நனைகின்றது நதியின் கரை 6 (7)

திரிலிருந்த லாஞ்சில் சிறு வெளிச்சத்தில் இருந்து எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள் அரணும் அவன் அப்பா திரியேகனும்.

சத்தமின்றி தன் அறைக்குள் நுழைந்து கொள்ள எண்ணினாள் இவள்.

அதற்குள் இவளை கவனித்துவிட்டான் அரண். “என்னமா இன்னும் தூங்கலையா?”

“இ..இல்ல…..குட் ஈவ்னிங் அங்கிள்” பக்கத்திலிருந்து பார்த்து புன்னகைத்த திரியேகனுக்கு ஒரு வணக்கம்.

சின்னதாய் புன்னகை அவரிடம். “இங்க வாம்மா….”

சென்றாள். அரண் அருகிலிருந்த இருக்கையை காண்பித்தான். அமர்ந்தாள்.

காஃபி சாப்டுறியாமா…?” திரியேகன்

அவர் கேட்டதும் சாப்பிடலாம் என தோன்றிவிட்டது.

“ஓகே அங்கிள்….”

ப்ளாஸ்கிலிருந்து காஃபி ஊற்றி நீட்டியது அரண்.

“தேங்க்ஸ் அண்ணா….”

 

பருக ஆரம்பித்தாள். “உங்க வீட்ல யாரு ஃபிட்ஸ் பேஷண்ட்….? அப்பவே கேட்கனும்னு நினச்சேன்….” அவன் சுகவிக்காக பரிதவித்துக் கொண்டிருந்த நேரத்தில் இவள் சொன்னதைக் கூட இவ்வளவாய் ஞாபகம் வைத்து கேட்கிறானே….

“என் பாட்டி தான்….பட் இப்ப அவங்க இல்லை….”

“ஓ….ஐம் சாரி…வீட்ல வேற யாரெல்லாம் உண்டு….? லியா அம்மா செல்லமோ…..ஹயாவுக்கு சேட்டை  பார்ட்னர் எங்கப்பான்ற மாதிரி உனக்கு கம்பெனி உங்க தாத்தாவா?” அரண் கேட்க திரியேகன் முகத்தில் பெருமிதம்.

“என்னையும் பாட்டியையும் தவிர வீட்ல யாரும் கிடையாதுண்ணா…நான் எனக்குத்தான் செல்லம்…சேட்டைலாம் தனியாத்தான் செய்துப்பேன்….நீங்க…?” இவள் சொல்ல திரியேகன் சிரித்தார்.

“அவனுக்கு சேட்டை பண்ணவும் சுகவிதான் வேணும் செல்லம் கொடுக்கவும் அவதான் வரனும்…..எதுலனாலும் பஞ்சாயத்துக்கு மட்டும் நான், தூதுவர் நம்ம ப்ரபு”

“ஹேய்….இதுலாம் ஃபவ்ல் ப்ளே….…திஸ் கொஸ்டியன் வாஸ் ஃபார் மீ…..நான்தான் ஆன்ஸ்வர் செய்யனும்…” தன் அப்பாவைப் பார்த்து சொன்ன அரண் இவளிடமாக

“எனக்கு அப்பாதான் எல்லாம்….அம்மா இல்லைல அதனால….அப்பா செல்லமும் கொடுப்பாங்க… பட் ஸ்டிரிக்டாவும் இருப்பாங்க….நான் சேட்டை செய்ததுன்னு சொன்னா அப்பா சொன்ன மாதிரி மெயினா சுகவி கூடதான்…அப்றம் ப்ரபு கூடயும் உண்டு…”

“நீங்களும் சுகவியும் சைல்ட் ஹூட் ஃப்ரெண்ட்ஸுன்னு ஜோனத் சொன்னாங்க….

சிரித்தான் அரண்.” அப்டி சொல்லிருக்க மாட்டானே….”

இதே கேள்விக்கு ஜோனத்தும் சிரித்தது ஞாபகம் வருகிறது இவளுக்கு.

“அவங்க ஆரம்பத்துல பயங்கரம்மா சண்டை போட்டுப்பாங்கம்மா….” திரியேகன்தான் சொன்னார். ஹான் எனப் பார்த்தாள் சங்கல்யா…. “அப்றம் லவ் மேரெஜ்…” அரண் சொல்லிய விதம் இவளுக்கு பிடித்தது. அவனுக்கு சுகவி மேல் உள்ள அன்பை இவளால் உணர முடிவது போல் ஒரு உணர்வு.

“அதெப்டி?”

சின்னதாய் சிரித்தான் அரண். வாட்சைப் பார்த்தான். “இப்ப ரொம்ப லேட்…நாளைக்கு கதை கேட்கனும்னு தோணிச்சுன்னா ஈவ்னிங் ஃப்ரீயா இருக்கப்ப பேசலாம்…”

‘குட் நைட்” சொல்லிவிட்டு கிளம்பி வந்துவிட்டாள் சங்கல்யா.

