கு கடும் வலி.

அப்பொழுதும் அவன் இதைத்தான் சொன்னான். “உன் வலிய நான் வாங்கிக்க முடிஞ்சா எவ்ளவு நல்லா இருக்கும்…?” துடித்துக் கொண்டிருந்த இவள் கையைப் பற்றியபடி சொல்லிக் கொண்டிருந்தான்….

அவன் முகமே காட்டியது அவன் அனுபவிக்கும் வேதனை இவளது வேதனைக்கு கொஞ்சமும் குறைவானது இல்லை என….தன் வேதனையை வெளிக் காண்பிக்க கூடாதோ என இவளுக்கு தோன்றுகிறது…

“இல்ல ஜீவா….இன்னும் கொஞ்ச நேரம்தான்…ஐ’ல் பீ ஆல்ரைட்…” சொல்லிய வார்த்தைகள் அவனுக்காக மட்டுமில்லை அவளுக்கும் தான் அது. இப்பொழுது கூட அதை உணர முடிவது போல் அத்தனை வலி… உதடைக் கடித்து கடித்து தன்னை அடக்கிப் பார்த்தவள் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் கதற , காதோடு இன்னொரு அழுகுரல். ஹயா…..

இப்பொழுதுதான் ஹயாவின் பிறப்பை முழுதாக உணர முடிகிறது சுகவியால்….நிகழ்வில் மனம் மகளைத் தேடுகிறது.

மெல்ல எழுந்து போய் தூங்கும் மகளை அள்ளிக் கொண்டு வந்து தன் மடியில் வைத்துக் கொள்கிறாள். தாய்மைப் ப்ராவகம்.

“என்னாச்சு விது? “ இவள் மன நினைவுகள் அரணுக்கு எப்படி புரியும்?

“லேபர் ரூம்ல என் கூட இருந்துட்டு அப்புறம் ஏன் ஜீவா என்ன எங்க அப்பா வீட்ல விட்டீங்க…?”

அவள் கேள்வியில், அந்த ஜீவாவென்ற அழைப்பில் உருகித்தான் போனான் அவள் கணவன்.

றுநாள் காலை எழும் போது சுகவிதாவிற்கு மனதில் பெரும் சந்தோஷம். அவளது ஜீவாவை ஓரளவு நியாபகம் வந்துவிட்டது. குழந்தையை முழுமையாக தெரிகின்றது. பால்பாக்கெட்டைக் கூட புரிகின்றது. இனி அவளுக்கென்ன.

நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற ப்ரபாத்தின் விழாவில் ஆனந்தமாகத்தான் அவள் கலந்து கொண்டாள்.

அடுத்த பக்கம்