நனைகின்றது நதியின் கரை 6 (6)

“இப்போ அனவரதன் சாரும் வல்லராஜனும் மிரட்டுறாங்க …அதான் இங்க வரவேண்டியதாயிட்டு…நீங்க அனவரதன் சார்ட்ட சொல்லி என்ன இதுலருந்து ரீலீவ் செய்து விடமுடியுமா ப்ளீஸ்….” முதன் முறையாக நம்பிக்கையோடு ஒரு ஆணிடம் உதவி கோருகிறாள் சங்கல்யா.

“ம்…ட்ரை பண்றேன்பா…” உனக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறனாம் சிக்‌ஸர் கேர்ள். செய்துட்டு வந்து சொல்றேன். மனதிற்குள் தன் ஆளுக்கு உறுதி கொடுத்தான் அவன்.

“தேங்க்ஸ் ஜோனத்…..இப்ப உள்ள போவமா…?”

சிக்கல் எல்லாம் தீர்வது போல் ஒரு உணர்வு சங்கல்யாவிற்குள். ஆனால் அதைவிடப் பெரிய சிக்கலினுள் சென்று மாட்டிக் கொண்டிருக்கிறாள் என அப்பொழுது தெரியவில்லை அவளுக்கு.

ன்று இரவு உணவுக்குப் பின் இவளுக்காய் ஒதுக்கப்பட்ட அறைக்குள் தனக்கு திடீரென முளைத்திருந்த உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சங்கல்யா. கதவை தட்டும் சத்தம்.

“யாரு…?”

“நான்தான்மா….” அன்பரசியின் குரல்.

“வாங்க ஆன்டி”

அவசர அவசரமாக கதவைத் திறந்துவிட்டாள். அவரைப் பார்க்கவே கூசுகிறது இவளுக்கு…சீக்கிரம் உண்மையை சொல்லிவிட வேண்டும்.

சில நிமிட இயல்பான உரையாடலுக்குப் பின் விஷயத்திற்கு வந்தார் அவர்.

“உனக்கு என் ஹெல்த் பத்தி நல்லா தெரியும்தானே லியாமா?”

“என்னாச்சு ஆன்டி…? இப்போ எதுவும் முடியலையா..? இங்க பக்கத்துலயே கார்டியாலஜிஃஸ்ட் உண்டு….” பதறினாள்.

“அதுக்கில்லமா….இப்ப ஒன்னும் புதுசா எதுவும் இல்ல….இது வேற…இன்னும் எவ்ளவுநாள் நான் இருப்பேன்னு தெரியலைமா….”

“என்ன ஆன்டி நீங்க…..இப்டில்லாம் பேசிகிட்டு….நூறு வருஷம் இருப்பீங்க நீங்க….” அவசரமாக அவர் கரத்தைப் போய் பிடித்துக் கொண்டாள்.

கில்டி கான்ஷியஸ் இப்போது கத்தியெடுத்து  ஜிங்க் ஜிங்க் சா என சுத்தி ஆடியது….இவர்ட்ட போய் பொய் சொல்லி வச்சுருக்கியே

”எனக்கு ப்ரபுவோட மேரேஜ போறதுக்குள்ள பார்க்கனும்னு ஆசை…. நானும் போய்ட்டா அவன் தனி ஆளா நின்னுடுவானேமா….”

“அப்டில்லாம் ஒரு நிலமை அவருக்கு வராதுமா…” உணர்ந்ததைச் சொன்னாள்.

“இவ்ளவுநாள் எத்தனையோ பொண்ணு பார்த்துட்டேன் …ஆனா அவனுக்கு என்னமோ யாரையும் பிடிச்சதே இல்லை…பட் உன்னைதான் அவனுக்கு பிடிச்சிருக்குது….”

‘ஐயோ இதுக்கு நான் எப்டி எக்ஸ்‌பிரெஷன் கொடுக்கனும்னு கூட எனக்கு தெரியலையே…’ மனதிற்குள் புலம்பினாள்.

“அவன் முடிவுல எனக்கு ரொம்பவுமே சந்தோஷம்தான்…”

ஈ ‘இதுக்குப் பேரு சிரிப்பான்னு கேட்றாதீங்க ஆன்டி’ மனதுக்குள் கெஞ்சினாள்.