அரணும் திரியேகனும் பழகும் விதம் அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது , பிடித்திருக்கிறது. இன்னுமாய் அவர்களைப் பற்ரி தெரிந்து கொள்ள ஒரு க்யூரியாசிட்டி….ஆனால் இவ்வளவு தூரம் அவளிடம் பேசியதே அதிகமல்லவா?

இவங்களுக்கு இவ இங்க உண்மையிலேயே எதுக்கு வந்தான்னு தெரிய வர்றப்ப எப்டி இருக்கும்?

எப்ப விடியும்? எப்ப வருவான் ஜோனத்? அவன்ட்ட போய் இதையும் புலம்பனும்…

ஆனால் மறுநாள் அன்பரசி கொடுத்த மென் ஆரஞ்சு வர்ண புடவையும் சில நகைகளையும் அணிந்து எளிமையான அலங்காரத்தில் அரண் வீட்டிலேயே நடக்கவிருக்கும் சின்ன ஃபங்க்ஷனுக்கு என சங்கல்யா தயாராகி வரும்போதுதான் பார்வையில் பட்டான் ஜோனத். சந்தன நிற ஷெர்வானியில் அவன். கூட்டம் என்று அரண் குடும்பத்தையும் அன்பரசியையும் தவிர யாருமில்லைதான். ஆனால் விழா அலங்காரம் படுதாம்தூம்.

ஜோனத் அருகில் செல்ல செல்ல ஏனோ யாரையும் எதையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை அவளால். குற்ற மனப்பான்மை. எப்பொழுது முடியும் இது என்றிருந்தது அவளுக்கு. மாலை அணிவித்து இருவரையும் மோதிரம் மாற்றிக் கொள்ள சொன்னார்கள். ஃபோட்டோக்கள் பளிச் பளிச்…

அவன் அணிவிக்கும் மோதிரம் வாங்கிக்கொள்ள நீட்டிய இவள் விரல் நடுங்குகிறது. மெல்ல இவள் விரலைப் பற்றி அதனிலும் மென்மையாய்  மோதிரத்தை அணிவித்தான். முதன் முதலாய் இவள் சம்மதத்துடன் ஓர் ஆண் தொடுகை.

கண்ணில் நீர் கட்டி அவன் நீட்டிய விரலில் கொட்டுகிறது ஒரு சொட்டு. இவள் அவனுக்கு அணிவித்த மோதிரமும் ஏறுகிறது அதேநேரம் அவ்விரலில்.

“உன் ஆன்ட்டி பார்க்காங்க…..” சிறு குரலில் சொன்னான் ஜோனத். அடுத்து அவனுடன் அமர்ந்து சாப்பிட சொன்னார்கள். ஒரு வாய் உணவை கூட உண்ண முடியவில்லை அவளால்.

“நீ சாப்டாம இருக்றதால எதுவும் மாறிடப் போறது இல்ல…ப்ளீஸ் தயவு செய்து சாப்டு….ப்ரியாணி முடியலைனா கர்ட் ரைஸ்ஸாவது சாப்டு….”

பெயருக்கு ரெண்டு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டாள். “ப்ளீஸ் என்ன சீக்ரமா ரூம்க்கு போக விடுங்களேன்…” அடுத்த ஐந்தாவது நிமிடம் தன் ரூமில் போய் அடைந்தாள். கட்டிலில் போய் விழுந்தவள் எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தாளோ….?

அவள் மொபைல் சிணுங்குவது காதில் விழ மெல்ல அதை எடுத்து காதில் வைத்தாள்.

“நான் தான்மா அனவரதன் பேசுறேன்….என் பொண்ண பத்தி எப்ப எதை நீ மீடியாவுக்கு கொண்டு போனாலும்,  இந்த எங்கேஜ்மென்ட் ஃபோட்டோவும் நியூஸும் மீடியாவுக்குப் போகும்….அதை ஞாபகம் வச்சுகிட்டு ஒழுங்கா இருந்துக்கோ….உன் மேல ஒரு செக் வைக்க சொல்லிருந்தேன் ப்ரபுட்ட…அவன் இவ்ளவு ஸ்மார்ட்டா இருப்பான்னு நான் நினைக்கலை….இப்போதான் எனக்கு முழு நிம்மதி….”

உடைந்து உறைந்து போனாள் அவள். ஆக எல்லாம் இதுக்குத்தானா? எத்தனை அலங்காரம் எத்தனை ஃபோட்டோஸ்? அவன் அம்மாவை தூண்டிவிட்டு இவளை இப்டி ஏமாத்திட்டானே….வெகு காலத்திற்குப் பின்பு கதறி அழுதாள் சங்கல்யா.

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 7

Leave a Reply