“ஆனா உடனே மேரேஜ் செய்தா என்னனு கேட்டா, நான் ரெடிதான் அவளுக்குத்தான் டைம் வேணும்னு சொல்றான்….”

‘அடப்பாவி இப்டியா பழியத்தூக்கி என் மேலப் போடுவ…’ உதட்டிலிருந்த ஈ (சிரிப்புதான்)  ஓடிப் போயிருந்தது.

“எனக்காக கொஞ்சம் சீக்கிரம் செய்துக்க கூடாதா லியாமா..?”

என்ன சொல்வாள் இதற்கு.?

பே பே என முழி

“சரி என்ட்ட சொல்லமுடியாதபடி வேற எதுவும் இருக்கும் போல….” அவரின் முகமும் மனமும் சோர்வது இவளுக்குத் தெரிகிறது.

“ஆனா குறஞ்சபட்சம் எங்கேஜ்மென்ட் கூட வேண்டாம்றது நல்லா இல்லமா…அதையாவது பார்ப்பேன்ல”

பரிதாபமாய் முழித்தாள்.

“என்ன ப்ரச்சனை லியாமா?”

தெய்வமே கூரைய பிச்சுகிட்டு வந்து கூட்டிட்டுப் போய்டேன்….மனதிற்குள் மன்றாட்டு…

“அது….வந்து….”

“இப்டி அரண் வீட்லனாலும் நீங்க ரெண்டு பேரும் பார்த்துகிறது மீடியாவுக்கு போகாமலா இருக்கும்?”

இப்டி வேற ப்ரச்சனை இருக்குதா, பய நினைவுடன் எச்சில் விழுங்கினாள்.

இவள் முகம் சுருக்கியவிதம் அவருக்கு எப்படி புரிந்ததோ?

“உனக்கு உண்மையிலே ப்ரபுவ பிடிக்கலையோ…?” அவர் முகம் காண்பித்த வலிக்கு இவள் என்ன பதிலை சொல்வாள். மனகண்ணில் ஜோனத்தின் உருவம்.

“அப்டில்லாம் இல்ல ஆன்டி….”

அன்பரசிக்கு இந்த பதில் போதுமானதாய் இல்லை போலும். ஆழமாய் இவளைப் பார்த்தார்.

அவர் பார்வை தாங்காமல் வாய் சொல்கிறது “அவங்களப் பிடிக்கும் ஆன்டி…..ரொம்பவே” அமில அலை அள்ளி எறிந்தது பெண்மனது. இப்பதான் பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு வந்த…அதுக்குள்ள திரும்பவும் வந்து இப்டி பொய் சொல்றியே….?அதுவும் யார்ட்ட எப்படிபட்ட ஒரு பொய் சொல்லிகிட்டு இருக்க…..?கோடி குத்துகள் மனம் முழுவதும்.

ஆனால் ஆழ புதைந்திருந்த அடிமனதிற்குள் நுழையக் கூட இல்லை அந்த அலை அமிலம். உள்ளாடியது ஒரு ஜீவ உணர்வு. நீண்ட நெடும் இரவில் அவள் அறியா ஓர் விடியல்.

“அப்படின்னா நாளைக்கு எங்கேஜ்மென்ட்…அவனுக்கு இஷ்டம் இருக்குது உனக்காகத்தான் யோசிக்கான்….உனக்கும் பிடிச்சிருக்குது…பிறகென்ன…?” இவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சென்றுவிட்டார்  அன்பரசி.

அடுத்தென்ன? படுக்கையில் உறங்காமல்  உருண்ட படி இவள். மொபைல் இருந்திருந்தால் நிச்சயம் அவனை அழைத்திருப்பாள். இத எப்டி சமாளிக்க போறான்? ஜோனத் வந்து என்ன சொல்லி திட்டுவான்?

அவனின் ஒவ்வொரு திட்டும் நினைவு ஊர்வலம். சரியான பச்சமிளகா பார்ட்டி….ஆனாலும்…..இட் ஹெல்ப்ஸ்….

இவள் நெற்றி பட்டதும் அவன் சட்டென உருவிய கை ஞாபகம் வருகிறது. என்னயப் பார்த்தா கேவலமாதான தோணும் அவனுக்கு?

இன்னும் கொஞ்ச நேரம் உருண்டவள், எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தாள்.

அடுத்த பக்கம்